உண்மைகளைச் சித்திரவதை செய்யும் மருதையன்!
அற்புதம் அம்மாளாக அவதாரம் எடுத்த இழிவு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
சிறையில் இருக்கும் பேராசிரியர் சாய்பாபா, தெலுங்குக்
கவிஞர் வரவரராவ் ஆகியோரைப் பற்றி மருதையன்
ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ( பார்க்க: இடைவெளி
இணைய தளம், தேதி 3, ஆகஸ்டு 2020).
அக்கட்டுரையில் பேராசிரியர் சாய்பாபா பற்றிய
உண்மைகளை மறைத்தும், திரித்துக் கூறியும்
சாய்பாபாவுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்.
இடைக்காலப் பிணை கேட்ட சாய்பாபாவின் மனுவை
உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்கிறார்
மருதையன். தொடர்ந்து உயர்நீதிமன்றம் என்று
அடுத்தடுத்த வாக்கியங்களில் குறிப்பிடும் மருதையன்
எந்த உயர்நீதிமன்றம் என்று குறிப்பிடவே இல்லை.
படிப்போர் பலர் அது சென்னை உயர்நீதிமன்றம்
என்று நினைக்கலாம். அது உண்மையல்ல;
மும்பை உயர்நீதிமன்றம்தான் சாய்பாபாவின்
மனுவை நிராகரித்தது.
எந்த வழக்கில் பேராசிரியர் சாய்பாபா ஜாமீன் கேட்டார்
என்று மருதையன் எழுதவில்லை. மருதையனுக்கே
அது தெரியாமல் இருக்கக் கூடும். சாய்பாபா குறித்த
செய்திகள் எவையும் தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளியாவதில்லை. சாய்பாபா குறித்து தமிழ் டிவி
சானல்கள் செய்தியும் வெளியிடுவதில்லை. தமிழ்
ஊடகங்கள் குட்டி முதலாளித்துவ திராவிடக்
கசடுகளால் (Dravidian scum) நிரம்பி இருப்பதால்
மாவோயிஸ்டாகக் கருதப்படும் பேராசிரியர்
சாய்பாபாவுக்கு திராவிடக் கசடுகளிடம் இருந்து
எந்த ஆதரவும் கிடைக்காது.
இதன் விளைவாக பேராசிரியர் சாய்பாபா குறித்து
அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஆங்கில
ஊடகங்களை முற்றிலுமாகச் சார்ந்திருக்க
வேண்டியுள்ளது. இது ஆங்கிலம் நன்றாகத்
தெரிந்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை
ஏற்படுத்துகிறது. ஆனால் தமிழக "இடதுசாரி"
முகாம் ஆங்கிலத்துக்கு எங்கே போகும்?
மருதையனின் கட்டுரையைப் படிக்கும் யார் எவரும்
பேராசிரியர் சாய்பாபா ஒரு விசாரணைக் கைதியாக
சிறையில் இருக்கிறார் என்றும், தன் மீதான வழக்கில்
பிணை (ஜாமீன்) கேட்கிறார் என்றும் புரிந்து
கொள்வார்கள்.
இது முற்றிலும் தவறான புரிதல்! இப்படி ஒரு தவறான
புரிதலை வேண்டுமென்றே மருதையனும் மற்றும்
பலரும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
1) பலரும் கருதுவது போல், பேராசிரியர் சாய்பாபா
விசாரணைக் கைதி அல்ல. அவர் தண்டனைக் கைதி.
(விசாரணைக் கைதி (under trial prisoner) என்றால் என்ன?
தண்டனைக்கைதி (convicted prisoner) என்றால் என்ன?
இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரிந்து
கொள்ளுமாறு வாசகர்களை நான் கேட்டுக்
கொள்கிறேன்).
2) பேராசிரியர் சாய்பாபா ஒரு ஆயுள் தண்டனைக் கைதி
ஆவார். ஒரு வழக்கில் 2017ல் தண்டிக்கப்பட்டு
ஆயுள் தண்டனை அனுபவி த்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்ச்சிரோலி மாவட்டத்தில்
உள்ள ஒரு மாவட்ட அமர்வு நீதிமன்றம் (sessions court)
சாய்பாபாவுக்கும் இன்னும் சிலருக்கும் தண்டனை
வழங்கியது. UAPA சட்டத்தின்கீழ் சாய்பாபாவும்
அவரின் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டனர்.
3) பேராசிரியர் சாய்பாபா ஜாமீன் கோரவில்லை.
மாறாக பரோல் (parole) கோரினார். பிணை (bail)
என்பது பரந்துபட்ட ஒரு சொல். (it is a broad term).
Bail என்னும் சொல்லின் சட்ட நுணுக்கமும், அது தரும்
பல அர்த்தங்களும் பாமர மக்களுக்குத் தெரியாது.
மருதையன் போன்ற கட்டுரையாளர்கள் பாமர
மக்களை ஏமாற்றும் விதத்தில் எழுதக் கூடாது.
(Bail என்றால் என்ன? பரோல் (parole) என்றால் என்ன
என்று வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்).
4) தமது கணவர் நடராசன் இறந்ததை அடுத்து
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா
சிறிது காலம் பரோலில் வந்தார். பரோல் என்பது
சிறையில் இருந்து தற்காலிக விடுதலை என்று
பொருள். சசிகலா தண்டனைக் கைதி என்று அறிக.
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம்
திஹார் சிறையில் இருந்து வெளி வந்தார். இது
bail எனப்படும் ஜாமீன் அல்லது பிணை ஆகும்.
இது பரோல் அல்ல. ப சிதம்பரம் இவ்வழக்கில்
தண்டனைக் கைதி அல்ல. அவர் வெறும்
விசாரணைக் கைதியே.
வாசகர்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,
நீங்கள் விஷயம் தெரியாதவர்களாக இருக்கும்வரை
மருதையன் போன்றவர்கள் உங்களை ஏமாற்றத்தான்
செய்வார்கள்.
UAPA சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு ஆயுள்
தண்டனைக் கைதியான சாய்பாபாவுக்கு அவர்
கேட்டபடி 45 நாள் பரோலை மும்பை உயர்நீதிமன்றம்
வழங்கவில்லை. ஆயுள் தண்டனைக் கைதியான
ஒருவருக்கு இப்படி 45 நாள் பரோல் கிடைப்பதற்கு
வழியில்லை என்று நீதிமன்ற நடைமுறைகள்
பற்றிய அறிவு உடைய எவருக்கும் எளிதில் விளங்கும்.
பொய்கள் விரைவில் சாயம் வெளுத்து விடும்.
உண்மைகளை மக்கள் முன்னால் வைப்போம்!

ஆயுள் தண்டனை பெற்றுள்ள தண்டனைக் கைதி
பரோல் கேட்கும்போது, அதற்குரிய சமூக
அழுத்தத்தை உருவாக்கி அவருக்கு பரோலைப்
பெற்றுத் தருவோம்.
கெஞ்சி, கூத்தாடி, அழுது, குளித்து, தன்மானத்தை
விட்டு தரையில் அழுது புரண்டு பரோல் பெறுவது
மாவோயிஸ்டு அபிமானியான பேராசிரியர்
சாயிபாபாவுக்கு ஏற்றதல்ல. மருதையனும்
மற்றவர்களும் அற்புதம் அம்மாளின் லெவலுக்கு
கீழிறங்கி இழிவைத் தேட வேண்டாம்.
****************************************************
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக