கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணு உலைகளின்
கட்டுமானம் கோலாகலமான தொடக்கம்!
அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை
ஆழக்குழி தோண்டிப் புதைத்த உதயகுமார்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) ஜூன் 29,2021 தேதியானது கூடங்குளம்
அணுஉலை வரலாற்றில் ஒரு பொன்னாள்.
ஏற்கனவே நான்கு அணுஉலைகள் இருக்கின்ற
கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகளை
அமைப்பதற்கான கட்டுமானப் பணி அன்றுதான்
தொடங்கியது.
2) ரூ 50,000 கோடி செலவில் இவ்விரு அணுஉலைகளும்
அமைக்கப்படுகின்றன. (துல்லியமாகச் சொல்வதெனில்
ரூ 49,621 கோடி என்கிறது அரசு).
3) கூடங்குளத்தின் 5, 6 அணுஉலைகளைக் கட்டுவதற்கான .
கான்கிரீட் போடும் வேலை முடிந்தது. 6200 கனமீட்டர்
(6200 cubic meter) கான்கிரீட் போடப்பட்டு விட்டது.
6200 கனமீட்டர் கான்கிரீட் என்றால் எவ்வளவு என்று
தெரிய வேண்டும். கனமீட்டர் என்ற யூனிட்
வாசகர்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.
எனவே இதை கனசென்டிமீட்டர் என்ற அலகில்
சொல்கிறேன்.
6200 cubic meter = 6.2 x 10^9 cubic centimeter.
கன சென்டிமீட்டர் என்பதை cc என்று
சுருக்கமாகச் சொல்வார்கள். cc என்பது
பரிச்சயமான அலகுதானே.
சரி, இன்னொரு அலகான லிட்டரில் சொல்கிறேன்.
6200 cubic meter = 6 200 000 litres.
அதாவது 62 லட்சம் லிட்டர் அளவுள்ள கான்கிரீட்
போடப்பட்டு உள்ளது. இப்போது புரிந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
4) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த
காலத்தில் கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புப்
போராட்டம் அதன் உச்சத்தைத் தொட்டது.
இது சர்வதேச அளவில் கவனத்தையும் பெற்றது.
இன்று கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகளை
அமைப்பதற்கான கட்டுமானத்திற்கு எந்த ஒரு
சிறு எதிர்ப்போ முணுமுணுப்போ இல்லை.
போலிப்போராளி உதயகுமார் கூடங்குளம் சென்று
அணுஉலை விரிவாக்கத்தை எதிர்த்து ஒரு கண்டனக்
கூட்டத்தைக் கூடப் போட முடியாது. முதுகுத்
தொலியை உரித்து விடுவார்கள் கூடங்குளம் மக்கள்.
5) கூடங்குளம் மட்டுமல்ல, சுற்றியுள்ள கிராமங்களான
இடிந்தகரை, கூட்டப்புளி உள்ளிட்ட எல்லா இடங்களிலும்
இதுதான் நிலைமை.
6) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில்
நடந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்
என்ஜிஓ அரசியலின் வெளிப்பாடு. ரஷ்யாவின்
அணுஉலையை எதிர்க்க, அமெரிக்காவின் கொழுத்த
கார்ப்பொரேட் கம்பெனிகள் காசு கொடுத்து
ஆள் பிடித்து எதிர்ப்பு இயக்கம் நடத்தினார்கள்.
7) உதயகுமார் நடத்திய கூடங்குளம் போராட்டம்
பின்நவீனத்துவத்தால் உந்தப்பட்ட போராட்டம்.
பின்நவீனத்துவம் அறிவியலை எதிர்க்கிறது.
அணுஉலைகளை எதிர்க்கிறது.
8) அமெரிக்கக் கைக்கூலி உதயகுமார் இன்று
நன்றாக அம்பலப் பட்டுப் போனார். அவரது
போராளி வேஷம் கலைந்து விட்டது.
9) கூடங்குளம் போராட்டம் இடிந்தகரையில் உள்ள
லூர்து மாதா சர்ச் வளாகத்தில் மட்டுமே
நடைபெற்றது.ஒருநாள் ஒருபொழுது கூட
இடிந்தகரையைத் தாண்டவில்லை. ஏன் என்று
சிந்தித்துப் பாருங்கள்.
10) உதயகுமாரால் ஒருநாளாவது கூடங்குளம்
செல்ல முடியுமா? செல்லமுடியாது உதயகுமாரின்
போலிக் போராட்டத்தை காலம் முறியடித்து
விட்டது.
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக