திங்கள், 10 செப்டம்பர், 2018

AC SCIENCE
புதிய தலைமுறையில் இந்த செய்தி போட்டாங்க.. இயற்கை ஏ.சி யாம்.. முட்டாள்தனமானு செய்தி. இது ஒரு கண்டுபிடிப்புன்னு வேறு சொல்றாங்க.. தரம் தாழ்ந்த படிப்பறிவில்லா சேனல்கள், அதை பாராட்டும் முட்டாள்கள்..
இங்கு காட்டப்படுவது ஒன்றும் புது விஷயமல்ல. ஏர் கூலரில் உபயோகிக்கும் evaporative cooling technology. அதாவது நீரை ஒரு பம்ப்பின் மூலம் மறுசுழற்சி செய்து, nozzle வழியாக ஸ்ப்ரே செய்து அதை ஒரு ஃபான் மூலம் ரூமுக்குள் அனுப்புகின்றனர். நம்மூரின் அதிக ஈரப்பதத்திற்கு இது இன்னும் அசௌகர்யம் தான் கொடுக்கும். ஏற்கனவே ஈரப்பதம் அதிகம். அதில் இன்னும் ஈரப்பதத்தை அதிகரித்தால்? முட்டாள்தனம்...
AC என்பது R410 போன்ற வாயுக்களை அதிக பிரஷருக்கு அழுத்தி, திடீரென சிறிய டியூப்கள் மூலம் வெளி விடும் போது வாயு மிகவும் குளிர்கிறது (Joule Thompson effect). அறையில் உள்ள வெப்பமான காற்றை உள்ளிழுத்து அந்த குளிர்ந்த வாயுவை கடத்தும் ட்யூபின் மேல் வழியாக இந்த காற்றை ஒரு விசிறி(blower) அறைக்குள் தள்ளுகிறது! இதனாலேயே அறை குளிற்கிறது. Dessicant bags குழாய்களில் கட்டியிருப்பதால் ஈரப்பதமும் குறைகிறது. இந்த விதமான முறையே, air conditioner களில் பயன்படுத்தப் படுகிறது.
ஏன் தவறான செய்திகளைப் போட்டு ஊரை ஏமாத்தறாங்கன்னு புரியல.. அரசியலில்தான் புளுகறீங்க. அறிவியலிலுமா புளுகணும்??

சரியான விடையும் விளக்கமும்!
---------------------------------------------------------
சரியான விடை: AB = 3.33 km. 

விளக்கம்:
-------------------
எடப்பாடியும் தினகரனும் தரையில் உள்ள 
இரண்டு புள்ளிகள். அவற்றை முறையே A, B என்க.
தற்போது AB எவ்வளவு என்று கண்டுபிடிக்க வேண்டும்.
AB என்ற தூரத்தை விமானம் எவ்வளவு வேகத்தில்,
எவ்வளவு நேரத்தில் கடந்தது என்பது நமக்குத் தெரிய 
வேண்டும். தெரிந்தால். தூரம், வேகம்,நேரம் மூன்றையும் 
இணைக்கும் universal formulaஆன distance =speed x time என்ற 
சூத்திரத்தைப் பயன்படுத்தி விடை காணலாம்.
**
வேகம்= 600 கி.மீ /மணி என்பது கணக்கில் உள்ளது.
நேரம் மட்டுமே கண்டு பிடிக்க வேண்டும்.
இதற்கு ஒரு சூத்திரம் உள்ளது. விமானத்தில் இருந்து 
ஒரு பொருளை கீழே எறியும்போது, அது parabola 
வடிவத்திலான பாதையில் செல்லும் என்பது 
அடிப்படை எந்திரவியல். (The path of the projectile is a parabola).
**
எனவே, if T is the time taken by the particle (projectile) to reach the ground,
then T= square root of 2h/g
Now, time and speed are known. Multiplying these two, one gets the distance.
time = square root of 2x1960 divided by 9.8 (g= 9.8 on earth)
= 20 s.
distance AB= speed x time
= 600 x 20 s
= 600 x 20 x(5/18)
= 3.33 km.
====================================

o convert meter per second into kilometer per hour and vice versa we use the conversion factors like 5/18 and 18/5 depends on the need.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக