செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கையும் தற்குறிகளின் ஆரவாரமும்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------

புதிய கல்விக் கொள்கையானது 484 பக்கங்களைக்
கொண்டது. முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது.
இதுதான் ஒரிஜினல்.

டாக்டர் கஸ்தூரி ரங்கன் சமர்ப்பித்த புதிய கல்விக்
கொள்கை (Draft National Education Policy 2020) என்பது
484 பக்கங்களைக் கொண்டது என்று எத்தனை
பேருக்குத் தெரியும்? தமிழ்நாட்டில் ஒரு பத்துப்
பதினைந்து பேருக்கு மட்டுமே தெரியும்.

புதிய கல்விக் கொள்கையில் சில கணிதப் புதிர்கள்
உள்ளன என்று நான் சொன்னால், கேட்கிற அத்தனை
பேரும் மூர்ச்சை அடைய நேரும். ஆம், புதிய கல்விக்
கொள்கையில் தர்க்கம் மற்றும் கணிதப் புதிர்களை
(Logic and arithmetic puzzles) டாக்டர் கஸ்தூரி ரங்கன்
வைத்திருக்கிறார். என்றாலும் இந்த உண்மை அநேகமாக
எனக்கும் டாக்டர் கஸ்தூரி ரங்கனுக்கும் மட்டுமே
தெரியும்.

அரசியல் கட்சிகளின் தற்குறித் தலைவர்கள் மற்றும்
தொண்டர்கள், சினிமாக் கூத்தாடிப் பயல்கள்,
கூத்தாடிச்சிகள் ஆகியோரே தமிழ்நாட்டில் புதிய கல்விக்
கொள்கை பற்றி ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாதவர்கள்.
இவர்களில் எவரும் 484 பக்கம் கொண்ட புதிய கல்விக்
கொள்கையைப் படித்ததே இல்லை. அவர்களால்
படிக்கவும் இயலாது. இவர்களுக்கு புதிய கல்விக்
கொள்கை பற்றி கருத்துக் கூற எந்த அருகதையும்
கிடையாது.
       
புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறும்
அருகதையைப்  பெற வேண்டுமானால், கீழ்வரும்
கணிதப் புதிரை விடுவியுங்கள்.

கணிதப் புதிர்!
-----------------------
ஒரு அறை முழுவதும் இருட்டாக உள்ளது.
அந்த அறையில் உள்ள ஒரு பெட்டியில்
சிவப்பு நிறக் காலுறைகள் 10ம், நீலநிறக்
காலுறைகள் 10ம்  உள்ளன.

இந்தப் பெட்டியில் இருந்து எத்தனை காலுறைகளை
அகற்றினால், மீதியிருக்கும் காலுறைகளில்
எந்த இரண்டை எடுத்தாலும் அவை ஒரே நிறத்தைக்
கொண்டிருக்கும்?

If a drawer in a very dark room has 10 red socks and 10 blue
socks, how many socks does one need to remove from the drawer
to ensure that one has two socks of the same colour? 

வாசகர்கள் ஆங்கிலத்தில் உள்ள புதிரை மட்டுமே
கணக்கில் கொள்ள வேண்டும். அதுவே binding.

********************************************************** 

வீர சாவர்க்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை
பற்றிப் படியுங்கள். அவர் சொன்னபடியே வாழ்ந்து



1968ல் சி என் அண்ணாத்துரை அவர்கள் தமிழக
முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் இருமொழித்
திட்டம் மட்டுமே செயல்படும் ( தமிழ், ஆங்கிலம்) என்று
இயற்றினார். அச்சட்டத்தை தமிழக மக்கள் அன்று
ஏற்றுக் கொண்டு இருந்தனர்.

ராமச்சந்திர மேனன் முதல்வராக இருந்தபோது,
மெட்ரிக் பள்ளிகளை, தனியார் பள்ளிகளை
பெரிய அளவில் தமிழகத்தில் கொண்டு வந்தார்.
தனியாரின் மெட்ரிக் பள்ளிகளில், அண்ணாவின்
இருமொழித் திட்டத்துக்கு  எதிராக மும்மொழித் திட்டம்  
அனுமதிக்கப் பட்டது. இதை உணர்வுபூர்வமாகவே
அனுமதித்தார் மேனன்.

மேனன் மண்டையைப் போட்டபின், ஆட்சிக்கு வந்த
கலைஞர் தனியாரின் பள்ளிகளில் நடைமுறையில்
உள்ள மும்மொழித் திட்டத்தை ரத்து செய்யவில்லை.
மாறாக, மென்மேலும் தனியார் பள்ளிகள்
அனுமதிக்கப்பட்டு அவற்றில் மும்மொழித் திட்டம்
கொண்டு வரப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் இருமொழித் திட்டம்!
தனியார் பள்ளிகளில் மும்மொழித் திட்டம்!!
கேலிக்கூத்தான இந்த இழிந்த நிலையை
இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்களின்
ஆட்சியின்போது ஊக்குவித்தன.

இவர்களிடம் நாம் கேட்பது இதுதான்!
ஒன்று: தனியார் பள்ளிகளில் உள்ள மும்மொழித்
திட்டத்தை ரத்து செய்யுங்கள்!
அல்லது அரசுப் பள்ளிகளிலும் மும்மொழித்
திட்டத்தைக் கொண்டு வாருங்கள்.

அரசுப் பள்ளிக் குழந்தைக்கும் தனியார் பள்ளிக்
குழந்தைக்கும் இடையே ஒரு பெர்லின் சுவரை
அரசே எழுப்புவது நியாயமற்றது.

அரங்கின்றி வட்டாடும்
புதிய கல்விக் கொள்கையின் எதிர்ப்பாளர்கள்!

ரகுபதி

கொடுக்கப்பட்ட கணிதப் புதிர் பாரம்பரியமான
கணிதப் புதிர். 

இதுபோன்ற ஒரு காலுறைப் புதிரை நியூட்டன்
அறிவியல் மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு
முகநூலில் வெளியிட்டு இருக்கிறது என்பது
வாசகர்களுக்குத் தெரியும்.

எனவே வாசகர்கள் இந்தப் புதிரை
விடுவிக்க வேண்டும்..


காலுறை

Socks sum என்பது பாரம்பரியமான sum.
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கவில்லை.
அதே போல டாக்டர் கஸ்தூரி ரங்கனும்
உருவாக்கவில்லை. மிகவும் popularஆன கணக்கு
என்பதால், இதை உதாரணமாகக் கொடுத்து இருக்கிறார்
கஸ்தூரி ரங்கன்.

இது ஒரு பாரம்பரியமான sum. இதற்கு unique solution
உள்ளதா? அல்லது infinitely many solutions உள்ளதா
என்பதுதான் கேள்வி. இது indeterminate என்று
ஏற்பதற்கில்லை.


நீங்கள் ஆங்கில வெர்ஷனையே follow பண்ணவும்.
ஒரிஜினல் sum ஆங்கிலத்தில்தான் உள்ளது.
ஆங்கிலம் புரியாது என்பதற்காக நான்
தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.


உங்களின் மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானது.


நீங்கள் இயற்கையாக மொழிபெயர்க்கிறீர்கள்.
நான் ஏகப்பட்ட mental blocksஐ மண்டையில்
வைத்துக் கொண்டு திரிகிறேன்.நடைமுறை
வாழ்க்கையில் சாக்ஸ்  என்று பேசுகிறோம்;
சாக்ஸ் என்று சிந்திக்கிறோம். ஆனால் சாக்ஸ்
என்றவுடனே செயற்கையாக காலுறை என்று
என் மூளை ஒரு சொல்லை எடுத்துப் போடுகிறது.
அதன் பிறகு மூளையின் இயற்கையான
செயல்பாடு என்பது செத்துப் போய் விடுகிறது.
எனவே மொழிபெயர்ப்பு அந்த லட்சணத்தில்தான்
இருக்கும்.



சி என் அண்ணாத்துரை நேர்மையாக நடந்து
கொண்டார். சொன்ன சொல்லில் உறுதியாக
இருந்தார். தான் செத்துப் போனாலும் இந்தியை
ஒழித்து விட்டுத்தான் செத்தார். இந்திக்குக் கொள்ளி
வைத்த ஒரே மாநில முதல்வராக வரலாற்றில் அவர்
நிலைபெற்று விட்டார். 

அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம்
அவரின் நேர்மை மருந்துக்கும் இல்லையே.

இங்கே தமிழ்நாட்டில் கள்ளத் தனமாகவும்,
கொல்லைப்புறமாகவும் ராமச்சந்திர மேனன்
காலம் தொட்டு இரண்டு மொழிக்குப் பதிலாக
மூன்று மொழிகள் அனுமதிக்கப் படுகின்றன.
இது சட்ட விரோதமானது. எல்லா மெட்ரிக்
பள்ளிகளிலும் இந்தி கட்டாயம். இதற்கு சட்ட
அங்கீகாரம் உள்ளதா? இல்லையே.

    

   


திமுக இந்தியை எதிர்க்கவில்லை!
இந்தி வாழ்க!
--------------------------------------------------

காட்டியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக