second
லியோனியின் இயற்பியலில் தவறு இல்லை!
திரு வேல்முருகன் கவனத்திற்கு
-------------------------------------------------
உவமை என்பது வேறு; உண்மை என்பது வேறு.
உண்மையை விளக்க உவமையைப்
பயன்படுத்துவது நமது மரபு; உலக மரபும்
அஃதே..
திரு வேல்முருகன் தேவையே இன்றி, ஒரு
உவமைக்குள் புகுந்து வெளியே வருகிறார்.
பால் போல கொக்கு என்று சொன்னால்,
கொக்கு பறக்கும், ஆனால் பால் பறக்குமா
என்று கேட்பது அறிவுடைமை ஆகாது.
வடிவ உவமை, வண்ண உவமை, தொழில்
உவமை, பண்பு உவமை என உவமை
பல வகைப்படும் என்பதை அறிந்திராத
நிலையில் பிறழ்புரிதல் ஏற்படும். நிற்க.
குண்டான பெண்மணி என்று லியோனி
கூறும்போது 100 கிலோ நிறையுள்ள ஒரு
பெண்மணியை மாணவர்கள்
நினைக்கின்றனர். அவர்களின் சிந்தையில்
mass வந்து விடுகிறது. அப்படி நினைக்க
வைத்து விடுகிறார் லியோனி. மாணவர்கள் அப்படி
நினைக்கவில்லை என்று எவரேனும் சொன்னால்
அது அறிவுடைமையின்பால் சேராது.
பத்தாம் வகுப்பில் 40 கிலோ, 45 கிலோ நிறையுள்ள
பையன்கள் இருப்பார்கள். குண்டான பெண்மணி
என்று சொல்லும்போது, பையன்கள் 100 கிலோ
நிறையுள்ள பெண்மணியை மனத்தில் கொண்டு
வருகின்றனர். இவ்வாறு mass என்பதை உணர்த்தி
விடுகிறார் லியோனி.
ஒரு குறிப்பிட்ட நிலைமையில்
(in a particular situation) இவ்வாறு நிகழ்கிறது.
ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில்
close organic contactம் mutual understandingம்
இருந்தால் மட்டுமே இப்படி நிகழ இயலும்.
இதன் மூலம் லியோனி ஒரு successful teacher
என்பது அறிவார்ந்தோருக்குப் புலப்படுகிறது.
அடுத்து வளர்வேகம் என்னும் அதிகரித்துக்
கொண்டே செல்லும் வேகத்தை, அதாவது
accelerationஐ உணர்த்த வேண்டும். அதற்காக
ஒரு சரிவான சாலையைச் சுட்டுகிறார்
லியோனி. சரிவான சாலை என்பது ஒரு
சாய்தளம் (inclined plane) போன்றதாகும்.
போன்றது என்பதை விட, அது
சாய்தளமேதான்.
மாணவர்கள் ஏற்கனவே 9ஆம் வகுப்பில்
சாய்தளம் (inclined plane) பற்றிப்
படித்திருக்கின்றனர்.இது லியோனிக்குத்
தெரியும். Physics தெரியாத ஆட்களுக்கு
இதெல்லாம் தெரியாது.
இப்போது, புரிந்து கொள்வதற்குக் கடினமான
accelerationஐ சரிவான சாலை என்னும் உவமை
மூலம் உணர்த்தி விடுகிறார் லியோனி.
(உவமை உணர்த்த வல்லது; உணர எளியது)
லியோனி மட்டுமல்ல, அநேக இயற்பியல்
ஆசிரியர்கள் accelerationஐ உணர்த்துவதற்கு
சாய்தளத்தையும் சரிவான சாலையையுமே
(inclined plane and sloping roads) உவமையாகப்
பயன்படுத்துவார்கள். .
ஒரு சாய்தளத்திலோ அல்லது சரிவான
சாலையிலோ உள்ள பொருட்கள் அடிக்கடி
accelerate ஆகும். இது அடிப்படை இயற்பியல்.
இது தெரியாதவர்கள் இந்தக் கட்டுரையையோ
அல்லது இந்தப் பின்னூட்டத்தையோ
படிக்கும் அருகதையை இழக்கிறார்கள்.
எனவே accelerationஐ உணர்த்துவதற்கு,
சரிவான சாலையை (sloping road) உவமையாகச்
சொன்ன லியோனி, இயற்பியல் ஆசிரியர்களின்
செழுமையான மரபில் ஊன்றி நின்று கொண்டு
இந்த உவமையைச் சொல்கிறார்.இந்த உவமை
காலங்காலமாக இயற்பியல் ஆசிரியர்களால்
சொல்லப்பட்டு வருகிறது..
இயற்பியல் கற்றவன் என்ற முறையில்
சொல்லுகிறேன்.Acceleration என்பது
புரிய வைக்கக் கடினமானது. இந்த
லட்சணத்தில் uniform accelerationஐ வேறு
தாலியறுக்க வேண்டும். .
லியோனின் போதிக்கும் திறன் அவர் கூறிய
இந்த உவமையால் புலப்படடாலும்,
எல்லோராலும் அவரின் திறனைப் புரிந்து
கொள்ள முடியாது. ஏனெனில் கற்றாரைக்
கற்றாரே காமுறுவர்.
லியோனின் physicsல் தவறு இல்லை!
.........தொடர்ச்சி.........
------------------------------------------------------
பையன் நினைத்துப் பார்க்கிறான்.
1) 100 கிலோ நிறையுள்ள ராட்சஸத் தனமான
ஒரு குண்டுப் பெண்மணி, (mass)
2) ஒரு சரிவான சாலையில் (acceleration)
வேகமாக வந்து,
3) பொரிகடலைக் கடையில் மோதும்போது
(Force)
தெருவெல்லாம் கடலை சிந்தி விடுகிறது.
ஆக F = ma என்ற நியூட்டனின் இரண்டாவது
விதியை அழகாக விளக்கி விடுகிறார் லியோனி.
அவரின் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு
நியூட்டனின் இரண்டாவது விதி நன்றாகப்
புரிந்திருக்கும்.
ஆனால் லியோனி ஒரு சிறு தவறு செய்து
விட்டார்.வகுப்பில் நடந்ததை ஊடகத்தினருக்கு
எடுத்துச் சொல்லும்போது, F = ma என்று
சொல்வதற்குப் பதிலாக, F =mv என்று
ஒரு slip of the tongueல் சொல்லி விட்டார்.
திரு வேல்முருகன் பின்வரும் விஷயங்களைக்
கணக்கில் கொள்ளவில்லை.
1) ஒருவருக்கு physics தெரியாது என்று முடிவு
கட்டுவதற்கு குறைந்தது மூன்று சான்றுகள்
வேண்டும். இதைத்தான் concordant values
என்று சொன்னேன். Here only one value!
Where is the concordance? இதிலேயே
எதிர்ப்பாளர்களின் வாதம் தவிடுபொடி
ஆகி விடுகிறது.
2) உவமை என்பதை உவமையாகப்
பார்க்காமல் மெய்யான நிகழ்வு என்றே
பார்க்கிறார்.அப்படிப் பார்த்து, தனக்குத்
தெரிந்த இயற்பியல் விதிகளை உவமையின்
மீது பிரயோகித்து, ஐயோ எல்லாம்
தப்பு என்கிறார்.
3) சரிவான சாலை (sloping road) என்பதை
accelerationக்கு உவமையாக, லியோனி
மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள இயற்பியல்
ஆசிரியர்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி
வருகிறார்கள் என்பதை திரு வேல்முருகன்
அறிந்திருக்கவில்லை.
ஒரு slip of the tongueஐ வைத்துக் கொண்டு
ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி
லியோனிக்கு physics தெரியாது என்று
முடிவு கட்டுவது அ) மனச்சாட்சி இல்லாதவர்கள்
செய்யும் செயல்; ஆ) நியாய உணர்வு அறவே
இல்லாதவர்கள் செய்யும் செயல்; .இ) அறிவியல்
நடைமுறைகளைப் பின்பற்றாமல் தான்தோன்றித்
தனமாக (arbitrary) நடந்து கொள்ளும்
பொறுப்பற்றவர்களின் செயல்; ஈ) தர்க்க
நியாயம் அறவே இல்லாதவர்களின் (illogical)
செயல். உ) இயற்பியல் அறியாதோரின் செயல்.
3) அஞ்சும் மூணும் எட்டு என்று சொல்வதற்குப்
பதிலாக ஒருவர் அஞ்சும் மூணும் ஏழு என்று
சொல்லி விடுவாரானால், அதை slip of the tongue
என்று எடுத்துக் கொள்வீர்களா, அல்லது
சொன்னவருக்குக் கணித அறிவே இல்லை
என்று முடிவு கட்டுவீர்களா?
I defend Mr LEONI, defending him to the core.
---------------------------------------------------------------
பின்குறிப்பு:
லியோனின் physics மட்டுமே இங்கு என்னால்
defend செய்யப் படுகிறது. அவரின் திமுக சார்பு,
திராவிட இயம், பெண்கள் குறித்த கருத்துக்கள்
ஆகியவற்றை இக்கட்டுரையாசிரியர் defend
செய்யவில்லை. அவை defending the indefensible
என்ற categoryல் வரும்.
------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக