electronics பாரதம் மின்னனுத் துறையில் அதாவது மின்னணு உற்பத்தித் துறையில் சீனாவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில்தான் நமது உற்பத்தித் திறன் உள்ளது. மின்னணு உற்பத்தித் துறை ஒரு உலகளாவிய மிகப் பெரிய சந்தை மற்றும் நமது பாரத உள்ளூர சந்தையே மிகப் பெரிய சந்தையாகும்.
இதுவரை இருந்த அரசாங்கங்கள் Softwareல்தான் கவனம் செலுத்தியதே தவிர மின்னனு உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தவில்லை. தற்போது அதன் பொருளாதார தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசாங்கம் மின்னனு உற்பத்தியில் கவனம் செலுத்தி ஒரு புதிய வரைவை அதாவது National Policy on Electronics(NPE)யை அறிமுகப் படுத்தியிருக்கிறது. இதன் நோக்கம் பாரத நிறுவனங்களே வடிவமைத்தலலிருந்து உற்பத்தி செய்து முழு வடிவத்துடன் தொழிற்சாலையை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்பது. அரசாங்கத்தின் திட்டப்படி ஒரு பில்லியன் மொபைல் போன்கள், 50 மில்லியன் தொலைக் காட்சி பெட்டிகள் மற்றும் 50 மில்லியன் லேப்டாப்கள், டேப்லெட்கள் முதலானவை 2025ம் வருடத்திற்க்குள் தயாரிக்க வேண்டும் இந்திய நிறுவனங்கள். இதுதான் அரசாங்கத்தின் இலக்கு.
தற்சமயம் வரை இந்தியா தனது லேப்டாப்பிற்கு 80% வரை இறக்குமதியை நம்பியே உள்ளது. நமது லேப்டாப் ஏற்றுமதி உலகளவில் 1%தான். இந்தியா தனது கனவு திட்டமான NPE மூலம் லேப்டாப் மற்றும் டேப்லெட்களின் சந்தையை ரூ. 7லட்சம் கோடிகள் வரை 2025க்குள் உயர்த்த முடியும் என்று வரையறுத்திருக்கிறது. அது உலகளவில் 25% சந்தையை குறிக்கிறது.
சர்வர் சந்தையும் மிகப் பெரிதாக வளர்ந்து வரும் ஒன்றாகும். Digital India, IT sector development பிரமாண்டமான வளர்ச்சி சர்வர்களின் தேவையை அதிகரிக்கிறது. உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமாக நீங்கள் இறக்குமதி வரியை ஏற்றுவதற்கு Information Technology Agreement படி முடியாது. அதனால் உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.
மேற்கண்ட அனைத்தையும் உள்ளீடாக கொண்டுதான் புதிய PLI (Production Linked Incentive) scheme வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஒவ்வொரு இனங்களுக்கும் எவ்வளவு ஊக்கத் தொகை தரப்படுகிறது என்ற விபரங்கள் உள்ளது.
இது மாதிரியான பொருளாதாரத்தை தூண்டும் காரணிகள் இருந்தால் மாத்திரமே கொரானா தொற்றிற்க்கு பிறகான பொருளாதாரத்தை வலு படுத்த முடியும். அதை இந்திய அரசாங்கம் மிக சாதுரியமாக கையாள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக