இந்திய வல்லாதிக்க மத்திய அரசை
நடத்திய கட்சிகள் காங்கிரசும் பாஜகவும்.
இந்த மத்திய அரசில் பங்கேற்ற மாநிலக்
கட்சிகள் திமுக, மதிமுக, பாமக ஆகியவை.
கம்யூனிஸ்ட்களான CPI, CPM கட்சிகள் மத்தியிலோ
மாநிலத்திலோ ஆட்சியில் இல்லை. அரசு
அதிகாரத்தோடு எவ்விதத் தொடர்புமற்ற CPI, CPM
கட்சிகளை எவ்வாறு விமர்சிக்க இயலும்?
மேலும் CPI, CPM கட்சிகள் இலங்கையின்
இறையாண்மைக்கு உட்பட்ட தமிழ் ஈழம் என்ற
கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறார்களே தவிர,
தனி நாடாகப் பிரிந்து தமிழீழம் அமைப்பதை
ஏற்கவில்லை. இதை அக்கட்சிகள் 1983ஆம்
ஆண்டிலேயே தெளிவாக அறிவித்து விட்டார்கள்.
CPI, CPM கட்சிகள் ஈழத் தரகர்களாக இருந்து
புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இருந்து காசு
பறிக்கவில்லை. இப்பதிவு ஈழத் தரகர்களை
அம்பலப் படுத்துகிறது.
ஈழத் தரகர்களின் கயமைக்கு ஆதாரம் பாரீர்!
-------------------------------------------------------------------------------
போர்க்கப்பல் வழங்குவது என்றால் என்ன?
அதன் ராணுவ முக்கியத்துவம் என்ன என்ற புரிதல்
இருந்தால் மட்டுமே இப்பதிவைப் புரிந்து கொள்ள
முடியும். ஐ என் எஸ் சரயு வகையைச் சேர்ந்த கப்பல்
ஒரு நாட்டிடம் இருந்தால், அதன் எதிரி நாட்டின்
கடற்படை எப்படியெல்லாம் நிர்மூலம் ஆகும் என்ற
புரிதலும் தேவை.
போர்க்கப்பல் வழங்குவதும் ஆயுதத் தளவாடங்கள்
வழங்குவதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையில்
ராணுவ முக்கியத்துவம் சார்ந்து பாரதூரமான
வேறுபாடுகள் உள்ளன. ஆயுதத் தளவாடங்கள்
வழங்குவது ஒருவருக்கு செலவுக்குப் பணம்
கொடுப்பது போன்றது. போர்க்கப்பல் வழங்குவது
ஒருவருக்கு சொத்தை எழுதிக் கொடுப்பது போன்றது.
வாஜ்பாய் அரசும் மன்மோகன் அரசும் சிங்கள அரசுக்கு
போட்டி போட்டுக் கொண்டு போர்க்கப்பலை
வழங்கினார்கள். சாதாரண ஒரு வாக்கியமா இது?
இந்தப் போர்க்கப்பல்கள் மூலம் சிங்கள அரசு
அசுரத்தனமான ராணுவ பலம் பெற்றது.
இதெல்லாம் வைகோவுக்கும் நெடுமாறனுக்கும்
மருத்துவர் ராமதாசுக்கும் நன்கு தெரியும். மூவரும்
நன்கு படித்தவர்கள். இந்திய அரசு சிங்கள
ராணுவத்துக்கு போர்க்கப்பல் வழங்கியது தவறு என்று
இவர்கள் முணுமுணுத்த வரலாறு உண்டா?
இந்த துணையை மக்களிடம் சொல்லாமல் திட்டமிட்டு
மறைத்த கயமைத்தனம்தானே இவர்கள் செய்தது?
வைகோ ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். "குற்றம்
சுமத்துகிறேன்" என்ற புத்தகம் அது. இந்தப் புத்தகத்தை
எத்தனை பேர் படித்து இருக்கிறீர்கள்? இப்படி ஒரு
புத்தகத்தை வைகோ எழுதி இருக்கிறார் என்று
எத்தனை பேருக்குத் தெரியும்?
வாஜ்பாய் அரசு சிங்கள ராணுவத்துக்கு போர்க்
கப்பல் வழங்கிய செய்தி சர்வதேசப் பத்திரிகைகளில்
எல்லாம் வெளிவந்து உலகறிந்த செய்தியாகிப் போன
பின்னர், வைகோ இந்தப் புத்தகத்தை எழுதினார்.
அதில் ஓரே வரியாவது போர்க்கப்பல் வழங்கிய
வாஜ்பாய் அரசைக் கண்டித்து எழுதி இருப்பாரா?
கண்டிக்க வேண்டாம், ஐயா, போர்க்கப்பல்
வழங்கப் பட்டது என்ற உண்மையையாவது
மக்களுக்குச் சொல்லி இருப்பாரா? வைகோ அப்படி
ஒரு வரி எழுதியிருந்தால், அதைக் காட்டுங்கள்.
இந்திய அரசின் உளவுத் துறையால் இயக்கப்
படுகிறவர்களே ஈழத் தரகர்கள். வைகோ, நெடுமாறன்,
சீமான், திருமுருகன் காந்தி ஆகியோர் இத்தகைய
தரகர்களே. இவர்களைச் சுற்றி வந்து ஆதாயம்
பெறுவோர் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்
போன்றவர்கள். நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால்
வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
என்பது போல, வைகோ நெடுமாறனைச் சுற்றி
வந்து ஆதாயம் பெறுபவர்கள் கொளத்தூர் மணி
போன்றவர்கள். இதுதான் உண்மை.
தரவுகளும் உண்மைகளும் மட்டுமே உண்மையாகும்.
உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு, எந்தத் தரவுகளும்
உண்மைகளும் அறியாமல் இருந்தால், எமது கட்டுரை
புரியாமல்தான் இருக்கும். எமது கருத்துக்களை
மறுப்போர், யாம் முன்வைத்துள்ள ஆதாரத்தை
மறுத்துப் பாருங்கள்,
**************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக