அணுஉலை எதிர்ப்பைக் கைவிட்ட போலிப் போராளிகள்!
வினவு, இடைவெளி இணையதளங்களின் போலித்தனம்!
அமெரிக்கக் காசு வரத்து நின்றது! போராட்டமும் நின்றது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
பத்தாண்டுகளுக்கு முன்பு கூடங்குளத்தில் அணுஉலை
எதிர்ப்புப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த
நேரம். அப்போது டாக்டர் மன்மோகன் சிங்
பிரதமராக இருந்தார்.
தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
இரையான அத்தனை குட்டிமுதலாளித்துவக்
கபோதிகளும் கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பு
என்று சாமியாடிக் கொண்டிருந்த நேரம்.
மகஇக என்று அறியப்படும் (SOC மாநில அமைப்புக்
கமிட்டி) போலி நக்சல்பாரி அமைப்பானது
அணுஉலை எதிர்ப்பில் உச்சம் தொட்டது.
அவர்களின் புதிய ஜனநாயகம் ஏடு. கூடங்குளம்
அணுஉலையை இழுத்து மூடு என்று அட்டைப்
படத்தில் போட்டு பத்திரிகையை வெளியிட்டது.
மேலும் கூடங்குளம் அணுஉலையை இழுத்து
மூடு என்று சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு
தமிழ்நாடெங்கும் ஒட்டப் பட்டன.
நல்லது. தங்களின் நிலைபாட்டை மகஇக
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது என்று
எடுத்துக் கொள்வோம்.
தற்போது ஜூன் 29ல் கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம்
அணுஉலைகளை நிறுவிட கான்கிரீட் போட்டு
கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ரூ 49,621 கோடி செலவில் 5ஆம் 6ஆம் அணுஉலைகள்
அமைக்கப் படுகின்றன. இதற்காக 6200 கனமீட்டர்
(62 லட்சம் லிட்டர்) கான்கிரீட் கொட்டப்பட்டு
கட்டுமானப் பணிகள் கோலாகலமாகத் தொடங்கின.
எந்த எதிர்ப்பும் இல்லை. யாரும் எதிர்க்கவில்லை.
அணுஉலை எதிர்ப்புத் தலைமைப் போராளி
உதயகுமார் எத்தகைய போராட்டத்தையும்
நடத்தவில்லை. அது மட்டுமல்ல, நடத்துவது
பற்றி நினைக்கவும் இல்லை. அணுஉலை
எதிர்ப்பை உதயகுமார் கைவிட்டு விட்டார்
என்பதே உண்மை.
"கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு" என்று
கவர் ஸ்டோரி எழுதிய புதிய ஜனநாயகம் இன்று
கனத்த மௌனம். சுவரொட்டி அடித்து ஒட்டிய
மகஇக இன்று கனத்த மௌனம்.
வினவு இணையதளத்தில் கூடங்குளம் அணுஉலை
விரிவாக்கத்தை எதிர்த்து ஒரு சிறு துணுக்குச் செய்தி
கூட இல்லை. SOC ஆட்கள் அணுஉலை எதிர்ப்பைக்
கைவிட்டு விட்டனர் என்பதே உண்மை.
2011ல் மருதையன் கும்பல் அமைப்பில்தான் தலைமை
வகித்தது. இன்று மருதையன் கும்பல் அமைப்பை
விட்டு வெளியேறி உள்ளது.தனியாக இடைவெளி
என்ற பெயரில் ஒரு இணையதளத்தை மருதையன்
நடத்தி வருகிறார். என்றாலும் "இடைவெளி"யில்
கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தை எதிர்த்து
ஒரு சிறு துணுக்குச் செய்தி கூட இல்லை.
மருதையன் கும்பலும் அணுஉலை எதிர்ப்பைக்
கைவிட்டு விட்டது என்பதே உண்மை.
சுப உதயகுமார் முதல் மருதையன் வரை அன்று
போராடினார்கள்; இன்று போராட மறுக்கிறார்கள்.
ஏன்? என்ன காரணம்?
கூடங்குளத்தில் ரஷ்ய அணுஉலையை எதிர்ப்பதற்காக
அன்று அமெரிக்கா காசு கொடுத்தது. ஏகாதிபத்திய
அமெரிக்காவின் கார்ப்பொரேட் முதலாளிகள்
இங்குள்ள போராளி(???)களுக்கு காசு கொடுத்தார்கள்.
ஏகாதிபத்தியத்தின் எச்சில் காசில் போராட்டம்
உச்சம் தொட்டது. இன்று தேவை முடிந்து விட்டதால்
அமெரிக்க காசு கொடுப்பதை நிறுத்தி விட்டது.
போராட்டமும் நின்று விட்டது. இதுதான் உண்மை!
இது மட்டும்தான் உண்மை!
அணுஉலை எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவக்
கோட்பாடு. அது மார்க்சியக் கோட்பாடு அல்ல.
நல்லது போலிகளே, உங்களையெல்லாம்
அடையாளம் காண, நீங்களெல்லாம் போலிகள்
என்று மக்கள் அறிந்திட காலம் ஒரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.
*************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக