திங்கள், 24 ஆகஸ்ட், 2020

டாக்டர் மன்மோகன் சிங்கின் IQ.
--------------------------------------------------
ஒரு நிபுணர் என்ற முறையில் அவரும் கணிசமான
IQ உள்ளவர்தான்; என்றாலும் அவர் ஒருபோதும் 120ஐ
நெருங்கியதில்லை. அவரின் IQவின் உச்சத்தை
123 அணுசக்தி ஒப்பந்தத்தின்போது நாடு உணர்ந்தது.
இந்த ஒப்பந்தம் வெற்றி பெறாமல் போனால், தமக்கு
பிரதமர் பதவி தேவையில்லை என்பதை பாசாங்குகள்
ஏதுமின்றி தெள்ளத் தெளிவாக நாட்டுக்கும்
சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் உணர்த்தினார்.
அந்த நேரத்தில் அவரை நியூட்டன் அறிவியல் மன்றம்
கைகூப்பி வணங்கியது.

ஒரு பொருளாதார நிபுணரின் IQஐக் கொண்டிருப்பவர்
என்ற முறையில் மதிப்புக்குரிய டாக்டர் மன்மோகன்சிங்
அவர்கள் IQ = 116 என்ற சிறப்பு அந்தஸ்துடன் வீற்றிருக்கிறார்.
அவருக்கு நியூட்டன் அறிவியல் மன்றம் வணக்கம்
செலுத்துகிறது.
===============================================

இந்தி ஒரு IMPOTENT மொழி. எனவே இந்தி என்னும்
பலவீனமான மொழியால் தமிழுக்கு பாதிப்பை
ஏற்படுத்த முடியாது.
ஆனால் ஆங்கிலம் வல்லமை வாய்ந்த மொழி.
ஆங்கிலத்தால் தமிழை அழிக்க முடியும்.
சமஸ்கிருதமோ அல்லது இந்தியோ தமிழை
அழிக்க இயலாது. ஆனால் ஆங்கிலம் தமிழை
அழித்து விடும். இதுதான் உண்மை.

புதிய கல்விக் கொள்கை இரண்டாவது
கல்வியாண்டில்தான் செயல்பாட்டுக்கு வரும்.
அப்படி வரும்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களின்
பெரும் போராட்டம் நடக்கும். அதையெல்லாம் மீறி
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்
படுத்துவது கடினம்.


அரசும் கல்வித் துறையும் ஆசிரியர்களை புதிய கல்விக்
கொள்கையின் அமலாக்கத்தில் ஒத்துழைக்க
வைக்க வேண்டும். இது கல்வித் துறையின் கடமை.
அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் ஆசிரியர்கள்
10 சதம் என்ற அளவில் உள்ளனர். மீதி 90 சதத்தில்
30 சதம் பேர் சராசரிகள். அவர்கள் தங்களின் கடமையைச்
செய்தாலே போதும். திறமையற்றவர்கள் எவ்வித
எதிர்ப்பும் இல்லாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.
இப்படித்தான் நடைமுறைப் படுத்த முடியும். 









    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக