திங்கள், 10 ஆகஸ்ட், 2020

டாக்டர் அம்பேத்கார் ஒருபோதும் இந்தியை
உயர்த்திப் பிடிக்கவில்லை. சமஸ்கிருதத்தையே
இந்தியாவின் ஆட்சிமொழியாகக் கொண்டு வர
வேண்டும் என்று அம்பேத்கார் பாடுபட்டார்.
ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார்.
மகாத்மா காந்தியின் பிடிவாதத்தால்தான்
இந்தி ஆட்சிமொழி ஆனது. 

இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு மொழிதான்
ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பதில்
அம்பேத்கார் உறுதியுடன் இருந்தார் அரசமைப்புச்
சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள
(தற்போது இதில் 22 மொழிகள் உள்ளன) அத்தனை
மொழிகளையும் ஆட்சிமொழிகள்  ஆக்கவோ
அவற்றை அங்கீகரிக்கவோ டாக்டர் அம்பேத்கார்
விரும்பவில்லை. 


டாக்டர் அம்பேத்கார் சமஸ்கிருதம் நன்கு கற்றவர்.
அதனால் அவர் சமஸ்கிருதத்தின் மகிமையை
கற்று உணர்ந்து இருந்தார். எனவே அவர் 
சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக வாதிட்டார். 
இந்துத்துவம் பேசுபவர்களில் எத்தனை பேருக்கு
சமஸ்கிருதம் தெரியும்? டாக்டர் அம்பேத்காருக்கு
இருந்த சமஸ்கிருதப் புலமையில் ஒரு சதவீதமாவது
அநேக இந்துத்துவர்களுக்கு இல்லையே!

எனவே டாக்டர் அம்பேத்கார் தம் சுயசிந்தனையில்
வந்தடைந்த முடிவுகளுக்காக அவர் இந்துத்துவத்தின்
ஆதரவாளர் என்று கூற இயலாது. அரசமைப்புச்
சட்டத்தை எழுதுகிற அந்தக் காலத்தில் (1947-1949)
இந்துத்துவர்கள் யாரும் அம்பேதகர் முன்மொழிந்த
சமஸ்கிருதத்துக்கு ஆதரவு அளிக்கவில்லையே!
மகாத்மா காந்தியோடு சேர்ந்து கொண்டு
தாலியறுத்த கேடுகெட்ட இந்தியைத்தானே
ஆதரித்தார்கள்!!
--------------------------------------------

ப சிதம்பரம் இந்தியில் பேசும் வீடியோ!
-------------------------------------------------------------
மிகவும் அழகாக இந்தியில் பேசுகிறார் ப சிதம்பரம்!
மோடியின் உச்சரிப்பை  விட பசி அவர்களின் உச்சரிப்பு
சூப்பர்!
நான் டெல்லி சென்றபோது ப சித்தமரம் இந்தியில்
உரையாடுவதை, இந்தியில் பேசுவதை இந்த இரு
செவிகளால் கேட்டிருக்கிறேன்.

சிதம்பரம் அவர்களே,
தங்களின் IQ 120.
94 IQ  உள்ள தற்குறிப்பெண் கனிமொழியின்
இழிந்த ஸ்டன்ட் உங்களுக்கு எதற்கு?

நீங்கள் இந்தியில் பேசிய வீடியோ ஆயிரக்
கணக்கில் உள்ளது.

பல பத்தாண்டுகளுக்கு முன்பு, தாங்கள் ராஜீவின்
அமைச்சரவையில் ஊழியர் நலன் துறை
(Dept of Personnel and training) அமைச்சராக இருந்தபோது,
தூர்தர்ஷனில்  குறை தீர்ப்புக்கான அமைச்சர் பதில்
என்ற நிகழ்ச்சியில், இந்தியில் கேள்வி கேட்ட
ஊழியர்களுக்கு இந்தியிலேயே பதில்
சொல்லி இருக்கிறீர்கள். அந்த வீடியோக்கள்
அப்போது சென்னை சாஸ்திரி பவனில்
ஒளிபரப்பப்பட்டன. அவை இன்னும் தூர்தர்ஷனின்   
archiveல் உள்ளன.

யார் நினைத்தாலும் நீங்கள் இந்தியில் பேசுவதை 
நூற்றுக் கணக்கான வீடியோக்கள் மூலம்
நிரூபிக்க முடியும். ஆனால் நீங்கள் பேசிய பொய்
அரை வினாடி கூட நிற்காது.
----------------------------------------------------------------------------


22 மொழிகளையும் அலுவல் மொழிகளாக
அதாவது ஆட்சிமொழிகளாக (official languages)
ஆக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய
உள்ளன. இதில் இந்த எண்ணிக்கை 22உடன்
நிற்காது. காலப்போக்கில் 30, 40 என்று ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் காலத்தில், அவர்
14 மொழியைத்தான்  8ஆவது அட்டவணையில்
வைத்தார். இன்று 22. நாளை 30.
நாளை மறுநாள் . அப்புறம் 50.
இதெல்லாம் சரி வராது.

மொழிப்பிரச்சினை தீர்வதை யாரும் விரும்பவில்லை.
அது தீர்ந்து விட்டால், அவர்களுக்கு பிழைப்புக்கு
வழி இல்லாமல் போய் விடும். ஆளும் வர்க்கத்துக்கு
மொழிப்பிரச்சினை என்பது ஒரு பாலைவனப்
பசுஞ்சோலை (oasis). பிற விஷயங்களில் இருந்து
மக்களின் கவனத்தைத் திருப்பி, அவர்களை
முட்டாள் ஆக்க மொழிப்பிரச்சினை நன்றாகப்
பயன்படும். எனவே மொழிப்பிரச்சினை தீர்வதை
ஆளும் வர்க்கமும் சரி, பிழைப்புவாதிகளும் சரி
விரும்ப மாட்டார்கள்.



திணிப்போம் திணிப்போம்
இந்தியைத் திணிப்போம்!
மார்க்சிஸ்ட் வெங்கடேசன் தலைமையில்
இந்தியைத் திணிப்போம்!
இந்தியைத் திணிப்போம்!

வேண்டும் இங்கே கேந்திரியா!
கேந்திரியா வித்யாலயா
வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்! 

தமிழ் ஒழிக!
இந்தி வாழ்க!


லெனின் முன்வைத்த தீர்வுதான் நமக்குப் 
பொருந்தும் ஒரே தீர்வு என்று பலமுறை
சொல்லி இருக்கிறேன். விரிவான கட்டுரை
எழுதினால்தான் பயன் இருக்கும். எழுதுகிறேன்.
பொறுத்திருங்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக