ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

செப்டம்பர் 19 தியாகிகள் தினம்!
-------------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------- 
1968ல் இந்திரா காந்தி  பிரதமராக இருந்தபோது இந்தியாவின்  
மத்திய அரசு ஊழியர்கள் தேவை அடிப்படையிலான குறைந்த 
பட்ச ஊதியம் கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். 1968 செப்டம்பர் 
19 அன்று அந்த நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது.

ரயில்வே, அஞ்சல்-தந்தி, தொலைபேசி, பாதுகாப்பு உள்ளிட்ட 
மத்திய அரசின் சுமார் 50 துறைகளைச் சேர்ந்த 40 லட்சம் 
ஊழியர்களின் வேலைநிறுத்தம் இது.

வேலைநிறுத்த நாளுக்கு முந்திய நாளன்று இந்திரா காந்தி 
வேலைநிறுத்தத்தைத் தடை செய்து ஒரு அவசரச் சட்டம் 
பிறப்பித்தார். வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோரைக் 
கைது செய்ய உத்தரவிட்டார். அரசின் அடக்குமுறையையும் 
மீறி நாடெங்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் 
பங்கேற்றனர்.

போராடும் தொழிலாளர்கள் மீது பல்வேறு மாநிலங்களின்  
காங்கிரஸ் அரசுகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டன.
டெல்லியில் இந்திரப் பிரஸ்தம் என்னும் CPWD அலுவலகத்தில் 
போலீசார் புகுந்து போராடிய ஊழியர்களை மாடியில் இருந்து 
கீழே போட்டனர். ஆம், பொருட்களைப்  போல மனிதர்களைக் 
கையாண்டது போலீஸ்.

டெல்லி, பத்தான்கோட், பிகானீர், பொங்கைகான், மரியானே
ஆகிய ஊர்களில் போராடிய தொழிலாளர்கள் சுட்டுக் 
கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 19ல் உயிர்நீத்த மத்திய அரசு ஊழியர்களின் 
நினைவாக, இன்றும் மத்திய அரசுத் தொழிற்சங்கங்கள் 
செப்டம்பர் 19ஐ தியாகிகள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்

அகில இந்திய அளவிலான மாபெரும் வேலைநிறுத்தம் இது.
ரஷ்யாவில் பாதும் நகரத்தின் தொழிலாளர்களை ஜார் அரசு
சுட்டுக் கொன்றது. ரத்த சாட்சிகளான அந்தத் தொழிலார்களின் 
நினைவாக தோழர் ஸ்டாலின் எழுதிய கவிதையை 
இங்கு நினைவு கூர வேண்டும்.   

செப்டம்பர் 19 தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்.
------------------------------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக