திங்கள், 26 ஜூலை, 2021

BSNL எப்போது முதல் நலிவடையத் தொடங்கியது?

BSNLஐச் சூறையாடிய குரோனி முதலாளிகள்!

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------ 

BSNL நிறுவனம் 01.10.2000ல் ஆரம்பிக்கப் பட்டது.

இந்தத் தேதியை BSNLல் வேலை பார்த்தவர்களால் 

மறக்க முடியாது. அப்போது நாட்டின் பிரதமர் அடல் பிஹாரி 

வாஜ்பாய். தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் 

பாஸ்வான்.


பின்னர் எத்தனையோ அமைச்சர்கள் வந்தனர்; போயினர்.

BSNL உருவாக்கப்பட்டது முதல் பதவி வகித்த தொலைதொடர்பு

அமைச்சர்களின் பட்டியலைப் பார்ப்போம்.  

 

பிரமோத் மகாஜன், அருண் ஷோரி, தயாநிதி மாறன், ஆ ராசா,

கபில் சிபல், ரவி சங்கர் பிரசாத், மனோஜ் சின்ஹா,  மீண்டும் 

ரவி சங்கர் பிரசாத் ஆகியோருடன் தற்போது (ஜூலை 2021 முதல்)

அஷ்வினி வைஷ்ணவ். இவருக்கு உதவியாக ஓர் 

இணையமைச்சரும் இருக்கிறார்.         


நமது தொலைதொடர்பு அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் 

ரயில்வே அமைச்சராகவும் இருக்கிறார். இவர் ஐஐடி பட்டதாரி.

கான்பூர் ஐஐடியில் எம்டெக் (M.Tech) படித்தவர்.பின்னர் 

அமெரிக்கா சென்றும் Business Administration படித்தார். இவர் 

ஐஏஎஸ் அதிகாரியாகவும் பல ஆண்டுகள் பணியாற்றியவர்.


சீமென்ஸ் நிறுவனம் (Siemens) தெரியுமா? தெரியாது. போலி 

இடதுசாரி, போலி நக்சல்பாரி, போலி மாவோயிஸ்ட் 

இத்தியாதி ஆசாமிகள் ஒருவருக்கும் தெரியாது. சீமென்ஸ் 

கம்பெனியா, தெரியுமே சார், சீமெண்ணெய் கம்பெனிதானே 

என்கிறான் திராவிடக் கசடு.


அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சீமென்ஸ் நிறுவனத்திலும் 

பணியாற்றினார். அதன் துணைத்தலைவராக இருந்தார்.

சீமென்ஸ் என்பது ஒரு தொழில்நுட்ப நிறுவனம்;; ஒரு 

பொறியியல் நிறுவனம்.


ஆக BSNL உருவாக்கப்பட்ட 01.10.2000 முதல் நாளது தேதி வரை 

தொலைதொடர்புத் துறை அமைச்சர்களாக இருந்தவர்கள் 

யார் யார் என்று பார்த்தோம்.  மே 2007 முதல் நவம்பர் 2010

வரை ஆராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.


முதன் முதலாக BSNLல் நஷ்டம்!

-----------------------------------------------

BSNL வெகுவாக லாபம் கொழிக்கும் ஒரு நிறுவனம். 

நாளொன்றுக்கு ரூ 8 கோடி லாபம் என்பது BSNLல் 

சர்வ சாதாரணம். (கவனிக்கவும்: 1 நாள் லாபம் = ரூ 8 கோடி).

நிதியாண்டு 2004-05ல் ரூ 10,000 கோடி லாபம் ஈட்டியது BSNL.


அன்றைக்கு 2005ல், 15 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ 10,000 கோடி 

லாபம் என்பது பிரமிக்கத் தக்கது. இவ்வளவு கொழுத்த 

லாபம் ஈட்டிய BSNLல், வரலாற்றிலேயே முதன் முதலாக

ஆ ராசா அமைச்சராக இருந்தபோது நஷ்டம் ஏற்பட்டது.

2009-10 நிதியாண்டில் 1823 கோடி ரூபாய் நஷ்டம் BSNLல் 

ஏற்பட்டது. இந்த நஷ்டம் BSNLஐ குலுக்கியது.  

நாடு முழுவதும் தொழில் வணிக வட்டாரங்களில் 

(industry and commerce) இது பெரும் அதிர்வலைகளை 

ஏற்படுத்தியது.


அப்போது BSNLல் பணியாற்றிய 4 லட்சம் தொழிலாளர்களும் 

முதன் முதலாக ஆ ராசா ஏற்படுத்திய நஷ்டத்தால் 

அதிர்ச்சி அடைந்தனர். "ஏதோ ஏப்படியோ நஷ்டம் 

ஏற்பட்டு விட்டது; அடுத்த ஆண்டில் அதைச் சரிசெய்து 

லாபத்துக்குக் கொண்டு வந்து விடுவார் ஆ ராசா" என்றுதான் 

4 லட்சம் BSNL தொழிலாளர்களும் எதிர்பார்த்தனர். எப்படியும் 

அடுத்த ஆண்டு லாபம் வந்து விடும் என்று மொத்த BSNL ம் 

எதிர்பார்த்தது. BSNLன் CMD முதல் ரெகுலர் மஸ்தூர் வரை 

லாபத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.


ஆனால், பரிதாபம் என்னவெனில் அடுத்த ஆண்டில் மீண்டும் 

நஷ்டத்தை ஏற்படுத்தினார் ஆ ராசா. நிதியாண்டு 2010-11ல் 

ரூ 6384 கோடி நஷ்டம்  ஏற்படுத்தினார் ஆ ராசா. ரூ 1823 கோடி 

நஷ்டத்தை 3 மடங்கு அதிகரித்து ரூ 6384 கோடிக்கு ஆக்கியதுதான் 

ஆ ராசாவின் சாதனை! அதிர்ஷ்ட வசமாக, அப்போது CAG

அறிக்கையின் மூலம் 2G ஊழல் வெளியானதால், அந்த 

நிதியாண்டு முடிவதற்குள்ளேயே நவம்பர் 2010ல்  ஆ ராசா

பதவி விலகினார். 


தொலைதொடர்பு போன்ற அதிஉயர் தொழில்நுட்பத் 

துறைகளைக் கையாளுவது எளிதல்ல. அது அதிகபட்சத் 

திறமையை ஆற்றலை உழைப்பைக் கோருவது. 

காலங்காலமாக லாபத்தைத் தவிர வேறு எதையும் அறியாத

BSNLஐ நஷ்டம் அடைய வைத்தார் ஆ ராசா. இவரின் நிர்வாகத் திறமையின்மை (mismanagement), ஊழல், nepotism, அக்கறையின்மை  ஆகியவற்றால் பிரம்மாண்டமான BSNL 

மண்ணில் வீழ்ந்தது. இவர் விலகிய பின்னர் திறமையான 

அமைச்சரான கபில் சிபல் பொறுப்பேற்றும்கூட ஆ ராசா 

ஏற்படுத்திய பெருத்த நஷ்டத்தில் இருந்து BSNLஐ விடுவிக்க 

முடியவில்லை.


அன்று ஆ ராசா தொடங்கி வைத்த நஷ்டம் இன்றும் நீடிக்கிறது.

BSNLஐப் பிடித்த பீடை விலகவில்லை. இன்றைக்கு BSNL 

இவ்வளவு நலிவுற்றதன் காரணம் அன்று ஆ ராசா இத்துறையை நாசமாக்கியதுதான்.


ஆரம்பம் முதலே மொபைல் சந்தையில் தலைமையிடத்தில்  

(market leader) இருந்தது சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனம்.

சுனில் மிட்டலிடம் போய் மிகவும் அதிகமாக தொகை  கேட்டதும் 

அதிர்ந்துபோன சுனில் மிட்டல் கொடுக்க மறுத்ததும் வரலாறு. 

கேட்ட தொகையைக் கொடுக்க மறுத்த சுனில் மிட்டல் மிரட்டப் 

பட்டதும் வரலாறு. நீ டாட்டாவை மிரட்டினால் நான் சுனில் 

மிட்டலை மிரட்டுவேன் என்று இரண்டு பேருக்கும் நடந்த

இழிந்த போட்டியில் BSNL காவு கொடுக்கப் பட்டது. இந்த 

வரலாற்றையெல்லாம் மறக்க முடியுமா? மன்னிக்க முடியுமா?


தொலைதொடர்புத்துறை என்பதை குரோனி முதலாளிகளின் 

வேட்டைக் காடாக மாற்றியதுதான் இன்று இத்துறையில் 

ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் ஆகும். குரோனி 

முதலாளிகள் BSNLஐச் சூறையாடி விட்டார்கள். இதனால்தான் 

படுகுழியில் தள்ளப்பட்ட BSNL மேலெழுந்து வருவதற்கு 

இன்றும் மூச்சுத் திணறுகிறது.

***************************************************** 


**************************************************** 



  


     

   

     



     

       

  

 

        

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக