திங்கள், 26 ஜூலை, 2021

 சொல்லப்பட்டுள்ள விஷயம் 

அத்தனையும் அப்பட்டமான பொய்.

ஆ ராசா தொலைத்தொடர்புத்துறை 

அமைச்சராக இருந்த காலத்தில்தான் 

முதன் முதலாக BSNLல் நஷ்டம் வந்தது.


2009-10 நிதியாண்டில் 1823 கோடி ரூபாய் 

நஷ்டம் BSNLல் வந்தது. அப்போது 

ஆ ராசாதான் அமைச்சர். அடுத்து 

2010-11ல் ரூ 6384 கோடி நஷ்டம் 

ஏற்பட்டது. இந்த நிதியாண்டின் 

நடுவிலேயே ஊழல் குற்றச்சாட்டு 

காரணமாக ஆராசா பதவி விலகினார்.


BSNL 1.10.2000ல் தொடங்கப்பட்டது. சர்வ 

சாதாரணமாக நாளொன்றுக்கு ரூ 8 கோடி 

லாபம் வரும். (கவனிக்கவும்: ஒரு நாள் 

லாபம் 8 கோடி).


BSNLன் வரலாற்றிலேயே முதல் முறையாக 

BSNL க்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் 

ஆராசா. அந்த நஷ்டம் அடுத்தடுத்த 

ஆண்டுகளிலும் தொடர்ந்தது. கபில் சிபல் 

அமைச்சராக வந்த பின்னும் தொடர்ந்தது.


இதற்கெல்லாம் காரணம் ஆராசாவின் 

நிர்வாகத் திறமையின்மை,mismanagement,

ஊழல், nepotism ஆகியவைதான்.இந்தியாவின் 

மொபைல் சந்தையில் market leaderஆக இருந்தது 

சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனம்.


சுனில் மிட்டலிடம் போய் மிகவும் அதிகமாக  

லஞ்சம் கேட்டதும் அவர் கொடுக்க மறுத்ததும் 

வரலாறு. கேட்ட தொகையைக் கொடுக்க 

மறுத்த சுனில் மிட்டலை இவர் மிரட்டியதும் 

வரலாறு 


அதே போல ரயில்வேக்குச் சொந்தமான 

இடத்தையெல்லாம் தன் மகன் மகள்

மருமகன் பெயரில் பட்டா போட்டுக் 

கொண்டார் லாலு பிரசாத் யாதவ்.

லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ்,

மக்கள் மிசா பாரதி, மிசா பாரதியின் 

கணவர் ஆகியோர் மீது ஊழல் வழக்கு 

நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் 

அவர்கள் தப்பிக்க முடியாது. சிறைக்குச் 

சொல்வது உறுதி.   .  


அடுத்து ரயில்வேயில் நஷ்டம் என்பது 

இப்போதுதான்; அதுவும் கொரோனா

காரணமாக. ரயிலே ஓடவில்லையே.

ரயில் ஓடாமல் இருந்தால் நஷ்டம் 

வராமல் லாபமா வரும்? ரயில்கள் 

ஓடத் தொடங்கியபின்  automaticஆக 

லாபம் வரும்.

----------------------------------------------

 


                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக