செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

அன்று: ஆரியப் படையெடுப்பு உண்மையே!
இன்று: ஆரியப் படையெடுப்பு கற்பனையே!
அசைக்க முடியாத ஆதாரங்களின் விளைவாக
உண்மையை உணர்ந்த வரலாற்று ஆசிரியர்கள்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
வரலாறு என்பது தனிச்சிறப்பு வாய்ந்த அரசர்கள்.
தலைவர்கள் ஆகியோரின் வீர தீரச் செயல்களே.
காரல் மார்க்சுக்கு முன்பு வரலாறு என்பதற்கான
வரையறை இதுதான்.
மார்க்ஸ்தான் முதன் முதலாக மக்களே
வரலாற்றைப் படைக்கிறார்கள் என்ற புதிய
வரையறையை வரலாற்றுக்குத் தந்தவர்.
மானுட சமூகத்தில் மார்க்சுக்கு முன்பு
மக்களின் மகத்தான பங்கை அங்கீகரிக்கும்
சிந்தனையே கிடையாது. வரலாற்றின்
உந்துவிசையாக மக்களைப் .பார்த்தார் மார்க்ஸ்.
மார்க்சின் இந்தக் கொள்கை வரலாற்றுப்
பொருள்முதல்வாதம் (Historical materialism) என்று
அழைக்கப் படுகிறது.
இந்தியாவில் இடதுசாரி அல்லது மார்க்சிய
வரலாற்று ஆசிரியர்களாக (Marxist Historians)
அறியப்படுவோரில் செல்வாக்கு மிக்கவர்களாக
1. டி டி கோசாம்பி (1907-1966)
2. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (1918-1993)
3. ஆர் எஸ் சர்மா (1919-2011)
4. ரொமிலா தாப்பர் அம்மையார் (பிறப்பு: 1931)
ஆகியோரைக் குறிப்பிடலாம்.
எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகள் உட்பட மேற்கூறிய மார்க்சிய
வரலாற்று ஆசிரியர்களின் நூல்களைத்தான்
சார்ந்து இருக்கின்றனர்.
ஆங்கிலேயரான வின்சென்ட் ஸ்மித் (1848-1920)
தமிழரான கே ஏ நீலகண்ட சாஸ்திரி (1892-1975)
ஆகியோரும் நன்கு அறிமுகமான வரலாற்று
ஆசிரியர்களே. ஆனால் வின்சென்ட் ஸ்மித்தின்
வரலாறு காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து
எழுதப்பட்டதாகும்.எனவே அது மெய்யான
வரலாறு அல்ல. நீலகண்ட சாஸ்திரியின்
தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு
உண்மையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
முந்திய பத்தியில் கூறிய மார்க்சிய வரலாற்று
ஆசிரியர்களில் முதல் மூவர் (கோசாம்பி,
சட்டோபாத்யாயா, ஆர் எஸ் சர்மா) ஏற்கனவே
இறந்து விட்டனர். தற்போது ரொமிலா தாப்பர்
அம்மையார் மட்டுமே முதிர்ந்த வயதுடன்
வாழ்ந்து வருகிறார். அவருக்கும் தற்போது
86 வயதாகிறது.
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அனைவருமே,
மார்க்சியர்களாயினும் அல்லது மார்க்சியர்
அல்லாதவராயினும், ஆரியப் படையெடுப்பு
நடைபெற்றது என்ற தவறான நம்பிக்கையின்
அடிப்படையிலேயே தங்களின் வரலாற்று
நூல்களை எழுதியுள்ளனர். எனவே இவர்கள்
அனைவரின் வரலாற்று நூல்களும், குறிப்பாக
பண்டைய இந்தியா பற்றிய அத்தனை நூல்களும்
பொய்யானவை. எனவே இவை இகழ்ச்சியுடன்
நிராகரிக்கப்பட வேண்டும். ஆரியப் படையெடுப்பு
என்பது கற்பனையே என்ற புதிய உண்மைகளின்
வெளிச்சத்தில் இவர்களின் வரலாற்று நூல்கள்
திருத்தி எழுதப் பட வேண்டும்.
ஆனால் மார்க்சிய வரலாறு ஆசிரியர்களில்
ரொமிலா அம்மையாரைத் தவிர பிறர் இறந்து
விட்டதனால், அவர்கள் தங்கள் நூல்களைத்
திருத்தி எழுதுவது சாத்தியமில்லை.
ரொமிலா தாப்பர் தமது நூல்களைத் திரும்பப்
பெற வேண்டும். அவற்றைத் திருத்தி எழுத
வேண்டும். ஆனால் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்று வேறு வழியின்றி
ஒத்துக் கொள்கிறாரே தவிர, தமது நூல்களைத்
திருத்தி எழுத ரொமிலா அம்மையார்
முன்வரவில்லை.இது நேர்மையற்ற
அறிவு நாணயமற்ற செய்கை ஆகும்.
பெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான்
ரொமிலா அம்மையார் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்று ஒத்துக் கொள்ள
முன்வந்தார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு, 2004ல், ஆங்கில இந்து
(The Hindu) ஏட்டில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது,
ரொமிலா தாப்பர் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்
கொண்டுள்ளார். அதற்கான ஆதாரம் கீழே காண்க:
The Hindu dtd March 22, 2004, A reply given by Romila Thapar
titled Redefining secularism in response to a query by Dr S Swami.
அதில் ரொமிலா தாப்பர் பின்வருமாறு கூறுகிறார்:
"ஆரிய இனம் என்றும் திராவிட இனம் என்றும்
எதுவும் கிடையாது என்று கடந்த முப்பது
ஆண்டுகளாகவே பிற வரலாற்று ஆசிரியர்களுடன்
இணைந்து நான் கூறி வந்திருக்கிறேன்.
1966ல் பிரசுரமான நான் எழுதிய இந்திய வரலாறு
என்னும் நூலின் முதல் தொகுதியில் (A history of India
volume I) ஆரியர் என்பது மொழியியல் சொல்லே
என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளேன்".
இவ்வாறு கூறி, ஆரிய திராவிட இனக் கோட்பாடு
முற்றிலும் பொய்யே என்று ஒத்துக்
கொண்டுள்ளார் ரொமிலா தாப்பர்.
***********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக