சனி, 1 ஆகஸ்ட், 2020

தமிழ் மீடியத்தை எதிர்க்கும் மெட்ரிக் லாபி!
வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கை வரையறுத்துள்ள
தமிழ் மீடியம் அடுத்த கல்வியாண்டில் இருந்து
நடைமுறைக்கு வரும். இதற்கான மத்திய அரசின்
உத்தரவு அதன்படி பிறப்பிக்கப் படும் என்று செய்திகள்
கிடைத்துள்ளன. கொரோனா காரணமாக பல்வேறு
பரிந்துரைகளை இந்தக் கல்வியாண்டு முதற்கொண்டே
நடைமுறைப் படுத்த இயலாது என்கிறது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் 1 முதல் 5 வகுப்பு வரை அடுத்த
கல்வியாண்டு முதல் தமிழ் மீடியம் மட்டுமே உண்டு.
இங்கிலீஷ் மீடியம் என்பதற்கு அனுமதி கிடையாது.
அதே போல, அந்தந்த மாநிலங்களில் மாநில மொழி
எதுவோ அதில்தான் கல்வி கற்றுத் தரப்படும்.
அதாவது மாநில மொழிகளே பயிற்றுமொழிகளாக 
இருக்கும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனிமேல்
5ஆம் வகுப்பு வரை இங்கிலீஷ் மீடியம் கிடையாது.

இதை மோடி அரசால் அடுத்த கல்வியாண்டு முதல்
நடைமுறைப் படுத்த முடியுமா? ஒருநாளும் முடியாது
என்று அடித்துக் கூறுகிறேன்.

மெட்ரிக் பள்ளி அதிபர்கள், கல்வித் தந்தைகள்,
ஹோல்சேல் அடிப்படையில் நாடு முழுவதும்
இங்கிலீஷ் மீடியம் பள்ளி நடத்தும் பெரிய பெரிய
கல்வி நிறுவனங்கள், அந்நிய நிதி பெறும் என்ஜிஓக்கள்
ஆகியோர் வெறித்தனமாக தாய்மொழிவழிக் கல்வியை 
எதிர்ப்பார்கள்.

இங்கிலீஷ் மீடியத்துக்கு மூடுவிழா என்பதை இந்த
ஆங்கில மோகம் பீடித்த முதலாளித்துவக் கும்பல்
ஒருபோதும் ஏற்காது. இந்த மெட்ரிக் லாபி மிகவும்
சக்தி வாய்ந்த லாபி ஆகும்.

மெட்ரிக் லாபி என்பது உள்ளூர் லாபி மட்டுமல்ல,
மாநில அளவிலும் அகில இந்திய அளவிலும் செயல்படும்
சக்தி மிக்க லாபி.ஆகும். சர்வதேச அளவில் இருந்து
இந்த லாபிக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். தேவைக்கு
மேற்பட்ட நிதி உதவியும் பிற வகை ஆதரவும் கிடைக்கும்.

இந்தியாவில் ஆங்கிலத்தை ஒழித்துக் கட்டுகிறார்கள்
என்று சர்வதேச அளவில் பெரும் பிரச்சாரம் நடக்கும்.
ரிட்டயர்டு ஆன அமெரிக்க அதிபர்கள் ஆங்கிலத்துக்கு
ஆதரவான மொழிக்கொள்கையை நீக்கக் கூடாது என்று
இந்தியப் பிரதமருக்கு வேண்டுகோள் விடுப்பார்கள்.

இங்கிலீஷ் மீடியமே நீடிக்க வேண்டும் என்ற கருத்துக்கு
இந்தியாவின் 28 மாநிலங்களிலும் தமிழ்நாட்டில்தான்
பெரும் ஆதரவு உண்டு. தமிழ் மீடியத்தை எதிர்ப்பதில்
தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. மெட்ரிக்
பள்ளி அதிபர்களின் பணம் பாதாளம் வரைக்கும்
பாய்கிறது. போலியான தமிழ் தேசிய அமைப்புகளை
நடத்தும் பல்வேறு ஆசாமிகள் மெட்ரிக் லாபியிடம்
காசு வாங்கி விட்டார்கள்.

இதுவரை 5ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியம் என்ற
பரிந்துரையை நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே ஆதரித்து உள்ளது. தமிழ் தேசியம் பேசும்
அமைப்புகளும் தனிநபர்களும் தமிழ் மீடியத்தை
வரவேற்கவில்லை. அவர்களை மெட்ரிக் லாபி
விலைக்கு வாங்கி விட்டது.

இந்தச் சூழ்நிலையில், நிபுணர் குழு அளித்த
பரிந்துரைப்படி, 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் மீடியம்
என்று உத்தரவிடும்படி மோடி அரசை நியூட்டன்
அறிவியல் மன்றம் கேட்டுக் கொள்கிறது.

இங்கிலீஷ் மீடியம் நீடிக்க வேண்டும் என்று லாபி செய்யும்
மெட்ரிக் பள்ளி அதிபர்களையும் அவர்களின் நேரடி மற்றும்
மறைமுக ஆதரவாளர்கலான தமிழ் துரோகிகளையும்
வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிய
நியூட்டன் அறிவியல் மன்றம் உறுதி பூண்டுள்ளது.
********************************************************

CBSE பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப் படுகிறது.
சென்னை  600 039 மகாகவி பாரதி நகர்,
சென்னை பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில்
நூற்றுக் கணக்கான பள்ளிகளில் 10ஆம் வகுப்பு வரை
தமிழ் உண்டு. 9,10 வகுப்புகளில் இரண்டு மொழி
மட்டுமே CBSE பாடத்திட்டத்தில். ஒன்று தமிழ், ஒன்று
ஆங்கிலம் என்று நடைபெறும் CBSE பள்ளிகள்
நூற்றுக் கணக்கில் உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கிடையாது.
அந்தப் பள்ளிகள் இடமாற்றலில் (transfer) சொந்த
மாநிலத்தை விட்டு வேறு மாநிலத்துக்கு வரும்
மத்திய அரசு ஊழியர்களுக்கானவை. அலகாபாத்தில்
வேலை பார்க்கும் ஊழியர் சென்னைக்கு மாற்றலாகி
வந்தால், அவருடைய பிள்ளைகள் என்ன படிப்பார்கள்?
அவர்களால் என்ன படிக்க முடியும்?



தமிழ்நாட்டில் உள்ள எல்லா CBSE பள்ளிகளிலும்
தற்போது ஆங்கில வழியில்தான் (English medium)
பாடங்கள் கற்பிக்கப் படுகின்றன. அதாவது
இங்கிலீஷ் மீடியம் மட்டுமே. இதை ஒருவர் முதலில்
தெரிந்து கொள்ள வேண்டும். 

அதே நேரத்தில் நிறைய CBSE பள்ளிகளில்
10 வகுப்பு வரை, தமிழ் ஒரு மொழிப் பாடமாகக்
கற்றுத் தரப் படுகிறது.

5ஆம் வகுப்பு வரை தமிழ் மீடியம் என்று உத்தரவு
வந்தால், அந்த உத்தரவு CBSE பள்ளிகளுக்கும்
பொருந்தும். இதில் விதிவிலக்கு கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளுக்கு மட்டுமே.

புதிய கல்விக் கொள்கை!
----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
தற்போதைய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வி
12 ஆண்டுகளாக உள்ளது. இதன் வடிவம் 10+2 =12.

புதிய கல்விக் கொள்கையிலும் பள்ளிக் கல்வி
12 ஆம் வகுப்பு வரைதான். ஆனால் இதன் வடிவம்
5+3+3+4 = 15.   

புதிய கல்விக் கொள்கையில் மூன்று வயதில் இருந்தே
கல்வி தொடங்குகிறது என்பதுதான் மிக முக்கியமான
அம்சம். 3 வயதில் இருந்து கணக்கிட்டால் 15 ஆண்டு
ஆகிறது.

முதல் கட்டம் (5 ஆண்டுகள்); 3 வயது முதல் 8 வயது வரை
Play school, LKG, UKG மற்றும் முதல் வகுப்பு,
இரண்டாம் வகுப்பு ஆகியவை முதல் கட்டத்தில் அடங்கும்.
இது foundation stage ஆகும்.

2ஆம் கட்டம் (3 ஆண்டுகள்): வயது 8 to 11.
வகுப்புகள்: 3, 4, 5.  இது preparatory stage ஆகும்.


மூன்றாம் கட்டம் (3 ஆண்டுகள்):
6, 7, 8 ஆகிய மூன்று வகுப்புகள்.
இது நடுக்கட்டம் ஆகும்.

நான்காம் கட்டம்: (4 ஆண்டுகள்):
வகுப்புகள் 9,10,11,12.

தற்போதைய structure  12 ஆண்டு (10+2).
புதிய structure: 12 ஆண்டு (5+3+4+4).

12 ஆண்டுகள் என்ற மொத்தக் கால அளவு மாறவில்லை.  
பள்ளிக் கல்வி என்பது 12 ஆண்டுகள்தான்.
**********************************************************
தற்போதைய முறையில் ஒரு குழந்தையின் கல்வி
6 வயதில் ஆரம்பிக்கிறது. புதிய முறையில் குழந்தையின்
கல்வி 3 வயதில் இருந்து தொடங்குகிறது
(Play school, LKG, UKG). பள்ளிக் கல்வியை முடிக்கும்போது
இரண்டு முறைகளிலும் படிப்பவர்கள் ஒரே வயதில்தான்
பள்ளிக் கல்வியை முடிக்கிறார்கள்.  

15 ஆண்டு என்று சொல்லும்போது, பலர் குழப்பம்
அடைகிறார்கள். பட்டப் படிப்பையும்  சேர்த்து
15 ஆண்டா என்கிறார்கள். எனவே வாசகர்கள்
புரிந்து கொள்ளும் பொருட்டு, இரண்டும் ஒன்றுதான்
என்று சொல்ல வேண்டி உள்ளது. Ignore the (Play school LKG UKG சேர்க்காமல்)
Then both are same.  . 


12 ஆண்டுகள்; 12 வகுப்புகள். இதுதான் பள்ளிக்கல்வி.
இதில் Play school, LKG, UKG ஆகியவை வகுப்புகளின்
எண்ணிக்கையில் வராது என்பதை நாம் உணர வேண்டும்.
இவற்றையும் சேர்த்தால் 15 ஆண்டு வரும் (5+3+3+4 =15).
சேர்க்காவிட்டால் 12 ஆண்டுதான்.

சுருங்கக் கூறின்,
தற்போதைய முறையிலும், புதிய முறையிலும் ஒரே
வயதில்தான் பிள்ளைகள் பள்ளிக் கல்வியை
முடிக்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியேறும் வயது
இரண்டு முறையிலும் ஒரே வயதுதான்.

பள்ளிக்கு கல்வியின்


கூத்தாடிகள், கூத்தாடிச்சிகளுக்கு வக்காலத்து
வாங்க இது இடமல்ல. மும்பையின் சினிமா உலகம்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் வசமாகிப்
பல ஆண்டுகள் ஓடிவிட்டன.

கொஞ்ச நாள் முன்புதான் தாவூது கையாட்கள்
கொடுத்த நெருக்கடியால் ஒரு நடிகர் தற்கொலை
செய்து கொண்டுள்ளார்.

புழுவினும் இழிந்த சல்மான் கான் குடிபோதையில்
கார் ஒட்டி, தெருவில் படுத்திருந்த ஏழை முஸ்லிம்கள்
பலரைக் கொன்றான். தீர்ப்பு என்ன வந்தது தெரியுமா?
சல்மான் கான் காரை ஒட்டவில்லை என்று
தீர்ப்பு வந்தது. உண்மையின் அடிப்படையில்
தீர்ப்பு வழங்க இயலுமா? அப்படி வழங்கினால்
அந்த நீதிபதியை அவரின் குடும்பத்தை தாவூதின்
ஆட்கள் விட்டு வைப்பார்களா?

எனவே ஒரு இழவும் தெரியாமல், இங்கு வந்து உளற
வேண்டாம்! நான் என்ன சொல்கிறேனோ அதுதான்
வேதம்! அதுதான் பைபிள்! அதற்கு முட்டாள்தனமாக
மறுப்புச் சொல்ல அனுமதி இல்லை.  அப்படி
மறுப்புச் சொல்லுபவர்கள் உயிர் வாழத்  தேவையில்லை.
இதில் நான் தெளிவாக இருக்கிறேன்.போங்கடா,
போய் செத்துத் தொலைங்கடா!


   




கமென்டுகள் பதிவின் நோக்கத்துக்கு ஒத்திசைவாக
இருக்க வேண்டும். இல்லையேல் திசைதிருப்பி விடும்.
அவ்வளவுதான்.

வேண்டுமென்றே திசை திருப்பும் மெட்ரிக்
அதிபர்களின் கைக்கூலிகளையும் சமாளிக்க வேண்டும்.
இந்த நேரத்தில் நமது தரப்பிலும் 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக