மாற்றம். முன்னேற்றம்.
1. இதுவரையிலும் ரூ 40 லட்சம் வரை ஆண்டு வருவாய் கொண்ட வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வரம்பு இப்போது ரூ 1.5 கோடி வரை உள்ள நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருபவர்கள் 1% வரி மட்டுமே செலுத்தினால் போதுமானது.
2. இப்போதுள்ள நிலவரப்படி, மொத்தம் 230 பொருட்களில், சுமார் 200 பொருட்கள் குறைந்த நிலைக்கு மாற்றப்பட்டு உடனடி அமலுக்கு வருகின்றது.
3. கட்டுமானத் துறைக்கு, குறிப்பாக வீட்டுத் துறையில் இப்போது 5% விதத்திலிருந்து 1% ஆக குறைக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருகின்றது.
4. ஜி.எஸ்.டி துவங்கிய நேரத்தில் கணக்கில் வந்த நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 65 லட்சம். இப்போது 1.24 கோடியைத் தாண்டியுள்ளது.
4. ஜி.எஸ்.டி துவங்கிய நேரத்தில் கணக்கில் வந்த நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 65 லட்சம். இப்போது 1.24 கோடியைத் தாண்டியுள்ளது.
5. ஜிஎஸ்டியில் உள்ள அனைத்துச் செயல்முறைகளும் முழுமையாகத் தானியங்கி செயல்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடி வருமானம் வரைக்கும் ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி இருந்தது. இனி 131 கோடி வரைக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு ( நூறு கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் இன்வாய்ஸில் ஸ்கேன் கோடு உருவாக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதாவது அந்த பில் விற்பவரால் போடப்பட்டு வாங்குபவருக்கு அனுப்பப்படும். அவர் அந்த குறிப்பிட்ட ஸ்கேன் கோடை வருடினால் போது அவர் கணக்கில் அந்தத் தொகை வரவு வைக்கப்படும். இது பல மாதங்களுக்கு முன்பே நடைமுறையிலிருந்து வருகின்றது. அதன் அளவு இப்போது இ வே பில் மூலமாக நடைபெறும். அதன் அளவு 131 கோடி என்கிற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது)
1. இன்று இந்திய நிதியமைச்சகம் அறிவித்த நடைமுறையின்படி வாங்குபவர் விற்பவர் இருவருக்கும் இடையே அரசின் எந்த நடைமுறைச் சிக்கலும் இருக்காது.
2. முறைப்படி பில் வழியே வர்த்தகம் நடக்கும் போது வாங்குபவர் விற்பவர் இடையே எந்த கசப்புணர்வும் வர வாய்ப்பில்லை.
3. ஒளிவு மறைவற்ற வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். அரசு அறிவித்துள்ள ஆதாயம் பெறமுடியும்.
4. கணக்கில் காட்டப்பட்ட பின்பே வர்த்தகம் நடைபெறக்கூடிய சூழல் உருவாகும்.
5. நிதியமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட காரணத்தால் எங்கும் எதற்கும் எவருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கால தாமதம் தவிர்க்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக