திங்கள், 10 செப்டம்பர், 2018

வகுப்பு நடக்கும் இடம்:
OBC வங்கி ஊழியர் நலச்சங்க அலுவலகம்
6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை 24.
அடையாளம்: கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில்.
மேனகா கார்ட்ஸ் எதிரில்.
பேருந்து நிறுத்தம்: சேகர் எம்போரியம், மீனாட்சி கல்லூரி.
0000000000000000000000000000000000000000000000000000

மாதம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கும்
ஈனப்பயல்களே, பதில் சொல்லுங்கள்!
-------------------------------------------------------------------
எஸ்மா என்று ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது.
(ESMA= Essential Services Maintenance Act 1968).
இது மத்திய அரசின் சட்டம் (Central Law). இந்திரா காந்தி
காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. இது
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேறியபின்
சட்டமானது.

எஸ்மா சட்டம் ஒரு ஆள்தூக்கிச் சட்டம்.
தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையைப்
பறிக்கும் சட்டம். வேலைநிறுத்தத்தைத் தடை
செய்யும் சட்டம்.

இந்தச் சட்டமானது அரசமைப்புச் சட்டத்தின்
ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பாக
வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் 69 சத இட
ஒதுக்கீட்டுச்  சட்டமும் ஒன்பதாவது அட்டவணையில்
உள்ளதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது அட்டவணையில் உள்ள சட்டத்தை
நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது என்பதுதான்
ஒன்பதாவது அட்டவணையின் முக்கியத்துவம்.

இடஒதுக்கீட்டுச் சட்டம் ஒன்பதாவது அட்டவணையில்
இருப்பதால், மக்களுக்கு நன்மை. ஆனால் ஆள்தூக்கிச்
சட்டமான எஸ்மா சட்டம் ஒன்பதாவது அட்டவணையில்
இடம்பெற வேண்டிய அவசியம் என்ன?

இதை எந்த எம்.பி.யாவது கேள்வி கேட்டானா?
என்ன மயித்துக்கடா இந்தப் பாசிசச் சட்டம்
ஒன்பதாவது அட்டவணையில் இருக்க வேண்டும்
என்று எந்த எம்பியாவது கேள்வி கேட்டானா?

மாதம் ரூ 1 லட்சம் சம்பளம் வாங்கும் இந்த MPகள்
என்னும் இழிந்த நாய்கள் என்றாவது இந்த  எஸ்மா
சட்டத்தைப் பற்றிக் குரைத்தது உண்டா?மற்ற
எம்பிகளை விடுங்கள். கம்யூனிஸ்ட் எம்பிக்கள்
என்ன செய்தார்கள்?

இந்தியக் கம்யூனிஸ்ட் எம்பி டி ராஜா, மார்க்சிஸ்ட்
எம்பி டி கே ரங்கராஜன் ஆகிய இருவரும் என்றாவது
ஒன்பதாவது அட்டவணையில் எஸ்மா சட்டம் என்ன
இடம்பெற வேண்டும் என்று கேட்டதுண்டா?

இவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும்.

இந்த எஸ்மா சட்டத்தை புழுவினும் இழிந்த சுக்ராம்
என்பவன், அன்று காங்கிரஸ் ஆட்சியில் மத்திய
தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக
இருந்தவன், போராடும் தொலைபேசித் தொழிலாளர்
மீது ஏவினான்.

இந்திய ராணுவத்தின் சிக்னலிங் ரெஜிமென்ட்டின்
தமிழ்நாட்டுப் பிரிவு, அன்றைய தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் அவர்களிடம்
(Chief General Manager, Telecom, Tamilnadu Circle) ரிப்போர்ட்
செய்தனர்.

வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களை
பணியிடத்தில் இருந்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில்
சிக்கனலிங் ரெஜிமென்ட் ஆட்கள் Take over செய்து
சேவையை நடத்த வேண்டும் என்பதே சுக்ராமின்
ஏற்பாடு.

ஆனால் இந்தியாவில் எந்த ஒரு தலைமை அதிகாரியும்
(CGM) ராணுவத்தை TAKE OVER செய்ய அனுமதிக்கவில்லை.
சுக்ராமின் முயற்சி முறியடிக்கப் பட்டது.

எஸ்மா சட்டத்தைத் தூள்தூளாக்கிக் காட்டிய சங்கம்
NFTE சங்கம். எனவே அந்தப் போர்க்குணமிக்க
பாரம்பரியத்தின் அடிப்படையில், இன்றைய
எம்.பி.க்களை நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
*********************************************** 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக