இதில் எல்லாம் தகவல் பிழை இருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் தத்துவார்த்தப் பிழையே.
கட்சியில் இருந்து வெளியேறிய மருதையன் எழுதி
இருக்கிறார்; நல்லது. அவரே கட்சியில்
இருந்திருந்தால் எழுதி இருப்பாரா? வினவு இணைய
தளத்தில் பேராசிரியர் சாய்பாபா குறித்து ஏதேனும்
கட்டுரை உள்ளதா? இல்லை. ஏன் இல்லை என்று
சிந்தித்து விடை காண்பதே அரசியலில் அக்கறை உள்ள
எவர் ஒருவரின் கடமை ஆகும். நிற்க.
மருதையனுக்கோ சாய்பாபாவை ஆதரிப்பதாக
வேஷம் போடும் பலருக்கோ சாய்பாபா வழக்கு என்ன
என்பதே தெரியாது. எனவே அவர்கள் அற்புதம்
அம்மாளைப் போல, தானும் இழிந்து, சாய்பாபாவையும்
இழிவுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
சாய்பாபா ஆயுள் தண்டனைக் கைதி என்ற
உண்மை நான் சொல்லாமல் இங்குள்ள 99.99 சதம்
பேருக்குத் தெரியாது.மனச்சாட்சியோ குறைந்த பட்ச
நேர்மையோ உள்ள எவரும் ஒப்புக் கொள்ளும்
உண்மை இது.
மருதையன் அறியாமை காரணமாக எழுதுகிறாரா
(அதாவது விஷயம் தெரியாமல் அல்லது உரிய
தரவுகளை படித்துப் பார்க்காமல்) அல்லது
தெரிந்து கொண்டே எழுதுகிறாரா என்பது
எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டில் எது
காரணமாக இருந்தாலும் அது ஏற்கக் கூடியதல்ல.
வினவு இணையதளத்தில் பேராசிரியர் சாய்பாபா
பற்றிய ஒரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
அந்தக் கட்டுரை வந்ததும் எனக்குச் சொல்லுங்கள்.
நான் மாரியாத்தா கோவிலுக்குச் சென்று மொட்டை
அடித்துக் கொள்கிறேன்.
மகஇக (மக்கள் கலை இலக்கியக் கழகம்) என்று
அமைப்பின் பெயரைத் தெளிவாக எழுதி இருக்கிறது
நக்கீரன். இந்த 100 கோடி ஊழலைச் செய்தவரின்
பெயர், வேலை பார்த்த நிறுவனம் என்று எல்லாச்
செய்திகளையும் விலாவாரியாக வெளியிட்டு
இருக்கிறது நக்கீரன்.
மருதையனோ நானோ SSLC எழுதிய காலத்தில்
SSLC தேர்வு எழுதியவர்கள் தமிழ்நாட்டில்
மொத்தமே ஐம்பதாயிரம் பேர்தான். இன்று 10 லட்சம்
பேர் ப்ளஸ் டூ எழுதுகிறான்.
1 லட்சம் பேருக்கு மேல் பொறியியல் (BE, B.Tech)
படிக்கிறான். 3 லட்சம் பேர் வரை கலை அறிவியல்
பட்டங்களைப் படிக்கிறான்.
இந்தச் சூழ்நிலையில் தன்னை எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் என்று கருதிக் கொண்டு, தப்புத் தப்பாக
மருதையன் கட்டுரை எழுதுவார் என்றால்,
அதை சகித்துக் கொண்டு போக இன்றைய
இளைஞர்கள் தயாராக இல்லை.
He is misguiding the society. பேராசிரியர் சாயிபாபா ஓர்
ஆயுள் தண்டனைக் கைதி என்ற உண்மைதான்
அவரைப் பற்றிய விஷயங்கள் எல்லாவற்றிலும்
தலையாயது; அதிமுக்கியமானது. ஒரு பரோல்
கோரிக்கையும் ஒரு ஜாமீன் கோரிக்கையும்
தன்மையில் வேறுபட்டவை. ஜாமீன் (bail), பரோல்
இரண்டில் ஜாமீனே எளிதில் கிடைக்கக் கூடியது.
Bail is the rule and jail is the exception என்பதுதான் சட்ட
நெறிமுறை என்பார் மறைந்த நீதியரசர் கிருஷ்ணய்யர்.
ஆனால் பரோலுக்கு அப்படி எதுவும் கிடையாது.
வரவரராவ் ஜாமீன் (bail) கேட்கிறார். அவரைப் பற்றிய
கட்டுரையில் பரோல் கேட்கும் சாய்பாபாவைப்
பற்றி எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கும்.
எழுதக் கூடாது என்று இல்லை. வாசகர்களின்
நிலை என்ன என்று உணர்ந்து அதிலிருந்து
எழுத வேண்டும். இது மருதையனின் கவனத்திற்குச்
செல்லட்டும்.
-------------------------------------------------------------------
கட்சியில் அண்மையில் வெடித்த பிளவு,
சில பல தலைவர்கள் கட்சியை விட்டு
வெளியேற்றப் பட்டது ஆகியவற்றுக்குக்
காரணம் இந்த ரூ 100 கோடி பணத்தைப்
பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறுதான்
என்கிறார்கள் அமைப்புத் தோழர்கள்.
வெல்லட்டும் வெல்லட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக