ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஊழல் புரிந்த மகஇக ஆசாமிகள் யாரும்
இதுவரை கைது ஆகாமல் இருப்பதன் மர்மம்!
-------------------------------------------------------------------------
மகஇகவின் BHEL ரியல் எஸ்டேட் ரூ 100 கோடி
ஊழல் பற்றி  தமிழக அரசுக்கும் போலீசுக்கும்
ஆறு மாதத்துக்கு முன்பே தெரிந்திருந்தும்,
மகஇக ஊழல் பேர்வழிகள் யாரும்
கைதாகவில்லையே, ஏன்? இதன் உள்மர்மம் என்ன?

மொத்த ஊழல் தொகை ரூ 167 கோடி என்கிறார்
மருதையனின் முன்னாள் சகா (பார்க்க: அவரின்
முகநூல் பதிவு). இந்த 167 கோடியில் அதிகாரிகள்,
போலீஸ், கட்சியின் உயர்மட்டத் தலைமை,
ஊழலில் கூட்டாளிகள் ஆகியோருக்கு கமிஷன்
வழங்கியது போக, ரூ 100 கோடி சுவிஸ் வங்கியில்
பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. 

அநேகமாக SOC அமைப்பின் உயர்மட்டத் தலைமை
முழுவதுமே இந்த ரூ 100 கோடி ஊழலில் பங்கு
பெற்றுள்ளது என்று கேள்விப்படும் செய்திகள்
மிகவும் வருத்தம் தருகிறது.

ஊழல் தொகையைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட
தகராறே கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கும், அதன்
ஆரம்பகாலத் தலைவர்கள் வெளியேறியதற்கும்
காரணம் என்று கூறப் படுகிறது.

விஷயம் நீதிமன்றத்துக்குப் போய் விட்டது என்றதுமே
மாவட்டக் கலெக்டர் உறுதியான நடவடிக்கை எடுத்தார்.
(பார்க்க: நக்கீரன்). மகஇக ஊழல் பேர்வழிகளைக்
கைது செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டார்.

அந்நேரம் பாஜகவின் மத்தியப் பிரதேச எம்பி
ஒருவரிடம் இருந்து ஊழல் மகஇகவினரைக்
கைது செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட
அதிகாரிக்கு உத்தரவு வந்துள்ளது. கைது
செய்யப்போகும் அதிகாரி, அந்த எம்பி, அவரிடம்
கோரிக்கை வைத்து காலில் விழுந்து கெஞ்சியவர்கள்
அனைவருமே பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்
தக்கது. மகஇகவின் பார்ப்பனத் தலைமை பற்றி
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும்கூடத் தெரியும்.

போபர்ஸ் பீரங்கி ஊழலை விட மகஇகவின் ரியல்
எஸ்டேட் ஊழலில் தொகை அதிகம். இருந்தும் ஊழல்
புரிந்த மகஇக ஆசாமிகள் யாரும் இன்னும்
கைதாகவில்லை. யாரும் போலீசில் சரண் அடையவும்
இல்லை.

இந்த ஊழல் குறித்து மருதையன் என்ன கூறுகிறார்?
அப்போது அவர் கட்சியில்தானே இருந்தார்?
******************************************************


 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக