வியாழன், 6 ஆகஸ்ட், 2020


ரஷ்யாவின் புரட்சிக்குப்பின் (1917-1920)
ஹோமியோபதி எதிர்ப்புச் செயல்பாடுகள்!
--------------------------------------------------------------------
1918ல் ரஷ்யாவில் தனியாரின் சொத்துக்களை
அரசுடைமை ஆக்கும் வேலையில் போல்ஷ்விக்குகள்
ஈடுபட்டு இருந்தனர். ஹோமியோபதி பற்றி
அவர்களுக்கு எதுவும் தெரிந்திராத போதிலும்,
பணக்காரச் சோம்பேறிகளின் அர்த்தமற்ற
கேளிக்கைக்கு இடமளிப்பதே ஹோமியோபதியும்
அதன் நிறுவனங்களும் என்று போல்ஷ்விக்குகள்
கருதினர்.

கல்விக்கான மக்களின் கமிசார் (People's Commissar)
வி லுனாசார்ஸ்கி (V Lunacharsky) என்பவர்
(முன்னர்க் கூறிய) ஹோமியோபதி மருத்துவமனையை
பெட்ரோகிரேடு மகளிர் மருத்துவ நிலையத்துடன்
இணைத்தார். ஹோமியோபதி மருத்துவமனை
அகற்றப்பட்டு எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்பட்டு
அம்மருத்துவமனை எக்ஸ்ரே மருத்துவமனையாக
மாற்றப் பட்டது.  ஹோமியோபதி மருத்துவர்கள்
விரட்டப் பட்டனர்.  

மருத்துவமனையின் வளாகத்தில் இருந்த இரண்டாம்
அலெக்ஸ்சாண்டரின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு
எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ரியன்ட்ஜென்னின் சிலை
அங்கு நிறுவப்பட்டது. அந்த மருத்துவமனை இருந்த
தெருவே ரியன்டஜன் தெரு என்று பெயர் மாற்றப்
பட்டது.
------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக