இணைய வேகத்தில் உலக சாதனை!
------------------------------------------------
ஜப்பானியப் பொறியாளர்கள் அண்மையில்
(ஜூலை 2021) இணையத்தில் அதிவேகத்தை
சாதித்துக் காட்டி உள்ளனர்.தற்போது பயன்பாட்டில்
உள்ள கண்ணாடி இழை கேபிள்களைக்
கொண்டே 319 Tbps வேகத்தை, அதாவது
நொடிக்கு 319 டெரா பிட்ஸ் என்ற வேகத்தை
அடைந்துள்ளனர். இதுவே இன்றைய உலக சாதனை.
ஒரு நொடியில் 57,000 முழுநீளத் திரைப்படங்களை
பதிவிறக்கம் செய்ய இயலும் என்பதே இந்த
வேகத்தின் பொருள்.
இதற்கு முந்திய உலக சாதனை என்பது ஆகஸ்ட் 2020ல்
லண்டன் பொறியாளர்கள் சாதித்துக் காட்டிய
178 Tbps வேகமே.
மெகாபைட் = 1 மில்லியன் பைட் (million byte)
கிகாபைட் = 1 பில்லியன் பைட் (billion byte)
டெராபைட் = 1 டிரில்லியன் பைட் (trillion byte)
என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக