pegasus
ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்கள் தங்கள் போன்களை உளவு பார்க்க முடியாது என்று கூறித்தான் விற்கிறார்கள். ஆனால் இஸ்ரேல் நாட்டு NSO குழு ஸ்மார்ட் போன்களை உளவு பார்க்க ஒரு ஸாஃப்ட் வேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு 'பேகாசஸ்' என்று பெயர்.
ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கும் சேவையை விரும்பும் அரசாங்கங்களுக்கு இதைத் தந்து ஒரு தொழிலாகச் செய்கிறது இஸ்ரேல் நாட்டு NSO குழு. ஸ்மார்ட் போன்களை Nso வேவு பார்க்கிறது என்று கிடைத்த தகவலை ஆம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், பிரென்ச் NGO அமைப்பான Forbidden Stories ஆகிய இரண்டும், 17 உலகச் செய்தி நிறுவனங்களுடன் இணைந்து இந்தச் செய்தியை வெளியிட்டது.
10 வாடிக்கையாளர்கள் நாடுகள் சார்பாக கண்காணிப்பு (சாத்தியக் கூறு உள்ள) இலக்குகளாக [potential targets] 50,000 smart phones NSO பட்டியலில் இருந்தன. அதில் 300 போன்கள் நமது நாட்டை சேர்ந்தவை என்று கூறியது. காங்கிரஸில் ராஹுல் மற்றும் அவருக்கு நெருக்கமான 5 பேர், முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, கர்நாடகத் தலைவர்கள் குமாரசாமி, பரமேஸ்வரா; மமதா பானர்ஜியின் உறவினர் அபிஷேக், தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர்; பாஜக அமைச்சர் பிரஹலாத் பட்டேல், அஷ்வினி வைஷ்ணவ், ஸ்மிருதி இராணியின் செயலாளர், மற்றும் சில பத்திரிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்கள் அந்தப் பட்டியலில் இருந்தன என்றும் சொல்கிறது அந்தச் செய்தி.
NSO மறுத்திருக்கும் அந்தச் செய்தி உண்மையா என்பதே கேள்விக்குறி. இந்நிலையில் 'வேவு பார்க்க 'சாத்தியக்கூறு உள்ள' இலக்கு' [potential target] என்பதை, 'வேவு பார்த்த இலக்கு' என்பது போல சித்தரித்து, அவர்களது போன்களை அரசாங்கம் ஊடுருவி விட்டதாக கூச்சலிட்டன எதிர்க் கட்சிகள். நாடாளுமன்றம் கடந்த சில நாட்களாக முடக்கப்பட்டது.
பயங்கரவாதத்தை ஏராளமாகச் சந்திக்கும் இஸ்ரேலுக்கு பேகாஸஸ் அவசியம் என்பதால் தன் பாதுகாப்புக்காக அதனை இஸ்ரேலுக்கு அது அவசியம் என்பதால், அதனை தயாரித்து வைத்திருக்கிறது. எந்த நாடு கேட்கிறதோ அதன் பாதுகாப்புக்காக தொழில் முறையாகத் தருகிறது.
பயங்கரவாத தாக்குதல்கள், சிறுவர் பாலியல் கொடுமைகள், மனித, போதைப் பொருள் கடத்தல், குற்றங்களை கண்டுபிடிக்க, ட்ரேன் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது. இது குற்றங்களை தடுக்கவே அன்றி, குற்றம் செய்திட அல்ல என்பது NSO வின் வாதம்.
இது வேவு பார்த்த பட்டியல் அல்ல, வேவு பார்க்க சாத்தியக் கூறுகள் உள்ள பட்டியல்கள்தான் [potential target] என்று போகாசஸ் ப்ராஜக்ட்டே கூறுகிறது. இதில் பல உலக நாடுகளின் பிரபலங்களும் அடங்கியுள்ளதால் இது ஓர் உலகப் பிரச்சனை.
இந்த ப்ராஜக்ட் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்ட பொய் என்று என்று கூறி அதை வெளியிட்ட அம்னெஸ்ட்டி மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்து அறிக்கை வெளியிடுகிறது Nso. பதிவின் நீளம் கருதி அதை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.
உடனே பல்டி அடித்த ஆம்னெஸ்ட்டி, 'நாங்கள் கொடுத்த பட்டியல்கள் கண்காணிக்கப்பட்டவை என்று கூறவில்லை, ஆனால் கண்காணிக்க சாத்தியக்கூறுகள் உள்ளவைகள் தான்' என்று டகால்ட்டி வேலை செய்தது.
இந்திய நாடாளுமன்றம் துவங்கப் போகிறது, தான் கொடுக்கும் செய்தி அதனை முடக்கும் என்று தெரிந்தே அதற்கு முந்தையநாள் ஓர் பொய்யான செய்தியை வெளியிடுகிறது ஆம்னெஸ்ட்டி. 'செய்திகள் வெளியான காலவரிசையை பாருங்கள்' என்று அமித்ஷா கூட இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செய்திகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களைத் தூண்டியபோது போது கூறினார். அது ஆம்னெஸ்ட்டி செய்திக்கும் பொருந்தும். ஆம்னெஸ்ட்டி ஏன் இப்படியான அவதூறு செய்திகளை வெளியிட்டது.?
காரணம் இருக்கிறது, 10 நாடுகள் என்பது ஓர் குறியீடுதான். ஆனால் ஆம்னெஸ்ட்டியின் குறி இந்தியா மட்டுமே. காரணம், ஆம்னெஸ்ட்டிக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பெருமளவுக்கான நிதியை தடுத்ததே. இதனால் இந்தியாவிற்க்கான அதன் அலுவலகத்தை மூடவேண்டி வந்தது. அந்த நிதியை வைத்தே இந்தியாவில் பல போராட்டங்கள், கலவரங்களை தூண்ட ஆம்னெஸ்ட்டி பயன்படுத்தியது என மோடி அரசு கூறி வந்தது.
இதே குற்றச்சாட்டை, 2008 அக்டோபர் 22 ல் ஆம்னெஸ்ட்டி செய்திகளை சேகரிக்கும் விதங்கள் பற்றி கேள்வி எழுப்பி, அவர்களது பாரபட்சமான அறிக்கைகளுக்கு நாம் பதிலளிக்க வேண்டியதில்லை என்றும்; ஜூலை 31 2004 ல் ஆம்னெஸ்ட்டி நமது நாட்டில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறது என்று அபாண்டம் சுமத்துகிறது என்றும்; அம்னெஸ்ட்டிக்கு வெளிநாட்டு நிதி வருவதே நமது தேச பாதுகாப்புக்கு ஆபத்து என கூறி, அதற்கு வந்த பெரும் தொகையை தடுத்து நிறுத்தியது அன்றைய ஐ.மு. கூட்டணி அரசின் காங்கிரஸ் தலைலை தாங்கிய மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் அரசு. இன்று இவர்கள்தான் தங்களது ஸ்மார்ட்போன்கள் வேவு பார்க்கப்படுவதாக பிரச்சனை எழுப்புகிறார்கள். அன்று இவர்கள் ஆம்னெஸ்டிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க தயங்கி நிற்க, அதை மோடி அரசு துணிச்சலுடன் செய்ததே ஆம்னெஸ்ட்டியின் இந்தியப் பழிவாங்களுக்கான காரணம்.
இந்த ஆம்னெஸ்டி தான் பேகாஸஸ் ப்ராஜெக்ட் பின்னனியில் இருந்து இந்திய அரசுக்கெதிராக அதைத் திருப்பி விடுகிறது. இதற்கு உள்ளூரிலுள்ள மோடி எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, சக்திகள் செய்த்துதான் பேகாஸஸ் ப்ராஜெக்ட். அதில் இணைந்த உலகளாவிய செய்தி அமைப்புகளில், நம் நாட்டு இடதுசாரி இணைய தளமான 'தி ஒயர்' ம் ஒன்று.
நல்லோர்கள் சிந்திக்கட்டும் தேசதுரோகிகளையும், தேசபக்தர்களை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக