புதன், 14 ஜூலை, 2021

 மாறிகளும் பிறழ்புரிதலும்!

-----------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-------------------------------------------

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்ட 

12ஆம் வகுப்புக்குரிய கணித நூலிலோ 

அல்லது தாங்கள் குறிப்பிட்டுள்ள கணக்கிலோ 

ஆணாதிக்கம் எதுவும் இல்லை. அப்படிக் 

குற்றம் சாட்டுவது மிகுந்த சிறுபிள்ளைத் 

தனமானது என்று சுட்டிக் காட்டுகிறோம்.  

12ஆம் வகுப்புக் கணக்கு பாடப் புத்தகத்தில்

1ஆம் தொகுதியில் 38ஆம் பக்கத்தில் ஒரு

பயிற்சி வினாவைப் பாருங்கள்


4 ஆடவரும் 4 மகளிரும் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை
3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை
2 ஆடவரும் 5 மகளிரும் சேர்ந்து 4 நாட்களில் முடிப்பார்கள்
எனில், அவ்வேலையை ஓர் ஆடவர் மற்றும் ஒரு மகளிர்
தனித்தனியாகச் செய்து முடிப்பதற்கு எத்தனை நாட்களாகும்?


இந்தக் கணக்கு காலமும் வேலையும் 

(Time and work) என்ற அத்தியாயத்தில் உள்ள 

கணக்கு போலத் தோன்றினாலும், உண்மையில் 

இது simultaneous linear equations in one degree 

என்ற அத்தியாயத்தில் வருவது.


கீழ் வகுப்புகளிலேயே (9ஆம் வகுப்பு, 

10ஆம் வகுப்பு) ஒருபடிச் சமன்பாடுகள் 

இருந்த போதிலும், 12ஆம் வகுப்பில் ஏன் 

இந்தக் கணக்கு இடம் பெற்றுள்ளது என்று 

சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

.

கணக்குப் பாடம் நன்றாகச் சொல்லிக்  

கொடுக்கப்பட்ட ஒரு 12ஆம் வகுப்பு மாணவன், 

இது போன்ற நூறு கணக்குகளைச் செய்து 

பழகுவான். ஒவ்வொரு கணக்கிலும் x,y என்னும் 

மாறிகளின் (variables) மதிப்பு மாறும்.


ஆண்களால் 18 நாளில் செய்ய முடிந்த 

வேலையை பெண்களால் 36 நாளில் 

செய்ய முடியும் என்று ஒரு கணக்கில் 

விடை இருந்தால் (இந்தக் கணக்கின் 

விடை போல), இன்னொரு கணக்கில், 

பெண்களால் 10 நாளில் செய்ய முடிந்த 

வேலையை ஆண்கள் செய்து முடிப்பதற்கு 

20 நாள் ஆகும் என்று இருக்கும்.


ஆண்கள் ஒரு வேலையை எத்தனை நாளில் 

செய்து முடிப்பார்கள் என்பதும், அதே 

வேலையை பெண்கள் எத்தனை நாளில் 

செய்து முடிப்பார்கள் என்பதும் மாறிகளைப் 

(variables) பொறுத்தவை.ஆணாதிக்கத்தைப் 

பொறுத்தவை அல்ல.


மாறிகள் (variables) என்றாலே, அவை எடுக்கும் 

மதிப்புகள் (values) மாறிக்கொண்டே இருக்கும்.

A variable can assume any value. 


கணிதம் அறிந்தோர் எவரும் கணிதத்தை 

நேசிக்கும் எவரும் இப்படி ஒரு அபத்தமான 

குற்றச்சாட்டை முன்வைக்க மாட்டார்கள். 


கணக்குகளைச் செய்யும் ஆர்வம் தங்களுக்கு 

இருந்தால் "பெண்ணாதிக்கம்" (??) மிகுந்த 

கணக்குகளை என்னால் தர இயலும். 


Variables are variables and there are no male 

dominated and female dominated variables.

---------------------------------------------

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக