திங்கள், 19 ஜூலை, 2021

1906 என்ற எண்ணை மறக்கக் கூடாது!

உங்கள் வீட்டில் எரிவாயு கசிகிறதா?

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

--------------------------------------------------------  

நியூட்டன் அறிவியல் மன்றம்    

-----------------------------------------------------

1) உங்கள் வீட்டில் LPG எரிவாயு உருளையில் 

இருந்து வாயு கசிகிறது. என்ன செய்வது?

அன்று ஞாயிற்றுக் கிழமை அல்லது முக்கியமான 

விடுமுறை நாள். எனவே உங்களுக்கு வாயு உருளை 

வழங்கும் நிறுவனத்துக்கும் அன்று விடுமுறை.

என்ன செய்வது?

   

பேசாமல் 1906க்கு டயல் செய்யுங்கள். எரிவாயு உருளையில்

வாயு கசிவு ஏற்பட்டால், உடனடியாக உங்கள் வீட்டுக்கு 

வந்து அதைச் சரி செய்து தருவார்கள். இந்த சேவையை 

இந்திய அரசு வழங்குகிறது.


இண்டேன் வாயு, பாரத் வாயு, HP வாயு என்று எல்லா 

நிறுவனங்களையும் உள்ளடக்கியது இந்த சேவை.


இந்த சேவை புதிது அல்ல. ஐந்தரை ஆண்டுகளாக 

இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. 2016 புத்தாண்டின் 

முதல் நாளன்று (01.01.2016) அன்றைய பெட்ரோலியத்துறை 

அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இந்த சேவையைத் 

தொடங்கி வைத்தார்.


இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் இந்த சேவை கிடைக்கும் 

என்று நினைக்க வேண்டாம். தென்னிந்திய மொழிகள் 

அனைத்திலும், அதாவது தமிழ், மலையாளம், தெலுங்கு,

கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த சேவை வழங்கப் 

படுகிறது.


மேலும் வங்காளி, அசாமியம், குஜராத்தி, மராத்தி ஆகிய 

மொழிகளிலும் இந்த சேவை கிடைக்கிறது. இது ஒரு 

கால் சென்டர் தன்மை வாய்ந்த சேவை என்று உணரவும்.


இந்த சேவையை நன்கு புரிந்து கொள்ள, ஒரு கால் 

சென்டர் எப்படி வேலை செய்கிறது என்ற புரிதல் 

இருக்க வேண்டும். தமிழுக்கு எண் 8ஐ அமுக்கவும் 

என்ற குரல் கட்டளையைத் தொடர்ந்து 8ஐ அமுக்கி

நிமிடக் கணக்கில் காத்திருந்து ஏமாற்றம் அடைவதைத் 

தவிர்க்க வேண்டும்.


எப்படித் தவிர்ப்பது?

தமிழில் பேசும்போது, எதிர்முனையில் இருந்து 

பதிலளிக்கத் தாமதமானால், உடனே ஆங்கிலத்துக்கு 

மாறவும். ஆங்கிலம் தெரியாவிட்டால் என்ன செய்வது?


கவலை வேண்டாம். இது பன்மொழிச் சேவை. எனவே 

இந்திக்கு மாறுங்கள். அதற்கு இந்தி தெரிந்திருக்க 

வேண்டும். இந்தியைத் தெரிந்து வைத்துக் 

கொண்டிருந்தால், இது போன்ற நெருக்கடிகளில் 

கைகொடுக்கும். இன்றைய நவீன உலகில்,

உலகமயமாகி விட்ட ஒரு உலகில், இரண்டு மூன்று 

மொழிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

எனக்கு ஆங்கிலம் தெரியாது, எனக்கு இந்தி தெரியாது 

என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது?

அதில் இழிவுதான் இருக்கிறது; தற்குறித்தனம்தான்

இருக்கிறது.   


அகில இந்திய அளவில் செயல்படும் எந்த ஒரு கால் 

சென்டரிலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து 

அதிகமான அழைப்புகள் இந்தியில்தான் வரும்.

எனவே இந்தி பேசத் தெரிந்த ஊழியர்கள்தான் 

அதிக அளவில் நியமிக்கப் படுவார்கள்.       


ஒரு அகில இந்திய கால் சென்டரில் 100 ஊழியர்கள் 

வேலை செய்கிறார்கள் என்றால், மொழிவாரியாக 

பின்வருமாறு ஊழியர்கள் அமைவார்கள்.


1) இந்தி = 35 பேர் 

2) ஆங்கிலம் = 15 பேர்

3) தெலுங்கு, வங்கம், மராத்தி =  24 பேர் (3 x 8 = 24)

4) கன்னடம், தமிழ், மலையாளம், 

அசாமியம், குஜராத்தி =  25 பேர் (5 x 5 = 25)

5) spare = 1.


மேற்கண்ட பட்டியலில் ஆங்கிலத்துக்கென்று உள்ள 

15 ஊழியர்களும், ஆங்கிலம் மட்டுமின்றி, ஏதேனும்

ஒரு இந்திய மொழியையும் பேசுவார்கள்; பேச வேண்டும்.

அதாவது ஆங்கிலம் + மலையாளம் அல்லது 

ஆங்கிலம்+ கன்னடம் என்று பேசுவார்கள். தேவையை 

ஒட்டி அவர்களுக்குத் தெரிந்த இந்திய மொழியிலும் 

சேவை வழங்க வேண்டும்.


நான் சென்னைத் தொலைபேசியில் பணியாற்றியபோது,

BSNLக்கென்று சில கால் சென்டர்களை நடத்தினோம்.

சென்னையில், தமிழ்நாட்டின் தலைநகரில் உள்ள 

கால் சென்டர் என்றபோதிலும் வாடிக்கையாளர்களிடம் 

இருந்து ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 

அழைப்புகள் வரும்.


ஒரு நாளில் 1000 அழைப்புகள் வருகின்றன என்றால் 

அவற்றில் 500 அழைப்புகள் மட்டுமே தமிழில் 

இருக்கும். மீதி 500 அழைப்புகள் இந்தி, ஆங்கிலம்,

தெலுங்கு ஆகிய மொழிகளில் இருக்கும். இதுதான் 

சென்னை கால் சென்டரின் நிலைமை. 


சென்னையில் உள்ள மார்வாடிகள் இந்தியில்தான் 

பேசுவார்கள். இந்தி தெரியாது போடா என்று 

சொன்னால் வாடிக்கையாளர் என்ன செய்வார்?

BSNL வேண்டாம் போடா என்று சொல்லி விட்டுப் 

போய் விடுவார். அப்புறம் சொத்துக்கு எங்கே போவது?


ஏர்டெல் நிறுவனத்தின் கால் சென்டருக்குப் பேசிய 

அனுபவம் இருக்கிறதா? நீங்கள் எத்தியோப்பிய 

மொழியில் பேசினாலும் அங்குள்ள ஊழியர்கள் அதே 

எத்தியோப்பிய மொழியில் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.   


எரிவாயுக் கசிவைச் சரிசெய்யும் சேவை 1906 என்ற எண்ணின் 

மூலமாக ஒரு அகில இந்திய கால் சென்டரால் வழங்கப் 

படுகிறது. தமிழுக்குரிய நம்பரை அமுக்கி, எதிர்முனையில் 

இருந்து பதில் வரத் தாமதம் ஆனால், யோசிக்காதீர்கள்,

ஆங்கிலத்துக்கோ அல்லது இந்திக்கோ மாறி விடுங்கள்.

உடனே எதிர்முனையில் இருந்து பதில் கிடைக்கும். ஆள் 

அனுப்பி வாயுக் கசிவைச் சரி செய்வார்கள்.  

தமிழ் மட்டும்தான் தெரியும்; வேறு எந்த மொழியும் 

தெரியாது என்றால் என்ன செய்ய முடியும்? விடாமல் 

தமிழில் டயல் செய்து கொண்டே இருந்து, விரல்கள் தேய்ந்து,

இறுதியில் இரண்டு மணி நேரம் கழித்து, தமிழில் மறுமொழி 

கூறும் ஊழியர் வந்து, அவர் நடவடிக்கை எடுத்து, நம் 

வீட்டுக்கு ஆள் அனுப்புவதற்குள், நம் வீட்டில் கேஸ் 

சிலிண்டர் வெடித்து விடும். பொண்டாட்டி தீயில் எரிந்து 

கருகி விடுவாள்.    


ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தெரிந்து வைத்துக் 

கொள்வது இன்றைய உலகில் கட்டாயம். எனக்குத் 

தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்று 

சொல்பவர்களால் தரமற்ற ஒரு வாழ்க்கையை, இழிந்த 

ஒரு வாழ்க்கையைத்தான் வாழ முடியும். நாகரிகம் 

எய்திய மக்கள் வாழும் சிறந்த வாழ்க்கையை வாழ 

இயலாது. 


ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்று வைத்திருப்பது 

ஆயுதபாணியாக இருப்பதற்குச் சமம். ஒரு மொழி 

மட்டுமே தெரியும் என்பவன் கோழைப்பயல். அவன் 

ஆயுதம் தூக்க இயலாத, கையாலாகாத இழிசினன்.

அவன் இந்த பூமிக்குப் பாரம்! நிலக்குப் பொறை 

என்கிறார் வள்ளுவர்.


சரி, சமஸ்கிருதத் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு 

என்கிறார்களே, 1906 சேவையில் சமஸ்கிருதம் 

உண்டா? BSNL கால் சென்டரில் சமஸ்கிருதம் உண்டா?

கிடையாது. ஏன்? சமஸ்கிருதம் உற்பத்தி மொழியாக 

இல்லை. உற்பத்தி மொழியாக இல்லாத 

சமஸ்கிருதத்தைத்  திணிக்க இயலாது.


சமஸ்கிருதத் திணிப்பு உண்மை என்றால், 1906 சேவையில் 

சமஸ்கிருதம் ஏன் இல்லை? சொல்லுங்கள் புழுத்த 

அற்பர்களே!


எல்லோரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்

இதுதான். ஒரு மொழி உற்பத்தி மொழியாக இருந்தால் 

மட்டுமே அது உயிருடன் இருக்கும்;  வாழும். சமஸ்கிருதம் 

இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருக்கிறதா?

இல்லை, இல்லவே இல்லை!


சரி, தமிழ் உற்பத்தி மொழியாக இருக்கிறதா?

இல்லை, இல்லவே இல்லை.


பின் இந்தியாவின் உற்பத்தி மொழியாக எது இருக்கிறது?

ஆங்கிலம்தான் இந்தியாவின் உற்பத்தி மொழி!

தமிழ் மட்டுமல்ல, வேறெந்த இந்திய மொழியும்,

இந்தி உட்பட உற்பத்தி மொழி ஆக முடியாது.

***********************************************  


  

   





    

 


 

    


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக