புதன், 19 ஆகஸ்ட், 2020

There was nothing before the big bang. Everything came after
the big bang. Space and time are not created by god.
God is the latest entry in the time line. God is after all,
a mental concept. It is a social construction and does not
have any physical existence. God is a not a physical reality.

God does not form part of nature. The humanity may have some
uncertainties in defining or understanding space and time.
So what? Does it mean that God does exist? 
In what way one can link God to the space and time?
------------------------------------------------------------

kadavulin


கடவுளின் பிறப்பும் இறப்பும்!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கடவுள் இறந்து விட்டார் என்று அறிவித்தார் ஜெர்மன்
தத்துவஞானி நீட்சே (Friedrich Nietzsche). ஆக, கடவுளின்
இறப்பு அறிவிக்கப் பட்டு விட்டது.

கடவுளுக்கு இறப்பு உண்டு என்பதன் பொருள் அவருக்குப்
பிறப்பும் உண்டு என்பதாகும். ஆயின் கடவுளின்
பிறப்பு எப்போது நிகழ்ந்தது? அது அறிவிக்கப்
பட்டுள்ளதா? பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனால்
அறிவிக்கப் படவில்லை.

எனவே கடவுளின் பிறப்பை அறிவிக்கும் பெரும்
பொறுப்பை நியூட்டன் அறிவியல் மன்றம் ஏற்றுக்
கொண்டுள்ளது. விரைவில் அறிவிப்பேன்.

1985ல் நட்சத்திரங்களுக்கு மனிதர்களை போலவே
பிறப்பும் இறப்பும் உண்டு என்று சொன்னேன்.
பல கூட்டங்களில் இந்தக் கருத்தை எடுத்துச்
சொன்னேன். அப்போதுதான் சுப்பிரமணியம்
சந்திரசேகர் இயற்பியலில் நோபல் பரிசு வாங்கி
இருந்தார். The birth and death of stars என்பதுதானே
அவரின் ஆய்வு!

ஆனால் நட்சத்திரங்களுக்குப் பிறப்பு இறப்பு உண்டு
என்று நான் சொன்னபோது, மக்கள் அன்று அதை
ஏற்கவில்லை. இன்று எல்லோரும் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.

அதே போல, கடவுளின் பிறப்பு இறப்பை இவ்வுலகம்
ஏற்றுக் கொள்ளும். ஏற்றுக் கொள்ளுவதைத்  தவிர
அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?
****************************************************
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக