மாவோ பற்றி
சில ஆண்டுகளுக்குப்பின் புதியப் போராளி சிறப்பிதழ் வெளிவருகிறது. கடைசியாக வந்த நான்காவது இதழ் (-2011) “நமது பொதுத்திட்டம்” (வரைவு) சிறப்பிதழாக வெளிவந்தது. இது சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இன்று கூட இது விவாத ஆவணமாக இருந்து கொண்டு இருக்கிறது. இதர அரசியல் சக்திகளுக்கு அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்குத் தொடர்ந்து அழுத்தத்தை தந்து கொண்டிருக்கிறது.
இந்த இதழ் “நமது குறிப்பான திட்டம்” (வரைவு) சிறப்பிதழாக வெளிவருகிறது. “குறிப்பான திட்டம்” என்ற சொல் தமிழக, இந்திய செயல் களத்தில் இல்லாதது. வாசிப்புத் தளத்தில் மட்டுமே அறிமுகமானது.
இந்தியா என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் கட்டமைக்கப்பட்டது. முதல் கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராக சாதிநிலக்கிழார்கள் தலைமையில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்கள் நடைப்பெற்றன. இப்போர்கள் 18ம் நூற்றாண்டின் இடையில் தமிழகத்தில் தொடங்கி 1857 முதல் சுதந்திரப் போர் (உண்மையில் முதல் சுதந்திரப்போர் அல்ல. சாதி நிலக்கிழார்களின் தலைமையிலான இறுதிப்போர்) என்று சொல்லப்படுகின்றது வரை நடந்தது. இறுதியில் சாதிநிலக்கிழார்கள் முற்றிலும் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் அடக்கப்பட்டனர்.
பின்னர், உற்பத்திமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக முதலாளியக் கூறுகள் வளர்ந்தன. புதிய வர்க்கங்கள் உதயமாயின. தொழிலாளர்களும், குட்டிமுதலாளித்துவ சக்திகளும் உருவாயின. இவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு இடைக்கட்டத்தை தீவிரமாக முன்கொண்டுச் சென்றனர். இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடிகள், நடுத்தர வர்க்கத்தினர், கணிசமாக சாதி நிலக்கிழார்கள், இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் போன்ற வர்க்கங்கள் பங்கெடுத்தனர். இதன் விளைவாக, தான் வன்முறையால் தூக்கியெறியப்படுவோம் என்று, தன்னுடைய இறுதிநிலையை உணர்ந்த, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் சமாதானப் பூர்வமாகவே பெருமுதலாளி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றித்தந்தது.
இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் அரசியல் சுதந்திரம் பெற்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற இடைக்கட்டம் முடிவுக்கு வந்தது. முரண்பாடுகள் அடுத்த இடைக்கட்டத்திற்குள் நுழைந்தன.
- 1947க்கு பிறகு, தமிழக, இந்திய சூழலில்,
- இந்திய-சீன போரின் போதும்,
- இந்திய-பாகிஸ்தான் போர்களின் போதும்,
- இந்திராகாந்தி அவசரநிலைக் காலத்திலும்,
- ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்தியப் படைகளை அனுப்பிய போதும்,
இடைக்கட்டங்கள் மாறின. குறிப்பான திட்டங்கள் மாறின. ஆனால், தமிழக, இந்தியாவில் பொதுமையர் (கம்யூனிஸ்ட்) கட்சிகள் (அ) குழுக்கள் கடந்த நூறாண்டுகளில் “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு” இடைக்கட்டத்தைத் தவிர எதையும் அடையாளங்காணவில்லை. பொதுமையர் அமைப்புகள் இயக்க மறுப்பியல் (மாறாநிலைவாதம்) கண்ணோட்டத்தில் இன்று வரை மூழ்கியுள்ளன.
விதிவிலக்காக, அவசரநிலை ஒட்டி சில மார்க்சிய-லெனினிய அமைப்புகள் அசைந்தன. பாசிச எதிர்ப்பு முன்னணி கட்ட முயற்சித்தன. நடைமுறையில் வெற்றிப் பெறவில்லை. தமிழகத்தில் கூட “தமிழ்நாடு அமைப்புக்குழு” (ஜிழிளிசி) பாசிச எதிர்ப்பு முன்னணியை முன்வைத்தது. இது நடைமுறையில் வெற்றிப் பெறவில்லை. செயல்தந்திர முழக்கத்தை முன்வைத்து செயல்படுவதாகக் கூறும் “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் முதலில் பாசிச எதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்தனர்.
பின்னர், இந்து பாசிச எதிர்ப்பு முழக்கத்தை அரசியல் தளத்திலும், உலகமய, தனியார்மய, தாராளமய எதிர்ப்பு முழக்கத்தை பொருளாதார தளத்திலும் முன்வைப்பதாகக் கூறினர். இவை எதார்த்தத்தோடு பொருந்திப் போனதால் ஓரளவு அரசியல் முன்னோடிச் சக்திகளை திரட்டினர். ஆனால், இப்பொழுது இதைக் கைவிட்டு “மக்கள் அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளனர்.
இ.க.க மாவோயிஸ்டுக் கட்சி, முந்தைய மக்கள் யுத்தக் கட்சி தனது அரசியல் தீர்மானம் ஆவணத்தின் இறுதியில் உடனடிக் கடமைகளை தீர்மானிக்கும். அவைகளையே முழக்கங்களாகக் கொண்டுச் செல்ல வேண்டும். அதில் மார்க்சிய-லெனினிய-மாவோவியத்தை பரப்புவதுக் கூட உடனடிக் கடமையாக இருக்கும். இதை எதிர்த்து கடும் போராட்டத்தினூடே மக்கள் யுத்தக் கட்சியின் 9வது அகில இந்திய பேராயம் (காங்கிரசு) உலகமய, தாராளமய, தனியார்மய பொருளாதார கொள்கைக்கும், இந்துத்துவா பாசிச எதிர்ப்பிற்கும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் நடைமுறைக்கு வரவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்புக் கட்டப்பட்டது. அதுவும் மக்கள் திரளை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை.
சமீபத்தில், மாவோயிஸ்டுக் கட்சியின் தலைமை, இந்துத்துவாவிற்கு எதிராக, இடது சாரிகள் செயலுத்தி (டாக்டீஸ்) முன்னணிக் கட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளதாக பத்திரிக்கைச் செய்திகள் வருகின்றன. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வரவேற்கத்தக்கதாகும்.
மேற்கண்ட அமைப்புகள் வேறுபட்ட தன்மைகளில் சில முயற்சிகள் எடுத்தபோதிலும், சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வேறுசில அமைப்புகள் அரசியல் முன்னோடிச் சக்திகளை திசைத் திருப்புவதும், குழப்புவதும், மழுங்கடிப்பதுமாக உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் “வேற்றுமையில் ஒற்றுமை” என்று கூறிக்கொண்டு அரசியல் அய்க்கியத்தை நிராகரித்து, முதலில் அமைப்பு அய்க்கியத்தை முன்வைத்து சந்தர்ப்பவாதமாக உருவான மக்கள் விடுதலை சமீபத்தில் “கட்சி அடிப்படை ஆவணம்” என்று ஒரு கதம்ப ஆவணத்தை வெளியீட்டுள்ளனர்.
இதில், பொதுத்திட்டம் இந்தியாவிற்கானது, குறிப்பான திட்டம் தமிழ்நாட்டிற்கானது என்று வரையறுத்துள்ளனர். பொதுத்திட்டத்தில் புதிய ஜனநாயகப் புரட்சி உடனடிக் கடமை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதற்கான திட்டம் எதுவும் இல்லை.
புதிய ஜனநாயகப் புரட்சி என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விவசாயத் திட்டத்தில் மடங்கள், அறக்கட்டளைகளின் நிலங்கள் தேச உடைமையாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால், குத்தகை விவசாயிகள், நிலமற்ற விவசாயிகளுக்கான புதிய ஜனநாயகத் திட்டம் என்ன?
மேலும், “சமதர்ம தமிழகம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன் பொருள் என்ன? புதிய ஜனநாயகமா? சோசலிசமா? கம்யூனிசமா?
மேற்கண்டவைகளில் இருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், திட்டம், அடிப்படை ஆவணம் இவைகளைப்பற்றி பொதுப்புரிதல் கூட இல்லாதவர்களாக உள்ளனர். புரட்சியின் தீவிரத்தன்மை (ரெவியுலுஸ்னெரி சீரியஸ்னெஸ்) இல்லாத மேம்போக்கான செயல்பாடே இவர்களின் “கட்சி அடிப்படை ஆவணம்” வெளியீடு ஆகும். சந்தர்ப்பவாதம் அடிப்படையாக இருப்பதே இவர்களின் குழப்பவாத நிலைபாடுகளுக்கு காரணமாகும். தொடர்ந்த இவர்களின் இத்தன்மையிலான செயல்பாடுகள் அணிகளிடையே தெளிவற்ற நிலையை ஏற்படுத்துவதும், அரசியல் தீவிரத்தன்மை அற்றவர்களாகவும் மாற்றுகின்றன.
இதனால், அணிகள் தங்களது சிக்கல்களை தனிநபர் மற்றும் அமைப்புச் சிக்கலாக பார்க்கின்றனர். தலைமையின் சந்தர்ப்பவாத அரசியலே ஏற்படும் சிக்கல்களுக்கு காரணம் என்று பார்ப்பதில்லை.
அடுத்து, கடந்த சில பத்தாண்டுகளுக்கு மேலாக தனது அணிகளின் சிந்தனையை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் இருவர் ஆவர். ஒருவர், திட்டமும் இல்லை எதுவும் இல்லை இனிமேல் தான் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறி, என்பதுகளில் பலமாக இருந்த மக்கள் யுத்தக் கட்சியின் நடைமுறை வேலைகளை நிறுத்தி கட்சியை கலைத்து, மக்கள் யுத்தக் கட்சியின் திட்டத்தை கைவிட்டு ஓடிப்போன ஓடுகாலியும், தமிழகத்தின் கலைப்புவாதத்தின் பிதாமகனுமாகிய ஏ.எம். கோதண்டராமன் (போல்ஸ்விக் குழு). ஆவார்.
மற்றொருவர், மார்க்சிய ஆசான்களுகளோடு தன்னை ஒப்பீட்டுக் கொண்டு தனது அரசியல் நிலைபாடுகளை அணிகளில் புரிந்துக் கொள்ள முடியாது என்று நடைமுறை வேலைகளை நிறுத்திய கலைப்புவாதியும் உண்மையில், தனது நிலைபாடுகளை அணிகளுக்கு புரிய வைக்க திறனற்றவரும், தகுதியற்றவருமான, கார்முகில் (தமிழ்நாடு மார்க்சிய-லெனினிய கட்சி) ஆவார்.
இருவரும் அணிகளுக்கு பலவாக்குறுதிகளை தந்துவிட்டு இது நாள் வரையில் செய்யாமல் மோசடி செய்துக் கொண்டிருக்கின்றனர். எந்த வேலையும் செய்யாமல் தலைமை பொறுப்பில் ஓட்டிக் கொண்டிருக்கும் பிழைப்புவாதிகளாக சீரழிந்து போய் உள்ளனர். இவர்களின் அணிகளோ சுயதன்மையற்ற ஒரேமாதிரி பேச்சுக்களை வாந்தி எடுக்கின்றனர். அந்தளவுக்கு இருவரும் அணிகளின் சுயதன்மையை ஒட்டுண்ணியாக உறிஞ்சி உள்ளனர். இப்படிப்பட்ட அணிகளால் மக்களிடையே வேலை செய்ய எப்படி சாத்தியப்படும்? பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறி உள்ளனர். இவர்களின் இந்த செயல்பாடுகள் அபாயகரமானது ஆகும்.
புறக்காரணிகள் இருப்பினும், மேற்கண்ட அகக்காரணிகளே புரட்சிகர முகாம் பின்னடைவுக்குள்ளானதற்கு முக்கிய காரணங்களாகும். இருப்பினும், நான் முன்பு குறிப்பிட்ட “இயக்க மறுப்பியல்” கண்ணோட்டம் மிக முக்கியமானது ஆகும். இக்கண்ணோட்டம் இரண்டு முக்கிய விசியங்களை முன் கொண்டு வருகிறது.
அவை: (1) முரண்பாட்டின் குறித்தத் தன்மையை ஆய்வு செய்வது (2) பொருளின் மாற்றத்தில் பகுதியளவு பண்பு மாற்றம் அடைவது என்பதாகும். இவை இரண்டுமே மாவோவின் முக்கிய பங்களிப்புகளாகும்.
குறித்தத் தன்மையை பொருத்தவரை அதுதான் பொருளின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கியப் பாத்திரத்தை வகிப்பதாக மாவோ வலியுறுத்தினார். இது ஒரு பொருளின் தன்மைப் பற்றி சரியான முடிவுக்கு வருவதற்கு உதவுகிறது. குறித்தத் தன்மையை பார்க்க மறுப்பதன் விளைவை ஒரு எடுத்துக் காட்டுடன் பார்ப்போம்!
மாவோயிஸ்ட் கட்சித் தன்னுடைய நிலைப்பாட்டில் நிலவுடைமைக்கும்-பரந்துப்பட்ட மக்களுக்குமான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக பார்க்கிறது. மா.லெ.கட்சி 1969ல் உருவானதில் இருந்து இதுதான் முதன்மை முரண்பாடாகத் தொடர்கிறது. சுமார் 50ஆண்டுகள் எந்த மாற்றமில்லாமல் தொடர்கிறது. மக்கள் யுத்தக் கட்சியாக இருந்த பொழுது என்பதுகளில் தண்டகாரண்யாவில் (மகாராஷ்டிரா, சத்தீஸ்கர்) வேலையை தொடங்கியது. பின்னர், விவசாய திட்டமாகப் பழங்குடிகளுக்கு காட்டுநிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதில் என்ன மாறுபாடு என்றால் தண்டகாரண்யாவில் நிலவுடைமை உற்பத்தி நிலவவில்லை. அரைதொல்குடி உற்பத்தி முறையே நிலவியது. ஏற்கனவே அவர்கள் கூட்டுத் தன்மையில் இருந்தனர். எனவே, அவர்களுக்கு கூட்டுப் பண்ணைகளை உருவாக்கி இருக்க வேண்டும். மாறாக, நிலவுடைமை முதன்மை முரண்பாடு என்பதை பொதுத்தன்மையாக எந்திரகதியாக தண்டகாரண்யாவிற்கு பொருத்தப்பட்டது. அதன் குறித்தத்தன்மை கணக்கில் எடுக்கப்படவில்லை. இன்று வரை மாவோயிஸ்டுகள் இத்தவரை உணர்ந்தார்களா? எனத் தெரியவில்லை.
அடுத்து, இரண்டாவது விசியமான பகுதியளவு பண்புமாற்றம் முழுக்க மாவோவின் தத்துவ பங்களிப்பாகும். மாவோவிற்கு முன்பு இயங்கியல் விதியில், ஒரு பொருளின் மாற்றத்தில் அளவுமாற்றம், பண்பு மாற்றம் என்பதே விதியாகும். அளவுமாற்றம் படிப்படியாகவும் இறுதியாக பண்பு மாற்றம் பாய்ச்சலாக இருக்கும் என்பதே நிலைப்பாடாகும். மாவோவின் தத்துவார்த்த பங்களிப்பிற்கு பின் அளவு மாற்றம் மட்டுமல்ல பகுதியளவு பண்பு மாற்றங்களும் உண்டு என்பதை முன்வைத்தார். புழுக்களின் வளர்ச்சி, மனித உடலில் உருவாகும் பருவமாற்றங்கள் போன்றவற்றை எடுத்துக் காட்டுகளாக முன்வைத்தார். இப்பங்களிப்பு சிக்கலான சமூக வளர்ச்சியை துல்லியமாகப் புரிந்துக் கொள்ள பெரும் பேருதவியைக் கொண்டு உள்ளது.
தமிழக, இந்தியச் சூழலில் உள்ள பொதுமையர் முகாமில் மாவோவின் இந்த பங்களிப்பு அறியப்படாததாகவே உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் இதை முன்வைத்தவர் மக்கள் யுத்தக் கட்சியின் நிறுவனச் செயலர் கொண்டப்பள்ளி சீதாராமய்யா (கே.எஸ்) ஆவார். இதனடிப்படையில் எங்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. இவர் அரசியல், அமைப்பு முரண்பாட்டின் காரணமாக கட்சியை விட்டு 90களின் தொடக்கத்தில் வெளியேறினார். இதற்கு பிறகு 1995ல் நடைபெற்ற அனைத்திந்திய சிறப்பு மாநாட்டில் கே.எஸ்-ன் கண்ணோட்டம் தவறு என்று தீர்மானிக்கப்பட்டது. இது மாவோவின் பங்களிப்பாக பார்க்கவில்லை. கே.எஸ்-ன் பங்களிப்பாக பார்க்கப்பட்டது. இக்கண்ணேட்டமே புரட்சிகர இயக்கத்தை பாய்ச்சலில் வளர்க்கவில்லை. இடைக்கட்டங்களில் தேங்கவைக்கிறது என்று பார்க்கப்பட்டது. எனவே, இக்கருத்தோட்டம் நிராகரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் மக்கள்யுத்தக் கட்சி மக்கள் திரள் செல்வாக்குக் கொண்ட காலக்கட்டமான 1985ல் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கிலும் மாநாடுகளில் லட்சக்கணக்கிலும் மக்கள் அணிதிரண்டனர். ஆந்திர அரசு கடும் தொடர் அடக்குமுறையை ஏவியது. இக்கட்டத்தில் கே.எஸ் கட்சி கட்டுதலை பலப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். இது சரியானதே. ஆனால், இது நடைமுறைப் படுத்தப்படவில்லை. மேலும், அரசு அடக்குமுறையை எதிர்கொள்ள இயக்கத்தை பாதுகாக்க கெரில்லாக் குழுக்களைக் கட்ட வழிக்காட்டினார்.
அக்கட்டத்தில் செய்திருக்க வேண்டியது என்ன?
(1) கட்சியைப் பலமாக எல்லா மட்டத்திலும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
(2) மாநிலந் தழுவிய அரசியல் கிளர்ச்சியை (அ) எழுச்சியை தயார் செய்து இருக்க வேண்டும். ஏனெனில் மாநிலம் முழுக்க எல்லா மாவட்டங்களிலும் மக்களிடம் கட்சியின் செல்வாக்கு இருந்தது.
(3) ஆயிரக்கணக்கில் மக்கள் திரட்டப்பட்டு மக்கள் விடுதலைப்படை கட்டப்பட்டு மக்கள் யுத்தம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆந்திராவில் மக்கள் யுத்தம் தொடுக்கப்பட்டிருந்தால், அது என்பதுகளின் இந்திய அரசியல் சூழலையே மாற்றிப் போட்டிருக்கும். வரலாறே தலைகீழாக மாறியிருக்கும்.
ஆனால், கே.எஸ்-ன் அரசியல் வழி இயக்கத்தின் வளர்ச்சியை மந்தப்படுத்தியது. இயக்கம் பாய்ச்சல் ரீதியான மாற்றத்திற்கு செல்லாமல் அளவு ரீதியான மாற்றமாக பார்த்து அதற்கு மிகையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கே.எஸ்-ன் தவறு பகுதியளவு பண்பு மாற்றத்திற்கு திட்டமிடாமல், அளவு மாற்றத்திற்கே அதிக அழுத்தம் தந்ததில் தான் அடங்கியுள்ளது. இதை 1995 சிறப்பு மாநாடு உணரவில்லை. கே.எஸ் பகுதியளவு பண்பு மாற்றத்திற்கே அதாவது, இடைக்கட்டங்களுக்கே அதிக அழுத்தம் தந்ததாக கருதி மறுகோடிக்குச் சென்றது.
இதற்குப் பிறகு, இடைக்கட்டங்கள் கிடையாது புதிய ஜனநாயகப் புரட்சிதான் ஒரே கட்டம் என்ற தட்டையான சிந்தனை ஒரு சாரரிடம் பலம் பெற்றது.
1995க்குப் பிறகு தான் தமிழ்நாடு, கர்நாடகாவில் ஆயுதக் குழுக்கள் கட்டப்பட்டன. “ஆயுதப் போராட்டமே முதன்மையான போராட்ட வடிவம்” கெரில்லா குழுக்களே முதன்மையான அமைப்பு வடிவம்” என்ற சீனாவிற்கான கோட்பாடு பலம் பெற்றது. இதனால் புதிய பகுதிகளில் கூட தொடக்கத்திலிருந்தே ஆயுதக் குழுக்கள் மூலமே அமைப்புக் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பழைய முறையிலான மக்கள் திரள் அமைப்புகளின் மூலம் மக்கள் திரளை திரட்டுவது, வளர்ச்சி போக்கில் மக்கள் திரள் இயக்கத்தை பாதுகாக்க படிப்படியாக ஆயுதக் குழுக்களைக் கட்டுவது என்ற கே.எஸ்.-ன் அரசியல்வழி முற்றிலுமாக கைவிடப்பட்டது.
ஒன்பதாவது பேராயத்திற்கு (2001) பின் இப்போக்கு உச்சத்தை அடைந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் தமிழகத்திலும் சில செயல்போக்குகள் நடைப்பெற்றன. ஊத்தங்கரை சம்பவத்திற்கு (போலிசுடன் மோதலுக்கு) பிறகு தருமபுரியில் ஆயிரக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டனர். சில மாதங்களிலேயே உளவுத்துறை மக்கள் யுத்தக் கட்சி செயல்பட்ட அனைத்துப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதனால் கட்சி செயல்படாமல் போனது. இயக்கம் முழுவதும் பின்னடைவுக்குள்ளானது. இதனால் தருமபுரியில் இருந்து மக்கள் யுத்தக் கட்சி பின்வாங்கியது.
இதற்கு பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் செயல்படுவது என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுதக் குழுக்கள் மூலமே செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. முருகமலையில் கைது, கொடைக்கானலில் போலீஸ் மோதலில் தோழர் நவீன்பிரசாத் வீரமரணம் அடைந்தார். பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.
(1992 ல் நான் கட்சிக் கண்ணோட்டத்தை வகுத்து வைத்தேன். இதன்படி, தமிழ்நாடு, புவியியல் வரலாறு, சமூக, பொருளாதாரம் பண்பாட்டு அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, சென்னை நீங்கலாக ஆறுமண்டலங்கலாக பிரிக்கப்பட்டது.
இதில் வடமேற்கு மண்டலத்தில் முதன்மையாக கவனம் செலுத்தி செயல்படுவது என்ற செயல் திட்டத்தை முன்வைத்தேன். வடமேற்கு மண்டலம் என்பது இன்றைய வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களும், துறையூர், சத்தியமங்கலம் பகுதிகளும் அடங்கிய கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடராகும். இச்செயல் திட்டத்தை நான் முன்வைக்கும் பொழுதே, மேற்குத் தொடர்ச்சி மலையில் முதன்மையாக செயல்படவேண்டும் என்ற விவாதம் முன்னுக்கு வந்தது.
மே. தொ. ம. தொடரில் தமிழ்நாட்டுப் பகுதிகளில் அடர்த்தியாக மக்கள் இல்லாதது, மக்கள் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சி அடைந்த எஸ்டேட் உற்பத்தி முறை (டீ,காபி), கேரளா பகுதிகளிலேயே மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மேலும், வ,மே.ம. வளர்ச்சி அடையும் பொழுது மே.தொ.ம. தொடரை இராணுவதளமாக பயன்படுத்தலாம் போன்ற எனது கருத்துக்களை முன்வைத்தேன். இவை அப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டன. நான் சிறையில் இருந்த சூழ்நிலையில் (2002 க்கு பிறகு) தமிழகத்தில் மே.தொ.ம. தொ. பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. இத்திட்டம் கருவிலேயே கலைந்தது.)
சில மாதங்களுக்குப் பின் முச்சந்திப்பு திட்டம் முன்வைக்கப்பட்டது. முச்சந்திப்பு என்பது தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநிலங்களும் சந்திக்கும் எல்லைப்பகுதிகள் ஆகும். இத்திட்டம் 2001ல் நடந்த மையக் குழுவின் விரிவடைந்தக் கூட்டத்திலேயே சிலரால் முன்வைக்கப்பட்டது (மேப்பைப்பார்த்து). அப்பொழுதே நானும், கர்நாடக மாநில செயலர் தியாகி தோழர் சாகேத்ராஜனும் நடைமுறை சாத்தியமற்றது என்று நிராகரித்தோம். நான் கட்சியை விட்டு வெளியேறியும், தோழர் சாகேத் இராஜன் வீரமரணம் (போலீஸ் மோதலில்) அடைந்த பின்னணியிலும் இருவரும் இல்லாத சூழ்நிலையில் சில ஆண்டுகளாக நடைமுறை சாத்தியமற்ற முச்சந்திப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட செயல்பாட்டிற்கு காரணம் அளவு மாற்றங்கள், பகுதியளவு பண்பு மாற்றங்களை மறுதலிப்பதால் இறுதிக்கட்ட தயாரிப்பதற்கு தள்ளப்படுகின்றனர். மக்கள் திரள் இல்லாததால் ஆயுதக்குழுக்களைக் கட்ட வனப்பதிகளை நாடுகின்றனர். இதனால் தனிமைப்பட்டு போகின்றனர். இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டிய மக்கள் யுத்தக் கட்சி இன்று (மாவோயிஸ்டுக் கட்சி) இராணுவ நடவடிக்கைகளில் சுருங்கிப் போயுள்ளது.
குறிப்பான திட்டத்தை நிராகரித்த பொதுத் திட்டத்திற்கான நடைமுறையும்;
இடைக்கட்டங்களை நிராகரித்த இறுதிக் கட்டத்திற்கான சிந்தனையும், செயல்பாடும்;
செயலுத்திகள் இல்லாத மூலஉத்திக்கான சிந்தனையும் செயல்பாடும்;
இன்று மாவோயிஸ்ட் கட்சியை இராணுவ வாதத்தில் சுருக்கி உள்ளது.
“புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகள் என்பதுகளின் தொடக்கத்தில் தங்கள் நிலைபாடுகளை வெளியிட்டனர். 1970 மா.லெ.கட்சியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். அதாவது, சமூக வளர்ச்சியின் உண்மைகளை பார்க்காமல் பின்தங்கிய தன்மையில் தரகுமுதலாளி, அரைக்காலனியம் என்று சமூக வளர்ச்சியை குறைத்து பார்க்கும் வலது பார்வைவே வெளிப்பட்டது. இன்றும் முதலாளித்துவ வளர்ச்சியை “நாடு கடந்த தரகு முதலாளித்துவம்” என்று தரகு முதலாளித்துவ பூனூலை அவிழ்க்காமல் பார்க்கும் பின்தங்கிய பார்வையே உள்ளது.
முதலாளித்துவ நாடாளுமன்றத்தின் இருத்தலை ஏற்றுக் கொண்ட அதே சமயத்தில், முதன்மை முரண்பாடாக நிலவுடைமைக்கும் ஜ் பரந்துப்பட்ட மக்களுக்குமான முரண்பாட்டை முன்வைத்தனர். 50ஆண்டுகளாக இம்முதன்மை முரண்பாடு மாறாமல் உள்ளது. இதற்கான எந்த செயல் திட்டங்களும் இது நாள் வரையில் இல்லை. மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை நாங்கள் தான் முதலில் சரியாக வைத்தோம் என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் இம்முரண்பாட்டை தீர்க்கவோ, கூர்மைப்படுத்தவோ ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆவணத்தில் எழுதி பரணில் தூங்குகிறது. “புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகளின் அணிகளே! பரணில் இருந்து தூசி தட்டி எடுங்கள், என்றும் மாறாமல் இருக்கும் முதன்மை முரண்பாட்டை ஆய்வு செய்யுங்கள்.
இதை வலியுறுத்தும் காரணம், 1947 அதிகார மாற்றத்திற்கு பிறகு முதன்மை இலக்கான இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் இன்றுவரை முதன்மை இலக்காக பொதுமையர் அமைப்புகளால் பார்க்கப்படவில்லை. நிலவுடைமை முதன்மை முரண்பாடு என்று திசைத் திருப்பப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் எந்தவித எதிர்ப்பும் தாக்குதலும் இல்லாமல் பலமாக வளர்ந்து வருகிறது. இன்று வளரும் ஏகாதிபத்தியமாக மாறியுள்ளது.
இவர்கள், என்பதுகளின் பத்தாண்டுகளில் பரப்புரை மட்டுமே மேற்கொண்டனர். இச்செயல் போக்கை மற்ற அமைப்புகள் தொடர்ந்து விமர்சனம் செய்ததால், தொன்னூறுகளின் தொடக்கத்தில் நாங்களும் மற்ற அமைப்புகளைப் போல், போர்க்குணமிக்க பொருளாதார போராட்டங்களை எடுக்கப் போகிறோம்; அப்பொழுது தான் எங்களை மற்றவர்கள் மதிப்பார்கள் என்று கூறி சில போராட்டங்களை எடுக்கத் தொடங்கினர். இவர்களின் இந்த சந்தர்ப்பவாத செயல்பாடு, “புலியை பார்த்து பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையானது.” இது நாள் வரையில் எந்தவித போர்க்குணமும் போராட்டங்களில் வெளிப்படவில்லை. சட்டரீதியான ஆர்ப்பாட்டங்கள், காலையில் கைது செய்து மாலையில் விட்டுவிடுவது என்பது தான் இவர்களின் போர்க்குணமிக்க நடைமுறை.
தொடக்கக் காலத்தில் சில சம்பவங்கள் நடந்ததுண்டு. அவை புறச்சூழ்நிலையின் அழுத்தம் காரணமாக, தங்களின் இருத்தலை (உயிரை) தக்க வைத்துக் கொள்வதற்காக அணிகளே தன்னெழுச்சியாக செய்ததாகும். முதலில் இந்நடவடிக்கைகளை எதிர்த்த தலைமை, பின்னர் சந்தர்ப்பவாதமாக ஏற்றுக் கொண்டது.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இவர்கள் “மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்” என்ற இரண்டு செயல் தந்திர முழக்கங்களை முன்வைத்து செயல்பட்டு வந்தனர். சில பத்தாண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், இவர்கள் முன் வைத்தத முழக்கங்கள் புறநிலை யதார்த்த சூழ்நிலையோடு சரியாக பொருந்திப் போனாலும், இவர்களின் செயல்பாட்டு முறையின் காரணமாக, அதாவது, முன்னோடிச் சக்திகளை மட்டுமே திரட்டும் இவர்களின் செயல்முறையின் காரணமாக, சில நூறு பேர்களை மட்டுமே இவர்களால் திரட்ட முடிந்துள்ளது.
மேலும், இப்போக்கை பார்ப்போமானால், பகுதி போராட்டங்கள் வெற்றியைத்தராது, வர்க்கப் போராட்டங்களால் அரசு அடக்குமுறை வரும் என்று, முன்னோடி சக்திகளை மட்டுமே திரட்டும் இடது குறுங்குழுவாத போக்கை கொண்டுள்ளனர். இதன் வளர்ச்சி போக்காக “மக்கள் அதிகாரம்” என்று இடது வாய்ச்சவடாலை செயல் தந்திர முழக்கமாக முன்வைத்துள்ளனர்.
அரசு கட்டமைப்பு நெருக்கடிக்குள்ளாகி விட்டது. இதை வீழ்த்த வேண்டும் என்று கூறுகின்றனர். ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகின்றனர். (ஒரு பக்கப்பார்வை பலமாக உள்ளது) மறுபக்கம், இதை வீழ்த்தும் மக்களின் தயார்நிலை பற்றி எதுவும் கூறுவதில்லை. எந்த மக்கள்? வீழ்த்துவார்கள் என்றும் கூறவில்லை. மக்கள் அதிகாரத்திற்கான அமைப்பின் வர்க்கத் தன்மை மற்றும் வடிவத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. (ருஷ்யாவில் “சோவியத்துகளுக்கே அதிகாரம்” என்று முழக்கமிட்டனர். சீனாவில், “உழவர் சங்கங்களுக்கே அதிகாரம்,” புரட்சிகர விவசாய கமிட்டிகளுக்கே அதிகாரம்,” “கம்யூன்களுக்கே அதிகாரம்” என்று வளர்ச்சிப் போக்கில் முழக்கங்களை முன்வைத்தனர். மக்கள் யுத்தக் கட்சி “கிராம ஆட்சி மன்றங்களுக்கே அதிகாரம்” என்ற முழக்கத்தை முன்வைத்தது.) இதற்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகர கட்சியின் நிலை என்ன? சரி இவர்களின் அமைப்பு பலம் என்ன? இவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதில்லை. புறச்சூழலை மட்டும் விளக்கி விட்டு (அதுவும் அரசு கட்டமைப்பு பற்றி மட்டும்) அகசக்திகளின் தயார்நிலையை பற்றி எதுவும் பேசுவதில்லை.
(இவர்கள் முன்பு மக்கள் யுத்தக் கட்சிக்கு சொன்ன, “குதிரைக்கு முன் வண்டியை பூட்டுவது” இவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது)
இதனால், இவர்கள் முழுக்க தன்னெழுச்சிக்கு அறைகூவல் விடுகின்றனர். இந்த தன்னெழுச்சி அராஜகவாதத்திற்கு வித்திடும் ஏனெனில், “மக்கள் அதிகாரம்” என்ற முழக்கம் செயல் தந்திர முழக்கம் என்று கூறினாலும் உண்மையில் இறுதிக் கட்டத்திற்கான மூலஉத்தி முழக்கமாகும். இதனால், உண்மையில் செயலுத்திகளற்ற அருவமான இந்த மூலஉத்தி முழக்கம் இயல்பாகவே தன்னெழுச்சியையும் அராஜகவாதத்தையுமே தோற்றுவிக்கும்.
இந்த தன்னெழுச்சி, அராஜகவாதத்திற்கான “மக்கள் அதிகாரம்” நடைமுறை சாத்தியமாகுமா? நிச்சயம் நடக்காது. அதனால் தான் இதை “இடது வாய்ச்சவடால்” என்கிறோம். மேலும், இவர்களின் உச்சக்கட்ட நகைச்சுவை என்பது தற்காப்பிலிருந்து தாக்குதலுக்கு இவர்கள் வந்துவிட்டதாக கூறுவதுதான். இதன் மூலம் அணிகளை புல்லரிக்க வைக்கின்றனர்.
உண்மையில், இவர்கள் முன்பு சொன்ன காற்றில் சண்டை போடும் கத்திச்சண்டை வீரன் “டான் குவிக்சாட்” தான் பொருத்தமாக நினைவுக்கு வருகிறான்.
இவர்களின் செயல் தந்திர முழக்கம் என்ற வரையறையானது இவர்களின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று சுயத்தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். செயல் தந்திரம் (செயலுத்தி) என்பது தனித்த ஒன்றல்ல. அது மூலஉத்திக்கு சேவை செய்கிறது. மேலும், முதன்மை முரண்பாடு, இடைக்கட்டம், குறிப்பான திட்டம் இவைகளோடு இயங்கியல் ரீதியான உறவை கொண்டுள்ளது என்று மாவோவிய கோட்பாடு கூறுகிறது. “மாவோ சிந்தனைகளை” ஏற்றுக் கொள்வதாக கூறும் இவர்கள் இந்த கோட்பாட்டு வரையறைகளை பொருத்துவதில்லை. இதனால், இவர்களின் “மக்கள் அதிகாரம்” செயல் தந்திர முழக்கம் அந்தரத்தில் நிற்கிறது.
அதாவது, ஆளும் வர்க்கத்திற்கும் ஜ் மக்களுக்குமான முரண்பாட்டின் நிலை என்ன?
வர்க்க அணி சேர்க்கையில் யார்? யார்?
இடைக்கட்டமா இறுதிக்கட்டமா?
மக்கள் அதிகாரத்திற்கான முழக்கத்தின் திட்ட கோரிக்கைகள் என்ன?
போன்ற எந்த கேள்விக்கும் இவர்களிடம் பதில் இல்லை. “மக்கள் அதிகாரத்திற்கான முழக்கம் அருவமாகவே (அப்ஸ்டிராக்ட்) முன்வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் தலைமை குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது.
“புதிய ஜனநாயகம்” இதழ் சார்ந்த அமைப்புகளின் அணிகளே! சிந்திப்பீர்!
“மக்கள் அதிகாரம்” என்ற செயல் தந்திர முழக்கத்தை கேள்விக்குள்ளாக்குவீர்!
இல்லை என்றால் இப்பொழுது இருக்கும் அமைப்பும் கரைந்து போகும் (அ) கலைந்து போகும். தமிழகத்தில் இன்று நாங்கள் தான் வேலை செய்கிறோம் என்ற சுயதம்பட்டம் எல்லாம் அமைப்பைக் காப்பாற்றாது. 35ஆண்டுகளில் சில நூறு பேரை திரட்டுவது புரட்சிகர வேலை ஆகாது. இக்காலத்தில் பல தேசங்களில் புரட்சி முடிந்து பின்னுக்கு கூட போய்விட்டன. எனவே, சிந்திப்பீர்! கேள்விக்குள்ளாக்குவீர்.
சி.பி.அய் -யை பொருத்தவரை 1950களில் வரை திட்டம் கிடையாது. பின்னர், தோழர் ஸ்டாலின் மற்றும் சோவியத் கட்சியின் வழியின் வழிகாட்டுதலில் திட்டம் மற்றும் செயல் உத்தி வழி தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், இவை எவராலும் செயல்பாட்டுக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இச்சமயத்தில் உலக அளவில் சோசலிச முகாமில் பிளவு ஏற்பட்டது. குருசேவ் தலைமையிலான சோவியத் கட்சி சமாதானத்தின் மூலமே உலக சோசலிச புரட்சி வெற்றி அடைய முடியும் என்ற திரிபுவாதத்தை முன்வைத்தனர். அதை அப்படியே ஏற்றுக்கொண்டது. சி.பி.அய். தலைமை. மேலும், இந்திய பெருமுதலாளி வர்க்கத்தை தேசிய முதலாளி வர்க்கம் என்று வரையறுத்தது. காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தியது. இதன் உச்சமாக “எமர்ஜென்சி” யை ஆதரித்தது. “இந்திரா கம்யூனிஸ்டு கட்சியாக” செயல்பட்டது.
பின்னர், என்பதுகளில் “எமர்ஜென்சியை” ஆதரித்தது தவறு என்று சுயவிமர்சனம் செய்துக் கொண்டனர். அடிப்படை ஆவணங்களை பரிசீலிக்க தீர்மானித்தனர். இன்றுவரை இவர்களால் முடிவுக்கு வரமுடியவில்லை. சிவப்புநிறக் கொடி, சுத்தி அரிவாள் என்பதைத் தவிர இவர்களிடம் மார்க்சிய அடிப்படைகள் எதுவும் இல்லை. முழுவதுமாக திரிபுவாதிகளாக சீரழிந்துள்ளனர்.
அடுத்து, சி.பி.எம்-மை பொருத்தவரை, மாவோவையே ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதுதான் “மாஸ்லைன்” “மக்களிடமிருந்து மக்களுக்கு” என்றெல்லாம் பாலபாடம் கற்க தொடங்கி உள்ளனர். குறிப்பான திட்டம், இடைக்கட்டம் என்பதெல்லாம் எப்பொழுது கற்பார்கள் என்று தெரியவில்லை. செயலுத்திகளை இவர்கள் சரியாக வகுத்து வருவதாக கூறுகிறார்கள். ஆனால், ஆளும்வர்க்க கட்சிகளுக்கெதிராகத்தான் வகுக்கிறார்கள். அதுவும் தேர்தலை ஒட்டித்தான் வகுக்கப்படுகிறது.
முதலில், காங்கிரஸ் எதிர்ப்பு என்றிருந்தது. பிறகு ப.ஜ.க எதிர்ப்பு என்று காங்கிரசை ஆதரித்தது. இப்பொழுது, திரிணாமுல் காங்கிரசை எதிர்த்து மே.வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று சீரழிந்து உள்ளது. இவர்களின் செயலுத்திகள் இவர்களின் நாடாளுமன்ற வாதத்துடன் தொடர்பு உள்ளதே தவிர மூலஉத்தியுடன் அல்ல. அதனால், மூலஉத்தியுடன் உறவில்லாத செயலுத்திகள் இயல்பாகவே திரிபுவாதத்தில் மூழ்குகின்றன.
இவர்களின் போக்கின்படியே பார்த்தாலும் கூட, இன்றைய கட்டத்தில் இந்து பாசிச எதிர்ப்பை இவர்கள் ஒருங்கிணைக்க வேண்டும். இவர்கள் ஒன்றிணைக்க திராணியற்று, தயார் நிலை அற்று இருக்கின்றனர். இடதுசாரி முன்னணி என்பதெல்லாம் பெயரளவிலானது. உண்மையில் இடதுசாரி அணித்திரட்டலுக்கு இவர்கள் தடையாக உள்ளனர் என்பதுதான் எதார்த்தமாகும். “சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம்” என்பதே திரிபுவாதமாகும்” என்பதை நடைமுறையில் நிரூபித்து வருகின்றனர்.
தோழர்களே!
கடந்த என்பதாண்டுகால பொதுமையர் இயக்கத்தில் இப்படி அடிப்படை சிக்கல்களே தீர்க்கப்படாமல் உள்ளன என்பதே எதார்த்தமாகும். குறிப்பாக, சமூகத்தின் குறித்த தன்மைக் குறித்தும், பகுதியளவு பண்பு மாற்றங்கள் குறித்தும் தெளிவற்ற பார்வைகளே இடைக்கட்டம், குறிப்பான திட்டங்கள் முன்வராததற்கு காரணங்களாகும். இப்பின்னணியிலேயே இந்த குறிப்பான திட்ட ஆவணத்தை முதன் முதலாக உங்கள் முன் விவாதத்திற்கு வைக்கிறோம். உங்களது ஆழ்ந்த, செறிவான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்,
துரை.சிங்கவேல்.
***
நமது தமிழகம் மற்றும் இந்தியா மோசமானச் சூழ்நிலையில் உள்ளது. இந்துத்துவாப் பயங்கரவாதம் மோடித் தலைமையில் ஆட்சியில் உள்ளது. நவீன பிராமனீயத்தின் மூன்று உள்ளடக்கக் கூறுகளை இந்தி, இந்து, இந்தியா என்பது எல்லாத்தளங்களிலும் மிகவும் வேகமாகப் பரவி விரவி வருகின்றது.
தமிழகத்தில் சாதியப் பயங்கரவாதம் முக்கியப் போக்காக மேலோங்கி உள்ளது. தலித் விரோதப்போக்குச் சமூகமயமாகி உள்ளது.
எல்லாம் அரசுப் பயங்கரவாதம் இந்துத்துவாப் பயங்கரவாதத்தின் இணைப்பில் நடத்தப்படுகின்றன.
இந்த அபாயகரமானச் சூழலில் புரட்சிகரச் சக்திகள் மக்களை ஓரணியில் திட்டவட்டமாகத் திரட்ட வேண்டியுள்ளது. குறிப்பான திட்டத்தைப் பார்ப்போம்!
நமது பொதுத் திட்டம்
பொதுத் திட்டம் என்பது மக்கள் சனநாயகத் திட்டமாகும். இதுவே பொதுமையங்களின் (கம்யூனிஸ்டுகளின்) குறைந்தபட்ச திட்டமாகும். சமூகமயம் (சோலிசம்) என்பது அதிக பட்சத் திட்டமாகும்.
நமது பொதுத் திட்டம் முதலாளிய சனநாயகக் கூறுகளையும் சமூகவியக் (சோசலிச) கூறுகளையும் உள்ளடக்கி உள்ளது. இதுவே மக்கள் சனநாயகம் ஆகும்.
நமது பொதுத் திட்டம் சமூகத்தின் புறநிலைப் போக்குகளின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவைப் பற்றிய மார்க்சியத் தத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விவரங்களில் இருந்து, பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குறிக்கோள்களின் திட்டமாக வரையறுக்கிறது.
நமது பொதுத் திட்டமானது புரட்சியின் கட்டத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். இக்கட்டம் மக்கள் சனநாயகப் புரட்சிக்கானக் கட்டமாகும். நமது பொதுத்திட்டமானது மக்கள் சனநாயக புரட்சி முடியும் வரை மாறாது. இதுவே தோழர் மாவோவால் பொதுத்திட்டம் என்று வரையறுக்கப்பட்டது.
திட்டத்தின் குறிக்கோள்களை வரையறுப்பதற்குச் சமூகத்தின் குறித்தத் தன்மையையும் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிலுள்ள அடிப்படை முரண்பாட்டையும் அடையாளங்காணுவது மிகவும் முக்கியமானது.
ஒரு சமூகத்தின் குறித்த தன்மையை தீர்மானிப்பதில் தீர்மானகரமான பங்கு அச்சமூகத்தின் உற்பத்தி முறைதான் ஆகும். இந்திய நாட்டின் அரசெல்லைக்குள் உள்ள சமூகத்தை பொருத்தவரை அது ஒரே சமூகமானது இல்லை என்பதே ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்டிருக்கிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய துணைக்கண்டப் பகுதியில் இயல்பாக உருவான பட்டறை முதலுடைமையை () அழித்துவிட்டு, தனது நலனுக்கான தனது மூலதன உற்பத்தியை இங்குவிட்டது. அதே சமயத்தில் இங்கு ஏற்கனவே நிலவிக்கொண்டிருந்த சாதிநிலவுடைமை, தொல்குடி சமூகங்களின் மீதும் தாக்குதலைத் தொடுத்தது மட்டுமல்லாமல், அவைகளை அரைத்தன்மையில் நீடிக்க வைத்தது. இது மட்டுமல்லாமல் தனது கட்டுப்பாட்டுக்குட்பட்டு பிராந்திய பெருமூலதனத்தையும் அனுமதித்தது. இச்செயல்போக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளைக் கொண்ட சமூகங்களின் இருத்தலை உருவாக்கியது.
அரசியல் சுதந்திரம் பெற்ற இந்திய பிராந்திய பெரு முதலாளி வர்க்கம் தனது நலனிலிருந்து கடந்த கட்டத்தின் நிலையை நீடிக்க வைத்தது. அதனால் இன்றைய இந்தியாவின் சமூகங்களின் தன்மை என்பது மூலதன (நீணீஜீவீtணீறீ) , சாதி-அரைநிலவுடைமை, அரைத்தொல்குடி உற்பத்தி முறைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்தி முறைகளின் நீடித்த இந்த நிகழ்வுப்போக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளைக் கொண்டதாக தொடக்கம் முதலே நீடிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மூலதன (நீணீஜீவீtணீறீ) , சாதி-அரைநிலவுடைமை உற்பத்திமுறைகள் நிலவுகின்றன. பழங்குடிகளின் எண்ணிக்கை மிகக்குறைவானதால் தொல்குடி உற்பத்திமுறை என்பது தமிழகத்தைப் பொருத்தவரை மிக முக்கிய உற்பத்தி முறையாக இல்லை.
எனவே, தமிழ்நாடானது இந்திய பிராந்திய பெருமுதலாளிகள் மூலதன சாதி நிலக்கிழார்£கள், ஏகாதிபத்தியங்கள் மற்றும் அதிகார வர்க்க மூலதனத்தின் சுரண்டல் காடாக உள்ளது.
மேற்கண்ட நிலையால் தமிழகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகளை கொண்டதாக தொடக்கம் முதலே நீடிக்கிறது. இன்றைய தமிழகத்தை பொருத்தவரை கீழ்க்கண்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவுகின்றன.
(1) மூலதனத்திற்கும் - உழைப்பு சக்திகளுக்கும்
(2) ஏகாதிபத்தியங்கள் - தமிழ்த்தேசிய மக்கள்
(3) சாதி-அரைநிலவுடைமை - தமிழ்த்தேசிய மக்கள்
(4) இந்திய ஒன்றிய அரசமைப்பு - தமிழ்த்தேசிய மக்கள்
(5) மூலதனங்கள் - இயற்கை
மேற்கண்ட முரண்பாடுகளில் முதல் முரண்பாடான மூலதனத்திற்கும்-உழைப்பிற்கான முரண்பாட்டில் (1) பெருமுதலாளித்துவ மூலதனம் (2) அரசு மூலதனம் (3) மூலதன-சாதி நிலக்கிழார்களின் மூலதனம் அடிப்படையாக உள்ளடங்கும்.
நமது பொதுத்திட்டம் கோருகின்ற பாட்டாளி வர்க்க அரசியல் தலைமை என்பது, பாட்டாளி வர்க்கத்தலைமையில் பொருளாதாரத்தில் பொதுத்துறை, கூட்டுறவுத்துறைகள் என்பன சமூகவியக் கூறுகளே, இருந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்றுவது தமிழகத்தை சமூகவிய (சோசலிச) சமூகமாக மாற்றமாகும்.
மக்கள் சனநாயகத்தில் பொதுத்துறை இருக்கும் பொழுதே தனியார் துறை அனுமதிக்கப்படும். கூட்டுறவுகளும் மக்கள் சனநாயகக் கட்டத்தில் தனியார் பங்குகளாகவே இருக்கும். சமூகமாக உடைமையாக்கப் படமாட்டாது.
அதேபோல், மக்கள் சனநாயகத்தில் தலைமைத் தொழிலாளி வர்க்கம் என்றால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவது அல்ல. மக்கள் சனநாயகப் புரட்சியின் இலக்குகளை (எதிரிகள்) இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம், மூலதன- சாதிநிலக்கிழார்கள், ஏகாதிபத்தியம், அதிகார வர்க்க முதலாளித்துவம் ஆகிய நால்வரையும் அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து, மக்கள் சனநாயகப் புரட்சியின் இயக்குச் சக்திகளான தொழிலாளர்கள் தலைமையில் விவசாயிகள், குட்டிமுதலாளிகள், தேசியமுதலாளிகள் ஆகிய மூன்று வர்க்கமும் பெண்கள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், பழங்குடிகள், மீனவர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினரும் கூட்டுச் சர்வாதிகாரத்தை நிறுவுவதே மக்கள் சனநாயகத்தின் அரசியல் மூலஉத்தி ஆகும்.
இடைக்கட்டம், முதன்மைமுரண்பாடு, குறிப்பான திட்டம்
நமது பொதுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம், புரட்சியின் கட்டம், அடிப்படை முரண்பாடுகள், மூலஉத்தி இவைகள் இந்த புரட்சியின் கட்டம் முடிவிலும் மாறாது. இவைகளுக்குள் இயங்கியல் ரீதியாக உறவு உண்டு.
அதேசமயத்தில் முரண்பாடுகளின் வளர்ச்சிப் போக்கில் ஏற்படும் பகுதியளவு பண்பு மாற்றங்களுக்கேற்ப மேற்கண்டவைகளில் பகுதியளவு மாற்றம் இருக்கும். இம்மாற்றங்களே இடைக்கட்டங்களாகவும் முதன்மை முரண்பாடாகவும், குறிப்பான திட்டங்களாகவும் அய்க்கிய முன்னணிகளாகவும் வளர்ச்சிப்போக்கில் உருவாகின்றன. பகுதியளவு பண்பு மாற்றத்தைப் பற்றி இன்னும் மாவோவின் கூற்றில் பார்ப்போமானால்,
“...கூட்டுப் பண்ணைமுறை முழுவதும் வலுவாக்கப்பட்டது” என்று இதன் 407 ஆவது பக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. “முழுமையான வலுவாக்கம்”- ஒருவரை அமைதி உற்றவராக்கும். அது எப்படி “முழுமையாக” இருக்க முடியும்? மனிதக் குலத்தின் தொடக்கத்திலிருந்து ஒருவரும் இறந்துப் போகாமல் எல்லோரும் முழுமையாக வலுப்படுத்தப்பட்டிருந்தால் என்னவாகும்? அது எந்தவகையான உலகமாக இருந்திருக்கும்! இந்தப் பிரபஞ்சத்தில், நமது உலகில்,எல்லாப் பொருள்களும் இடைவிடாமல் பிறக்கின்றன, வளர்கின்றன அழிந்து போகின்றன. பட்டுப்பூச்சியின் வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம், கடைசியில் இது இறந்து போக வேண்டும் என்பது மட்டுமல்ல, இது வாழ்கின்ற காலத்தில் நான்கு கட்ட வளர்ச்சியைக் கடந்தாக வேண்டும். முட்டை, பட்டுப்புழு, கூட்டுப்புழு மற்றும் பட்டுப்பூச்சி, ஒரு கட்டத்திலும் இது முழுமையாக வலுவாக்கப்பட முடியாது. கடைசியில் பட்டுப்பூச்சி இறந்து போகிறது. அதன் பழைய சாராம்சம் புதிய சாராம்சமாகிறது. (இதுபல முட்டைகளை இட்டுச்செல்வது போல) இது ஒரு குணாம்சமாற்றம். உண்மையில் முட்டையிலிருந்து புழுநிலைக்கு, புழுநிலையிலிருந்து கூட்டுப்புழு நிலைக்கு, கூட்டுப்புழுவிலிருந்து பூச்சிநிலைக்குச் செல்வது அளவு நிலைக்கு, மாற்றத்தை காட்டிலும் கூடுதலான ஒன்று என்பது தெளிவு. குணமாற்றமும்கூட இதில் இருக்கிறது. ஆனால் இது பகுதி அளவிலான குணமாற்றமாக இருக்கிறது. ஒரு மனிதனும்கூட, இறப்பை நோக்கிய வாழ்க்கையின் ஊடாக மாறுபட்ட நிலைமைகளில் அனுபவங்களைப் பெறுகிறான். குழந்தைப் பருவம், பதின்பருவம், இளமைப்பருவம், முதிர் இளமைப்பருவம் மற்றும் முதுமைப்பருவம் மனிதர்கள் வாழ்க்கையிலிருந்து மரணத்திற்குச் செல்வது அளவுமாற்றம் நடைமுறையாக இருக்கிறது.
அதேசமயம், பகுதியளவான குணமாற்ற நடைமுறையையும் அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். இளமைக்காலத்திலிருது முதுமைக்குச் செல்லும்போது குணமாற்றம் இல்லாமல் அளவுமாற்றம் மட்டுமே அதிகரிக்கிறது என்று எண்ணுவது நகைப்புக்குரியதாக இருக்கும். மனித உறுப்பின் செல்கள் இடைவிடாமல் பிரிந்து கொண்டேயிருக்கின்றன. பழையவை இறந்து அழிகின்றன. புதியவை பிறந்து வளர்கின்றன. மரணத்தின் போது முழுமையான குணமாற்றம் இருக்கிறது. இதற்கு முந்தைய அளவு மாற்றங்களின் மூலமாகவும் அதே போல் அளவு மாற்றங்களின் போதே ஏற்படும் பகுதியளவிலான குணமாற்றங்களின் மூலமாகவும் ஒருவர் இந்த நிலைக்கு வருகிறார். அளவு மாற்றமும் குணமாற்றமும் எதிர்மறைகளின் ஒற்றுமையாகும். அளவு மாற்றங்களுக்குள்ளேயே பகுதியளவு குணமாற்றங்களும் இருக்கின்றன. குணமாற்றங்களுக்குள்ளே அளவு மாற்றங்கள் இல்லை என்று ஒருவர் சொல்ல முடியாது. குணமாற்றங்களுக்குள்ளும் அளவு மாற்றங்கள் இருக்கின்றன.
மாற்றத்தின் நீண்ட நடைமுறையில், இறுதியான அளவு மாற்றத்துக்கு செல்வதற்கு முன்னால், அந்த பொருள் இடைவிடாத அளவு மாற்றங்கள் மற்றும் பகுதியளவான நல்ல பலகுணமாற்றங்களை கடந்து சென்றாக வேண்டும். ஆனால், இறுதியான குணமாற்றம் என்பது, பகுதிகுணமாற்றங்களும் கணிசமான அளவு மாற்றங்களும் இல்லாமல் ஏற்பட முடியாது”,-மாவோ
மாவோவின் இந்த பகுதியளவு பண்பு மாற்றத்தை பற்றிய பங்களிப்பு மார்க்சிய தத்துவத்திற்கு மாபெரும் பங்களிப்பு ஆகும். இது ஒரு பொருளின் வளர்ச்சிப்போக்கை துல்லியமாகவும் ஆழமாகவும் விளங்கிக்கொள்ள உதவுகிறது. இது சமூக வளர்ச்சியில் இடைக்கட்டங்களை அடையாளங்காண உதவுகிறது.
இடைக்கட்டம்
சீனப்புரட்சியை பற்றிக் குறிப்பிடும் பொழுது மாவோ, “நமது புதிய ஜனநாயக பொதுத்திட்டம் முதலாளிய ஜனநாயகப் புரட்சிக்கட்டம் முழுவதும் அதாவது பல பத்தாண்டுகளாக மாறாமல் இருக்கும். ஆனால் இக்கட்டத்தின் போது ஒவ்வொரு வளர்ச்சிப்படியிலும் நிலைமைகள் மாறியுள்ளன. அல்லது மாறிக் கொண்டிருக்கின்றன” என்கிறார்.
அதாவது இக்கட்டத்தின் போது ஒவ்வொரு வளர்ச்சிபடியிலும் மாற்றம் இருக்கும் என்கிறார். இதையே இடைக்கட்டம் என்கிறோம்.
இடைக்கட்டம் என்பது முரண்பாடடன் வளர்ச்சியால் உருவாகிறது.குறிப்பாக முதன்மை முரண்பாட்டின் வளர்ச்சியால் உருவாகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் நிலவுப்பொழுது முதன்மை முரண்பாடு ஒன்று ஆதிக்கம் செய்கிறது. இம்முரண்பாடு தீர்க்கப்படும்பொழுதோ, பகுதிகளை தீர்க்கப்படும்பொழுதோ, வேறு முரண்பாடுகள் கூர்மையடையும் பொழுதோ இடைக்கட்டங்கள் மாறுகின்றன. குறிப்பான திட்டம் மாறுகின்றது.
இன்றைய கட்டத்தை பொருத்தவரை இந்திய ஆளும் வர்க்கங்களையும் இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கத்தால் கடந்த 25 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் உலகமயம், தாராளமயம், தனியார்மயக் கொள்கைகள் சமூகத்தில் பல்வேறு முரண்பாடுகளை கூர்மையடையச் செய்துள்ளன. இதுவே முதன்மையாக உள்ளது. எனவே, இன்றைய இடைக்கட்டம் உலகமய, தாராளமண, தனியார்மய எதிர்ப்பு கட்டம் ஆகும்
முதன்மை முரண்பாடு
“சிக்கலான ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றில் இன்றியமையாத ஒன்று முதன்மை முரண்பாடாகும். இதன் இருத்தலும் வளர்ச்சியும் பிறமுரண்பாடுகளின் இருத்தலையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கவோ செல்வாக்கு செலுத்தவோ செய்கின்றன”. மாவோ
“ஆகவே எந்த ஒரு வளர்ச்சிப் போக்கிலும் ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் இருக்குமானால், அவற்றில் ஒன்று முதன்மை முரண்பாடாக இருக்கும். அது தலைமை பங்கை வகிப்பதோடு நிர்ணயம் செய்யும் பங்கையும் வகிக்கும். மற்றவை, இரண்டாம் நிலையில், கீழ்ப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் உடைய எந்த ஒரு சிக்கலான வளர்ச்சிப் போக்கையும் நாம் ஆராயும் பொழுது, அதன் முதன்மை முரண்பாட்டைக்காண நாம் அனைத்து வழிகளிலும் முயலவேண்டும். ஒருமுறை இம்முதன்மை முரண்பாட்டை இறுகப்பற்றியதும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு காணலாம். இந்த முறைதான் முதலாளிய சமுதாயம் பற்றிய தமது ஆய்வில் மார்க்சு நமக்குக் கற்றுத்தந்துள்ள முறையாகும். ஏகாதிபத்தியத்தையும், முதலாளியத்தின் பொது நெருக்கடியையும் பற்றி ஆராய்ந்த போதும் சோவியத் பொருளாதாரம் பற்றிய ஆய்வை மேற்க்கொண்ட போதும் லெனினும் ஸ்டாலினும் நமக்குக் கற்றுத் தந்துள்ள முறையும் இதுதான். இதை புரிந்துக் கொள்ளாத அறிவாளிகளும் செயல்வீரர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இதன் விளைவாக அவர்கள் குழப்பத்திற்குள்ளாகின்றனர். எனவே, அவர்களால் அப்பிரச்சினையின் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான வழியைக்காண முடியாமல் போவது இயல்பே.” -மாவோ
மேற்கண்ட மாவோவின் கூற்றுப்படி, ஒன்றுக்கு மேற்பட்ட முரண்பாடுகள் நிலவும் சமூகத்தில் முதன்மை முரண்பாடே அனைத்து முரண்பாடுகளையும் ஆதிக்கம் செய்யும் போக்கை கொண்டிருக்கிறது என்பது விளங்குகிறது. இம்முதன்மை முரண்பாட்டை அடையாளங்காணுவதும், இதை தீர்ப்பதற்கான குறிப்பான திட்டத்தையும் செயல் உத்திகளையும் வகுத்து செயல்படுவதில் தான் பாட்டாளி வர்க்க கட்சியின் மக்கள் இயக்கத்தின் வளர்ச்சியும் வெற்றியும் உள்ளது.
இம்முதன்மை முரண்பாடு அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே எழுகிறது. இதன் பொருள் இம்முரண்பாடுகளில் ஒன்று தான் முதன்மை முரண்பாடாக வரும் என்பதல்ல. முதன்மை முரண்பாடு கீழ்க்கண்ட முறைகளில் வெளிப்படுகிறது.
(1) அடிப்படை முரண்பாட்டின் முழுமை வடிவத்திலேயே வரும்.டுத்துக்காட்டாக, இந்தியா பாகிஸ்தான் போர்களின் போதும், இலங்கையில் இந்தியா ஆக்கிரமிப்பு படைகளை அனுப்பியபோதும் இந்திய விரிவாதிக்கத்திற்கெதிரான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இருந்தது.
(2) ஒரே அடிப்படை முரண்பாட்டின் முதன்மைக் கூறில் ஒருபிரிவுக்கு எதிராக முதன்மை முரண்பாடு வெளிப்படும்.
எ.கா. அதிகாரவர்க்க முதலாளித்துவம் என்ற முதன்மைக் கூறில் ஒருபிரிவாகிய இந்திராகாந்தியின் பாசிசத்திற்கெதிராக முதன்மை முரண்பாடாக அவசரநிலை காலத்தில் எழுந்தது.
(3) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை முரண்பாடுகள் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வெளிப்படும்.
எ.கா இந்திய பெருமுதலாளி வர்க்கமும் மூலதன-நிலவுடையமும் இணைந்து ஒரே முதன்மை முரண்பாடாக வரும் அல்லது ஏகாதிபத்தியமும் இணைந்து வரலாம்.
மேற்கண்ட வடிவங்களிலேயே அடிப்படை முரண்பாட்டில் இருந்து முதன்மை முரண்பாடு எழுகிறது.
இன்றையைக் கட்டத்தை பொருத்தவரை அனைத்து அடிப்படை முரண்பாடுகளும் கூர்மையடைந்துள்ளன. இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம், மூலதன-சாதி நிலக்கிழார்கள், ஏகாதிபத்தியம், அதிகாரவர்க்க முதலாளித்துவம் ஆகிய ஆளும்வர்க்கங்களும் முதன்மை முரண்பாட்டின் ஆதிக்க கூறாக உருவாகியுள்ளன. எதிர்க்கூறாக இந்தியாவின் அனைத்து மொழிவழித் தேசிய இனங்கள் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் மற்றும் பழங்குடி மக்கள் மற்றொரு கூறாகவும் உள்ளன.
அதாவது, இந்திய ஆளும்வர்க்கங்களுக்கும்-மொழிவழித் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளுக்கான முரண்பாடே முதன்மை முரண்பாடாக இன்றைய கட்டத்தில் உள்ளது. இதுவே தமிழகத்தில் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்- தமிழ்த் தேசிய மக்களுக்குமான (உழைக்கும் மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள்) முரண்பாடே முதன்மை முரண்பாடாகும்.
இம்முரண்பாட்டையும் இதர முரண்பாடுகளையும் தீர்ப்பதற்கான திட்டமே குறிப்பான திட்டமாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கான நமது செயலுத்தியும் வகுக்கப்பட வேண்டும்.
குறிப்பான திட்டம்
“நமது கட்சியிடம் இந்த பொதுத்திட்டத்தை அடிப்படையாக உடைய குறிப்பான திட்டம் ஒவ்வொரு காலபகுதிக்கும் இருந்தே தீரவேண்டும். நமது புதிய ஜனநாயக பொதுத்திட்டம் முதலாளிய ஜனநாயக புரட்சிக்கட்டம் முழுவதும் அதாவது பலபத்தாண்டுகளாக மாறாமல் இருக்கும். ஆனால் இக்கட்டத்தின் போது ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் நிலைமைகள் மாறியுள்ளன அல்லது மாறிக்கொண்டிருக்கின்றன. நாம் அதற்கேற்ப நமது குறிப்பான திட்டத்தை மாற்றவேண்டியுள்ளது என்பது இயல்பே. எடுத்துக்காட்டாக, நமது புதிய ஜனநாயக பொதுத்திட்டம் வடக்கத்திய படையெடுப்பு, விவசாயப் புரட்சிப்போர், ஜப்பானுகு எதிரான எதிர்ப்போர் ஆகிய காலப்பகுதிகளின் முழுவதும் அப்படியே இருந்துள்ளது. ஆனால் நமது குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் நமது நண்பர்களும் எதிரிகளும் மூன்று காலப்பகுதிகளிலும் மாறியுள்ளனர்.”- மாவோ
தோழர் மாவோ சீனாவைப் பற்றி குறிப்பிட்டது போலவே தமிழக இந்திய சூழலிலும் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்துள்ளன. இந்திய-பாகிஸ்தான் போர்களின் போதும், ஈழதமிழர்களை கொன்று குவிக்க இந்தியப் படைகளை அனுப்பிய போதும், இந்திராகாந்தி அவசரநிலைக் காலத்திலும் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் இருந்துள்ளன.
இன்றைய கட்டத்திலும் உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளினால் குறிப்பான திட்டத்தில் மாறுதல்கள் உருவாகியுள்ளன. அவற்றைப் பார்ப்போம்!
தமிழக மக்கள் பின்வரும் சூழலில் உள்ளனர்.
(1) உலகமயம், தாராளமயம், தனிமயம் என்ற “அக்டோபஸின்” கைகளில் தமிழகம் முழுவதுமாக சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
(2) மைய அரசியல் இந்துத்துவா பயங்கரவாதம் ஆட்சியில் உள்ளது.
(3) தமிழகத்தில் சாதி பயங்கரவாதம் முக்கிய போக்காக எழுந்துள்ளது.
மேற்கண்ட அம்சங்களுக்கெதிராக ஒன்றுதிரண்டு சனநாயக மாறுதல்களுக்காக போராடுவது அவசரமாக தேவைப்படுகிறது.
இந்த சூழ்நிலைமைகளில் நமது குறிப்பான திட்டம் என்பது அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதெனில் மக்களின் உடனடிக் கோரிக்கைகள் என்ன?
பின்வருவனவற்றை பார்ப்போம்!
* பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்ப்போம்!
* பெரு மூலதனங்களை கட்டுப்படுத்துவோம்!
* பன்னாட்டு மூலதனங்களை வெளியேற்றுவோம்!
* சிறப்பு பொருளாதார மண்டலங்களின் சிறப்பு சட்டங்களை இரத்து செய்யப் போராடுவோம்!
* தொழிலாளர் சட்டங்களை பாதுகாப்போம்!
* வேலையின்மையை இல்லாததாக்குவோம்!
* தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டிற்காக போராடுவோம்!
* சிறு,குறு தொழில்களை உத்தரவாதப்படுத்துவோம்!
* கூட்டுறவுகளை முதன்மைப்படுத்துவோம்!
* தொழில்துறை உற்பத்தியை முதன்மைப்படுத்துவோம்!
பங்குச்சந்தை பொருளாதாரத்தை அடியோடு வீழ்த்துவோம்!
* பன்னாட்டு, பெருமுதலாளிகளுக்கான சலுகைகளை எதிர்த்து போராடுவோம்!
* விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவைகளுக்கான மானியங்களுக்கு போராடுவோம்!
* கல்வியை வணிகமயமாக்கலை எதிர்ப்போம்!
* அனைவருக்கும் ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசக்கல்வி, தாய்மொழிக் கல்விக்காக போராடுவோம்!
* மருத்துவத்தை அரசே ஏற்று நடத்தப் போராடுவோம்!
* அனைவருக்கும் இலவச சுகாதாரத்தை வழங்குவோம்!
* கல்பாக்கம், கூடங்குளம், நியுட்ரீனோ நாசகார திட்டங்களை எதிர்ப்போம்!
* மீத்தேன் போன்ற பாலைவனமாக்கும் திட்டங்களை எதிர்ப்போம்!
* வேகமான நகரமயமாக்கலை தடுத்து நிறுத்துவோம்!
* விவசாய நிலங்களை பாதுகாப்போம்! நிலப்பறிப்பு மசோதாவை முறியடிப்போம்!
* விளைப் பொருள்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்வோம்!
* விவசாய கடன்களை இரத்து செய்ய கோருவோம்! கோவில், மடத்து நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கும் பிரித்துக் கொடுப்போம்!
* கூட்டுப் பண்ணைகளை முதன்மையாக்குவோம்!
* இயற்கை வளங்களின் மீதான தனியார் ஆதிக்கத்தை முறியடிப்போம்!
* மணல் கொள்ளையை எதிர்ப்போம்! கல்குவாரியை பாதுகாப்போம்!
* காட்டுவளங்களை பாதுக்காப்போம்! பழங்குடிகளை மீள் குடியமர்த்துவோம்!
* கடல்வளத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதை எதிர்ப்போம்!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்!
* பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் கிடைக்க போராடுவோம்!
* பெண்கள் மீதான வன்கொடுமைகளை கடுமையாக எதிர்போம்!
* சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம்!
* இந்துத்துவா பாசிசத்தை முறியடிப்போம்!
* இந்துத்துவா பயங்கரவாதத்தை சமரசமின்றி எதிர்ப்போம்!
* மதச்சிறுபான்மையினரின் வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவோம்!
* சாதி ஆணவக் கொலைகளை எதிர்ப்போம்! சாதிக்கலப்புத் திருமணங்களை பாதுகாப்போம்! வளர்த்தெடுப்போம்!
* தலித்துகள் மீதான சாதி வன்கொடுமைகளை எதிர்ப்போம்!
* தலித்துகள் மீதான சாதி தீண்டாமைகளை எதிர்ப்போம்!
* சாதி பயங்கரவாதத்தை சமரசமின்றி எதிர்ப்போம்!
* ஒன்றிய (மைய) அரசின் அதிகார மையப்படுத்துதலை எதிர்ப்போம்!
* வாட்வரி, நி,ஷி,ஜி போன்ற வரிவிதிப்புகளை எதிர்ப்போம்!
* “அனைத்து அதிகாரங்களும் தேசிய குடியரசுகளுக்கே” (மாநிலங்களுக்கே) என்று முறியடிப்போம்!
* சுதந்திர குடியரசுகளின் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவோம்!
* காவிரி ஆணையத்தை அமைக்கக் கோரி போராடுவோம்!
* சர்வதேச நதிநீர் சட்டத்தின்படி அனைத்து நதிநீர் சிக்கலையும் தீர்ப்போம்!
* முல்லைப் பெரியாறு ஆற்று உரிமையை பாதுகாப்போம்!
* அனைத்து விதமான கருப்புச் சட்டங்களையும் திரும்பப் பெற போராடுவோம்!
* அரசு பாசிசமயமாவதை எதிர்ப்போம்!
* அரசு பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
* மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக் கோரி போராடுவோம்!
* ஊழல் நிர்வாகத்தை எதிர்ப்போம்!
* விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை எதிர்த்து போராடுவோம்!
மேலே கோடிட்டுள்ள தமிழக மக்களின் உடனடிக் கோரிக்கைகள் அல்லது குறிப்பான திட்டம் பற்றி மேலும் சில முக்கிய சிக்கல்களுக்கான விளக்கைப் பார்ப்போம்!
(1) தாராளமய, தனியார்மய, உலகமயமாக்கலை எதிர்ப்போம்!
1947 அதிகாரமற்றத்திற்குபின் அமைந்த நேருவின் காங்கிரசு அரசாங்கம் முதலில் அமெரிக்க, சோவியத் நாடுகளின் முரண்பாடுகளை பயன்படுத்தியது. பின்னர், பெருமுதலாளிகளின் கோரிக்கையான அரசே உள்கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கேற்ப பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது. அரசு நிதிநிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இப்போக்கு இந்திராகாந்தி ஆட்சியிலும் தெதடர்ந்தது.
பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்து, அரசுநிதி நிறுவனங்களைச் சார்ந்து பெருமுதலாளிகள் தங்களை பலமாக வளர்த்துக் கொண்டனர். வளர்த்தலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கோரினர். இதனால் இராஜீவ்காந்தி ஆட்சியில் புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் முன்வைக்கப்பட்டன. நரசிம்மராவ் காங்கிரசு ஆட்சியில் உலகவர்த்தக கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உலகமய மாக்கம் என்று விரிவுப்படுத்தப்பட்டது.
கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக தாராளமயம், தனியார்மயம், உலகமயம் மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுதுறை நிறுவனங்களில் மிகவேகமாக 10% முதல் 40% வரை தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த வேகத்தின் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதுதான். முதலில் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில்தான் தனியார் மூலதனம் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக லாபமாக இயங்கும் துறைகளில் தான் தனியார் மூலதனங்கள் குவிகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிவழங்கி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை எந்த சட்டங்களும் செல்லாத காலனிய பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால், வரிஏய்ப்பு செய்தது மட்டுமல்லாமல் கொள்ளை இலாபப் சம்பாதித்துவிட்டு மிகச்சாதாரணமாக “நோக்கியா” கம்பெனி மூடிவிட்டுச் சென்றுவிட்டது. தொழிலாளர் சட்டங்கள் இங்கு செல்லாது. தொழிற்சங்கங்களுக்கு அனுமதி இல்லை. தொழிலாளர்கள் பெரும்பாலும் ஒப்பந்த தொழிலாளர்களாக அமைக்கப்படாத தொழிலாளர்களாகவே உள்ளனர். எந்த நிமிடமும் வீதியில் தூக்கியெறியக்கூடிய உத்தரவாதமற்ற நிலையே தொழிலாளர்கள் நிலையாகும்.
பெண்கள் நவீன உற்பத்தியில் பெருமளவு ஈடுபடுத்தப்படுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல் மலவு உழைப்பிற்காக அனைத்துத் தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். எந்தவித உரிமையும்யற்று கடுமையாக ஆடுமாடுகள் போல் சுரண்டப்படுகின்றனர்.
நரேந்திர மோடி அரசு நிலப்பறிப்பு மசோதாக்கள் மூலம் விவசாயிகளை நிரந்தரமாக நிலங்களை விட்டு வெளியேற்றுகிறது. 2013 மசோதாவில் விவசாயிகளின் 70% பேரின் கருத்து கேட்பு என்றிருந்த வரியை நீக்கி, விவசாயிகளின் ஒப்புதல் தேவை இல்லை என்று ஒரு பாசிச சட்டத்தை கொண்டு வருகிறது. ஒருபக்கம் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரிவழங்குகிறது. விவசாயத்திற்கு அனைத்து மானியங்களையும் இரத்து செய்கிறது.
கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு காட்டு வளங்கள் முழுமையாக தாரைவார்க்கப்படுகின்றன. பழங்குடிகள் வனங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்.
கடல் வளங்கள் பட்டாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டு மீனவர்களை கடலில் இருந்து வெளியேறுகின்றனர்.
கல்வியும், சுகாதாரமும் வணிகமயமாக்கியதுதான் விளைவு உழைக்கும் மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வியும், சுகாதாரமும் எட்டாக்கனியாகிவிட்டன.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கடந்த இருபதாண்டுகளில் அனைத்து தளங்களிலும் பரவி விரவி இருக்கிறது. இதுவே இன்று முதன்மை சிக்கலாக முன்னவந்துள்ளது. தீர்க்க வேண்டிய முதன்மை முரண்பாடாக முன்நிற்கிறது.
எனவே, இச்சிக்கலை தீர்ப்பது முக்கியமாகிறது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்திற்கெதிராக தமிழ்த்தேசிய பொருளாதாரம் கட்டியமைக்கப்படவேண்டும். இது கூட்டுறவு, பொதுத்துறை கூட்டுப்பண்ணைகள், தமிழ்த்தேசிய சந்தையை அடிப்படைக் கொண்ட தனியார் மூலதனத்த்தயும் கொண்டிருக்கும். இதுவே மாற்று பொருளாதாரக் கொள்கையாக விளங்கும்.
இந்துத்துவா பயங்கரவாதத்தை வேரோடு வீழ்த்துவோம்!
இந்துத்துவா என்பது நவீன பிராமனீயத்தின் கூறாகும். இது பண்டைய பிராமனீயத்தின் வர்ணக்கேட்பாட்டையும், இடைக்கால பிராமனீயத்தின் சாதிய நிலவுடைமையையும், பெண்ணடிமைத்தனத்தையும் மூடபழக்க வழக்கங்களையும் உட்கூறுகளாகக் கொண்டது.
இந்துமதம் என்பது பிரிட்டிசாரின் பதிவுக் குறிப்பிற்காக கொண்டுவரப்பட்டது. இதற்குமுன் இந்துமதம் என்ற ஒன்று கிடையாது. இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் இந்துக்கள் என்று பிரிட்டிசார் குறிப்பிட்டனர். அதுதான் இன்றுவரை வழக்கத்தின் உள்ளது.
தமிழகத்தில் சைவ, வைணவ மற்றும் அதிகமாக சிறுதெய்வ வழிபாடுமே உள்ளது. இவைகளே இந்துக்களாகவே அடையாளம் காணப்படுகிறது.
பிரிட்டீஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளாக ஆர்-எஸ்-எஸ், கும்பல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் மதத்தை முன்நிறுத்தி கலவரங்களை உண்டுபண்ணியது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பெரும் கலவரங்களை உருவாக்கியது. இக்கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அரசியல் பிரிவாக செயல்பட்ட பாரதீய ஜனசங்கம் என்ற இந்துத்துவா கும்பல் 1980க்கு பிறகு பாரதீய ஜனதா என்ற அரசியல் கட்சியாக செயல்படத்துவங்கியது. கோவிந்தாச்சார்யா திட்டத்தினடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகிள் கணிசமான அளவில் அணிதிரட்டப்பட்டனர்.
பின்னர், பாபர் மசூதி இடிப்பை நடத்தினர். இதன்மூலம் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடந்தன. 1999ல் வாஜ்பாய் தலைமையில் மைய (ஒன்றிய) அரசில் ஆட்சியில் அமர்ந்தனர். இதை ஒட்டியே குஜராத்தில் நரவேட்டை நாயகன் நரேந்திர மோடி தலைமையில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
அதுவரை கலவரங்கள் மூலம் அப்பாவி மக்களை கொன்று கொண்டிருந்த இந்துத்துவா கும்பல், “அபினவ்பாரத்” என்ற இந்துத்துவா இராணுவ பயங்கரவாதக் கும்பல் ஒன்றை உருவாக்கி, இந்தியாவெங்கும் மசூதி, தொடர்வண்டி போன்ற இடங்களில் குண்டுகளை வைத்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது. இதில் சாமியார்கள் மட்டுமல்லாமல் இராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இது அரசு எந்திரத்தில் இந்துத்துவ பயங்கரவாதிகளினி ஊடுருவல் ஆழமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
மேற்கண்ட வரலாற்று போக்கிலேயே 2014ல் தனிப்பெரும் கட்சியாக மையத்திலே பா-ஜனதாகட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இக்கட்டத்தில் மூன்று பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாட்டிறைச்சி உண்டதற்காக ஒருவர் கொல்லப்பட்டார். எல்.எல்.ஏக்கள் தாக்கப்படுகின்றனர். நாள்தோறும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மைய அரசின் அமைச்சர்கள் பேசுகின்றனர். இவைகள் முக்கிய சிக்கலாக மாறுகின்றது. சென்னை (மி.மி.ஜி) பெரியார்-அம்பேத்கார் மாணவர்களின் படிப்பு வட்டம் மீது தாக்குதல், ஐதராபாத் மாணவர் மைய அமைச்சர்களின் தலையீட்டால் தற்கொலைகள் டெல்லி மாணவர் தலைவர் கனையா மீது தேசத்துரோக வழக்கு என்று மாணவர்களின்” மீது பாசிச தாக்குதல்.
மறுபக்கம் எனது எசமானர்களுக்கு விசுவாசமாக பலசட்டங்கள் மௌனமாக நிறைவேற்றப்படுகின்றன. இச்சட்டங்களை மக்கள் கவனிக்காமல் மேற்கண்டவைகள் திசைத்திரும்பப்படுகின்றன.
இந்துத்துவா ஆட்சி கட்டிலில் உள்ளது மட்டும் அபாயம் அல்ல. அது அரசு எந்திரங்களில் ஊடுருவி உள்ளது. சமூக அடித்தளத்தில் வணிகர்கள், நடுத்தர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்கிறது.
தமிழகத்தை பொருத்த வரையில் இந்துத்துவா கும்பல் சாதியடிப்படையில் திரட்டமுயற்சி செய்கிறது. முதலில் நாடார்கள், தேவர்கள் மத்தியில் செயல்படத் துவங்கிய இக்கும்பல் கவுண்டர்களை அணிதிரட்ட முயற்சி செய்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சாதிக்கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்டித் தேர்தலை சந்தித்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கெதிராக கவுண்டர் சாதி ஆதிக்க சக்திகள் திரண்ட பொழுது அதன் பின்னணியில் பி.ஜே.பி. இருந்தது. இப்படி சாதியை குறுக்கு வழியாக வைத்து தமிழகத்தில் வேனுன்ற பார்க்கிறது.
இந்துத்துவா பாசிசத்திற்கான வளர்ச்சி இதற்கெதிரான முரண்பாட்டை முக்கிய முரண்பாடாக வளர்த்து வருகிறது.
இதன் வளர்ச்சிப் போக்கு அரசியல் களத்தில் முதன்மை முரண்பாடாக வருவதற்கான சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன.
இப்படிப்பட்ட அபாயகரமான சூழலை எதிர்த்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எனவே, அனைத்து, இடதுசாரி சக்திகளையும் இந்து பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு அணிதிரட்ட வேண்டும். இதை நமது முக்கிய கடமையாக மேற்கொள்ள வேண்டும்.
இந்துத்துவா முன்வைக்கும் பழைமைவாத பண்பாட்டிற்கெதிராக புதிய சனநாயப் பண்பாட்டை, புதிய தமிழ்த்தேசியப் பண்பாட்டை வவர்க்க வேண்டும். அதாவது, சனநாயகப் பூர்வமான, அறிவியல்பூர்வமான பண்பாடு வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சாதி-நிலவுடைமை ப் பண்பாடு முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டும்.
(3) அரசு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்
அரசு பயங்கரவாதம் என்பது அரசே மக்கள் மீது ஏவிவிடும் அடக்குமுறைகளாகும். அடக்குமுறை என்றே தனது வழிமுறையாக அரசு மாற்றிக் கொள்கிறது.
இந்தியாவில் 1947க்கு பிறகு அதிகாரத்தில் அமர்ந்த பெருமுதலாளிகள் சாதி-நிலவுடைமையை முற்றிலுமாக அழிக்காமல் சமரசம் செய்துக் கொண்டு நீடிக்கச் செய்தனர். இப்போக்கு கிராமப்புற பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது. பசுமைப்புரட்சிகள் மூலம் இந்நெருக்கடியை தணிக்க முயற்சி செய்தனர். இதனால் தணியவில்லை. 1967ல் நக்சல்பாரியில் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை ஒட்டி உருவான இ.க.க. (மா.லெ) கட்சி செயல்பட்ட இடங்களில் கடுமையாக அடக்குமுறை ஏவப்பட்டனர். ஆளும்வர்க்கங்களும் எழுபது காலக்கட்டத்தை சிவப்பு அபாயமாக அலறி அறிவித்தன.
பின்னர், பங்களாதேஷ் விடுதலைப் போராடடத்தை ஒட்டி இந்தியா தலையீட்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் வெடித்தது. இது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. நாடெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.
மறுபக்கம் ஆளும்வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்தன. பாசிச இதிராகாந்திக்கெதிராக ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணிதிரண்டன. இந்திராகாந்தி கடும் அடக்குமுறையை ஏவினார். 1978ல் அவசரநிலை (மெர்ஜென்சி) கொண்டு வரப்பட்டது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள், புரட்சியாளர்கள் என ஆயிரக்கணக்கில் “மிசா” சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
1980ல் நதிநீர் பங்கீட்டிற்காக பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆயுத போராட்டமாக மாறியது இந்திராகாந்தி பாசிச அரசு பொற்கோவிலில் இராணுவத்தை அனுப்பி பித்தான்வாலே தலைமையிலான நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்றனர். பஞ்சாப் முழுவதும் அடக்குமுறைக் கட்டவிழ்த்துவிடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (ழி.ஷி.கி) கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் கபடவேடதாரி எம்.ஜி.ஆர் ஆட்சியில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குண்டர் தடுப்புச்சட்டமும் தேசிய பாதுகாப்புச் சட்டமும் (ழி.ஷி.கி) முதலில் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் புரட்சியாளர்கள் மீதும் சேலம்-தருமபுரியில் போடப்பட்டது. நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் வடாற்காடு- தருமபுரி மாவட்டங்களில் வெறிநாய் தேவா£ரம் தலைமையில் தோழர்பாலன், கண்ணாமணி உட்பட 26பேர் படுகொலை செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தை எம்.ஜி.ஆர். அடக்குமுறை களமாக மாற்றினார். பின்னர், கருணாநிதி, ஜெயலலிதா என்று இன்றுவரை தருமபுரியில் அடக்குமுறை தொடர்கிறது.
1991க்கு பிறகு இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தடா கருப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் பலமாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலும் புரட்சியாளர்களும், விடுதலைப்புலிகளும் கைது செய்யப்பட்டனர்.
இச்சட்டம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் அய்க்கிய முன்னணி அரசு இச்சட்டத்தை நீக்கியது.
பின்னர் பி.ஜே.பி. வாஜ்பாய் அரசு பொடா கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழகத்தில் அ.தி.முக. ஜெ. அரசு புரட்சியாளர்கள் மற்றும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மீது மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீதும் பொடா சட்டத்தை ஏவியது. பொடா சட்டத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர், ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான கூட்டணி மன்மோகன் அரசு “பொடா” சட்டத்தை நீக்கியது. ஆனால் “பொடா” சட்டத்திற்கு பதிலாக (ஹி.லி.றி.கி) என்ற “பொடா” சட்டத்தை த கொண்டு வந்தது. இதனால், சத்தீஸ்கரில் சனநாயகவாதியான டாக்டர் “பிளாய்க்சென்” இச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டனர். இதற்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் இன்றைய வளர இச்சட்டம் தொடர்கிறது.
உலக வர்த்தக கழகம் உலகமயமாக்கலை கொண்டு வந்தபொழுது, அய்.நா.சபை கருப்புச்சட்டங்களை இயற்ற வலியுறுத்தத் தொடங்கியது. இதன் பிறகு அமெரிக்காவில் “பேட்ரியாட்” என்ற கருப்புச் சட்டமும் இதை தொடர்ந்து இந்தியாவில் “பொடா” சட்டமும் கொண்டு வரப்பட்டது. உலகமயமாக்கலை பாதுகாக்கவே உலக முழுவதும் கருப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
உலகமயமாக்கலின் நடைமுறைக்கெதிராக மக்களின் எதிர்ப்புகள், போராட்டங்கள், கிளர்ச்சிகளை ஒடுக்கவே உலக அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதையும் மீறி அரபு எழுச்சிகள் நடைபெற்றன. இதன் படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்வது மிக முக்கியமாகும்.
உலகெங்கும் குடிமைச் (சிவில்) சமூகமே போலீஸ்மயமாக்கப்படுகிறது. அல்லது இராணுவமயமாக்கப்படுகிறது. தமிழகமும் படிப்படியாக போலீஸ்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த அபாயகரமான சூழலை எதிர்க்க அனைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட வேண்டியது நமது கடமையாகிறது.
ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் மையப்படுத்துவதை எதிர்ப்போம்!
இந்தியா ஒரே நாடாக வரலாற்றில் இருந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காலனி ஆக்கிய பகுதிகளை நிர்வாகம் செய்வதற்காக ஒன்றிணைத்தனர். சுதந்திரத்திற்கு முன் 1946ல் “பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரி¬ம்”என்ற வாக்குறுதியை நேரு கொடுத்தார். ஆனால் சுதந்திரத்திற்கு பின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. மொழிவழித் தேசிய இனங்கள் மற்றும் பழங்குடிகளின் சிறைக்கூடமாக இந்திய ஒன்றிய அரசு கட்டமைக்கப்பட்டது.
மொழிவழி மாநில கோரிக்கைகள் வெடித்தன. ஆந்திர மாநில கோரிக்கைக்காக “பொட்டி ஸ்ரீராமுலு” உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டனர். முதலில் மறுத்த நேரு அரசு பின்னர், மொழிவாரி மாநிலங்களை ஏற்றுக் கொண்டது. ஏனெனில், தேசிய சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டத்தை தேசிய விடுதலை போராட்டத்தை தனிமாநிலக் கோரிக்கைகள் திசைத் திருப்பின காயடித்தன. இதனால் நேரு அரசு வரவேற்றது. தேசிய சுயநிர்ணய கோரிக்கைகள் முற்றுலுமாக பின்னுக்கு தள்ளப்பட்டது.
எதார்த்தத்தில் ஒன்றிய அரசு என்பது பெயரளவிலும் உண்மையில் மத்திய அரசாக இருந்தது. மைய,மாநில, பொது பட்டியல் மைய பட்டியலுக்கு பல விசியங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகமயமாக்களுக்கு பிறகு கடந்த இருபதாண்டுகளில் இப்போக்கு வேகம் பிடித்துள்ளது. நரேந்திர மோடி அரசு மிக வேகமாக உள்ளது. எல்லாவற்றையும் மையப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. (மையப்படுத்தலில் பாசிசமயமாகிவருவதும் மிக முக்கிய காரணமாகும்)
எடுத்துக்காட்டாக, கல்வியை படிப்படியாக மாநிலம் பட்டியலிலிருந்து நகர்த்தி இன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்க துடித்துக் கொண்டிருக்கிறது. நரேந்திரமோடி அரசு மாநிலப்பட்டியலில் உள்ள நிலத்தின் மீதான உரிமையை பறிக்கும் நோக்கில் மக்கள் விரோத “நிலங்கள் பறிப்பு மசோதாக்கள்” கொண்டு வரத்துடிக்கிறது. அதே போல் மாநிலங்களுக்கான வரிவிதத்தில் உரிமையை பறித்து (நி.ஷி.ஜி) வரியின் மூலம் மையத்தில் ஒருமுகப்படுத்தப் பார்க்கிறது. இதன்மூலம் மாநில அரசுகளை பிச்சைக்காரர்களாக கையேந்த வைக்கிறது.
உலகமயமாக்கல் தமிழகத்திலும், இந்தியாவிலும் நிலவும் அடிப்படை முரண்பாடுகளை கூர்மையடைய வைக்கிறது. இதில் முக்கியமாக ஒன்றிய அரசு கட்டமைப்பிற்கும் தேசிய இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடிகளுக்கான முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது. இதன் விளைவாக இந்திய ஒன்றிய அரசிற்கும்-தமிழக மக்களுக்குமான (உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்) முரண்பாடு கூர்மையடைகிறது.
தமிழகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் வேட்டைக்களமாகியுள்ளது. கூடங்குளம், நியுட்ரினோ தலையில் சுமத்தப்படுகின்றன. மீத்தேன் போன்ற கணிம வளங்களை கொள்ளையடிக்கும் திட்டங்கள் மக்களின் எதிர்ப்புக்கிடையிலும் மிகவேகமாக நடைமுறைப்படுத்த முயற்சி நடக்கிறது.
ளி.ழி.நி.ஷி மூலம் எரிவாயு எடுக்க கடலூரிலிருந்து இராமநாதபுரம் வரை தமிழகத்தின் பெரும்பகுதிகளில் நிலங்கள் கைப்பற்றப்படுகின்றன. இத்திட்டம் மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட்ட இடங்களில் கூடநடக்கிறது. இசப்ப சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதில் ஒ.என்.ஜி.எஸ் எரிவாயு திட்டத்தையே எதிர்க்க வேண்டி உள்ளது.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு போன்றவற்றில் ஒன்றிய அரசு அலட்சியப்படுத்துகிறது. இது தமிழக மக்களை கோபத்தில் ஆழ்த்துகிறது. தமிழக மீனவர்களை இலங்கைப்படை தொடர்ந்து கைது செய்து துன்புறுத்தி வருகிறது. இதைப் பற்றி ஒன்றிய அரசு நிரந்தரமாக தீர்ப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
மேற்கண்ட அம்சங்கள் இந்திய ஒன்றிய அரசிற்கும் தமிழக மக்களுக்குமான முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறது. தமிழக பாட்டாளிவர்க்கமும் இதை தீவிரப்மபடுத்த வேண்டிய கடமையில் இருக்கிறது.
நாம் மாநிலங்களுக்கு பதிலாக அனைத்து அதிகாரங்களும் பெற்ற சுதந்திரக் குடியரசுகளுக்கான போராட்டத்தை கூர்மைப்படுத்த வேண்டும். இந்திய ஒன்றிய கட்டமைப்பிற்கு மாறாக விருப்பப் பூர்வமான கூட்டரசுக்குப் போராட வேண்டும்.
சாதிய பயங்கரவாதத்தை வீழ்த்துவோம்!
தமிழகத்தில் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் சாதிநிலவுடைமை தகர்த்து ஒருபுதிய சமூக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றின. ஆனால், தமிழகத்தில் நுழைந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவற்றை அழித்தது. சாதி-நிலவுடைமையை அழிக்காமல் தனக்கு தேவையானபடி சாதி அரை நிலவுடைமையாக மாற்றிக்கொண்டதுது. இதனால் கிராமத்தில் இரட்டைத் தன்மை உருவானது. பழைக சாதி நிலவுடைமை தொடரும் பட்சத்தில், சந்தைக்காக கச்சாப் பொருட்களை உற்பத்திச் செய்யும் முதலாளித்துவமும் தொடங்கியது.
நகரங்களில் புதிய அரசு நிர்வாகமூம் தொழிற்சாலைகளும் உருவாகின. இதற்கான உழைப்புச் சக்திகளை தயார் செய்ய கல்வி பிரிட்டிஷ் அரசால் சமூகமயமாக்கப்பட்டது. இதனால் கல்வி மற்றும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாயின. இந்த வாய்ப்புகள் அனைத்தையும் பிராமணர்கள் கைப்பற்றினர். இதனால் பிராமணரல்லாதோர் இயக்கம் தொடங்கப்பட்டது.
வேலைப்பிரிவினை அன்ற அடிப்படையில் கிராமத்தில் உள்ளடங்கி இருந்த சாதி, சுயதேவை பொருளாதாரத்தில் உள்ளடங்கி இருந்த சாதி, சாதிச்சங்கம் என்ற நவீன முதலாளிய வடிவத்தை எடுத்தது. கல்வி, வேலை, அதிகாரம் என்ற சனநாயக முழக்கங்களுடன் சாதிகளின் மேல்ல்ட்டு, குட்டிமுதலாளிய பிரிவினரின் தேவைக்காக அனைத்து மக்களும் அணிதிரட்டப்பட்டனர். இப்போக்கில் 1920 களில் இடஒதுக்கிடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
பிராமணர்களை ஒட்டி வெள்ளாளர்களும் நககங்களை நோக்கி நகர்ந்தனர். இதனால் கிராமப்புறங்களில் இடை நிலைச்சாதிகளின் ஆதிக்கம் நிலைப்பெற்றது. 1947 சுதந்திரத்திற்குப் பின் அதிகாரம் பெற்ற இந்திய பிராந்திய பெருமுதலாளி வர்க்கம் சாதி-அரைநிலவுடைமையை ஒழக்கவில்லை. மாறாக மூலதன-சாதிநிலக்கிழார்களுடன் சமரசம் செய்துக் கொண்டனர். இதனால் இடைநிலை ஆதிக்கச்சாதிகளின் ஆதிக்கம் இன்று வரை கிராமத்தில் தொடர்கிறது.
சுதந்திரத்திற்கு பிறகு நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுக் கட்சி தலைமையிலான கூட்டணியே பெரும்பான்மை பெற்றது. இதில் வன்னியசாதியைச் சேர்ந்த மாணிக்கவேலும், இராமசாமி படையாச்சியும் அடக்கம். கணிசமாக சட்டசபை உறுப்பினர்களைப் பெற்றனர். ஆனால, அணிமாறி இராஜாஜியுடன் சேர்ந்து மந்திரி பதவி பெற்றனர். இந்தியாவில் முதன்முதலில் அணித்தலைமை தொடங்கி வைத்தவர்கள் இவர்கள் தான். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கரைந்து மறைந்து போயினர்.
முத்துஇராமலிங்கத்தேவரின் பார்வடுபிளாக் கட்சி முக்குலத்தோமர அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இவர்கள் தொடர்ந்து மற்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தங்களை தக்க வைத்துக் கொண்டனர்.
கல்வி,வேலையில் இடஒதுக்கீடு கேட்டு தொடங்கப்பட்ட வன்னியச் சங்கம் பின்னர், அதிகாரப்பங்கீட்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது. இது சில முன்னேற்றங்களை கண்டது. இதனால் பலசாதிக்கட்சிகள் முதலியார், இடையர், உடையார், கொங்குவேளாளர் என்று உருவாயின. இவைகளில் பெரும்பாலும் 2011ல் தி.மு.கவுடன் கூட்டணி சேர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தன. அதே போல் 2014ல் பி.ஜே.பியுடன் கூட்டுச் சேர்ந்து நடாளுமன்றத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. இருப்பினும் சாதியக்கட்சிகள் நீடிக்கவும் புதியதாக உருவாகவும் செய்கின்றன. இதற்கான சமூக அடித்தளம் நீடிக்கவே செய்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி மைய அரசில் காங்கிரசுக்கு அடுத்தப்படியாக தொடர்ந்து 11ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இதில் அடித்த கொள்ளைகளில் பொருளாதார ரீதியாக தன்னை பலப்படுத்திக்கொண்டது. பின்னர், பதவிகிடைக்க அரும்பாடுப் பட்டது., இராமதாஸ் அனைவரையும் கெஞ்சி கூத்தாடினார். தன்மகளுக்கு எப்படியாவது இராஜ்ஜிய சபா எம்பியாக்கி மந்திரியாக்க துடித்தார். தனது கனவு நிறைவேறவில்லை என்ற விரக்தியின் உச்சத்திற்கே சென்றார். அதன் விளைவு தனது பலத்தை காட்டுகிறேன் என்று சாதிவெறியை கிளப்பி தருமபுரியில் நத்தம், கொண்டம்பட்டி, அண்ணாநகர் மூன்று தலித் கிராமங்களை தீக்கிரையாக்கினர்.
இந்நிகழ்வுக்குப் பிறகு சாதிவெறியன் இராமதாசு தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து தலித்தல்லாதோர் இயக்கத்தைக் கட்ட முயற்சித்தார். இதன் விளைவு “புதிய தாராளமயத்தால்” சிதைந்து கொண்டிருக்கிற “சாதியக் குடும்ப முறைகளை” காப்பாற்றுவதற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. சாதிக்கலப்பின் வேகத்தைப் பார்த்து தினறிக் கொண்டிருந்து ஆதிக்கச் சாதிகளின் ஆதிக்கச் சக்திகளுக்கு இராமதாசின் செயலால் புத்துயிர் பெற்றன.
இதன் விளைவு இன்று தமிழகமெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதிய ஆணவக்கொலைகளாகும். சாதிய ஆணவக் கொலைகள் மட்டுமல்ல கள்ளக்குறிச்சியில் தேர் செல்லும் பொழுது தாக்குதல், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் பொதுப்பாதையில் கொண்டுச் செல்ல நாகையில் தடை என்று தமிழகமெங்கும் பல்வேறு வடிவங்களில் சாதிய பயங்கரவாதம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இதில் தமிழாக அரசு ஒன்று மௌனம் காக்கிறது அல்லது துணைநிற்கிறது.
இந்த இடைநிலை ஆதிக்க சாதிகளில் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் வாழக்கைக்கு இந்த சாதி எந்த விதத்திலும் உதவவில்லை என்றாலும் ஆதிக்கச் சாதிகளால் ஊட்டப்படும் சாதி ஆதிக்க உணர்வுக்கு பலியாகின்றனர். ஆதிக்கச் சக்திகளின் நலனுக்கு துணைபோகின்றனர்.
இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆதிக்கச் சக்திகளின் பிடியிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிப்பதும் தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றிணைந்து சாதிய பயங்கரவாதத்தை எதிர்க்கவும் அணிதிரட்ட வேண்டும்.
இதற்காக சனநாயகச் சக்திகளும், முற்போக்காளர்களும் புரட்சிகர சக்திகளும் தன்முனைப்புடன் உறுதியாக களம் இறங்கவேண்டும்.
சாதிக்கலப்புத் திருமணங்களை முனைப்புடன் ஊக்குவிக்க வேண்டும். திருமணங்களை நடத்துவது மட்டுமல்லாமல் இச்சக்திகளை பாதுகாக்கவேண்டும். சாதி ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக மக்களைத் திரட்டி பதில் நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தவேண்டும்.
இச்செயல்பாடுகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் வர்க்க அணிச்சேர்க்¬யில் மையமிடவேண்டும். இதுவே மிக முக்கியமானது. ஆதிக்கச் சாதி உழைக்கும் மக்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணையும் இயல்பான புள்ளி வர்க்க அணித்திரட்டல்தான். நமது கடந்த கால வெற்றிகளும் படிப்பினைகளும் இதைத்தான் உணர்த்துகின்றன. எனவே, தொடக்கத்திலிருந்தே நாம் இதில் கவனம் செலுத்துவோம்.
கனன்று கொண்டிருக்கும் உடனடி சிக்கல்கள்
தமிழகத்தில் கனன்றுக் கொண்டிருக்கும் சிக்கல்கள் பல இருப்பினும் மதுஒழிப்பு, ஊழல்எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம் போன்ற சிக்கல்களை முன்னணியில் உள்ளன. இவைகளுக்கான போராட்டங்கள் நாள்தோறும் நடைபெறுகின்றன. இதற்கு இதர சிக்கல்களை எடுக்கக்கூடாது என்ற பொருளில்லை. பகுதிச்சார்ந்து அனைத்து சிக்கல்களையும் முன்னெடுக்க வேண்டும்.
மதுஒழிப்பு
தமிழகத்தில் மது ஒழிப்பிற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் சசிப்பெருமாள் இறப்பிற்குப் பிறகு உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜெ.அரசும் கடும் அடக்கு முறையை ஏவியது. மாணவர்களை தூண்டியதாக கூறி பேராசிரியர் மணிவண்ணனை துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. ம.க.இ.க. பாடகர் கோவணனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது.
மது தனிநபர் ஒழுக்கத்தை மட்டும் சீரழிக்கவில்லை. குடும்ப ஒழுங்கு, சமூக ஒழுங்குகளை சிதைக்கிறது. போதைக்கு அடிமையானவர்கள் இளமையிலேயே இறக்கின்றனர். அல்லது குடும்பம் பிரிகிறது. இதனால் பெண்களுக்கு முழுக்குடும்ப சுமை ஏற்படுகிறது. அதிகப்படியாக பெண்கள் தனியாக குடும்பச் சுமையை ஏற்றுக்கொள்வது இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலில் உள்ளது.
இவர்களால் சமூக செயல்பாடுகளில் அந்நியமான நிலை நிலவுகிறது. ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவதில்லை சீர்கேடுகளும், சீரழிவுகளுமே அதிகமாகிறது. அரசு எதிர்ப்புத் தன்மை முற்றிலும் மழுங்கடிக்கப்படுகிறது. அ.தி.மு.க, தி.மு.க அரசும் திட்டமிட்டே இதை செயல்படுத்திவருகிறது. இது அரசுகளால் திட்டமிட்டு இளைய சமுதாயத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இது புரட்சிகர அணித்திரட்டலுக்கு தடையாக இருக்கிறது.
மேற்கண்ட காரணங்களால் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த உறுதியானப் போராட்டம் தேவைப்படுகிறது.
ஊழல் எதிர்ப்பு
மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் விரவி இருக்கிறது. இது திட்டமிட்ட முறையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், அனைத்து அரசியல்வாதிகள் அதாவது சிறிய கட்சிகள் உட்பட எதிர்க்கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சொத்தை பறிமுதல் செய்வது இணைத்துக் கொள்ள வேண்டும். ஊழல் என்பது முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத அங்கம் என்பதையும் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்.
விலைவாசி ஏற்றம்
ஒருபக்கம் விளைபொருளுக்கு விலையை விவசாயிகள் தீர்மானிக்க முடியாத நிலை நிலவுகிறது. மறுபக்கம் ஆன்லைன் வர்த்தகம், முன்பேர வர்த்தகம் மூலம் கள்ள வியாபாரிகள் வரை முறையற்ற விலையை நிர்ணயிக்கிறார்கள்.
எனவே, சந்தை அராஜகம் ஒழிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணயத்தை விவசாயிகளே நிர்ணயிக்கவேண்டும். ஆன்லைன் வர்த்தகம், முன்பேர வர்த்தகம் போன்றவை ஒழிக்கப்பட்டு பதுக்கல்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட முக்கிய சிக்கல்களும், இதர சிக்கல்களையும் கையிலிருந்து அனைத்து தரப்புமக்களையும் அணித்திரட்ட வேண்டும்.
மேற்கண்ட குறிப்பான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நமது செயலுத்தி வகுக்கப்பட வேண்டும். நமது செயலுத்தியை பார்ப்போம்!
நமது செயலுத்தி
இடைக்கட்டம், முதன்மை முரண்பாடு, குறிப்பான திட்டம் இவைகளுக்கிடையில் நெருங்கிய இயங்கியல் உறவுகள் உண்டு. இவற்றை நடைமுறை செயலாக்கப்பெற வைப்பது தான் செயலுத்தி ஆகும். செயலுத்தி குறிப்பான திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமைப்பு வடிவங்களையும் போராட்ட வடிவங்களையும் தீர்மானிக்கிறது.
அமைப்பு வடிவங்கள்
அமைப்பு வடிவங்களாக ம.தி. அமைப்புகள், கூட்டமைப்புகள், முன்னணிகள், அய்க்கிய முன்னணி இருக்கு. இவை இயக்கத்தில் வளர்ச்சிக்கேற்ப பலத்திற்கேற்ப தீர்மானிக்கப்படும்.
போராட்ட வடிவங்கள்
போராட்ட வடிவங்களாக பரப்புரை, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகள் இருக்காது. இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டியே போராட்ட வடிவங்கள் வகுக்கப்படும்.
அய்க்கிய முன்னணி
ஒரு புரட்சியின் கட்டத்தினூடே இடைக்கட்டங்கள் உருவாவதைப் போல் மூலஉத்தியாலும் மாற்றங்கள் உண்டு. மூலஉத்தியிலும் வர்க்க அணிச்சேர்க்கையில் மாற்றம் உண்டு. இதன்பொருள் மூலஉத்தி மாறாது, ஆனால் மூலஉத்தியில் பகுதியளவு மாற்றம் இருக்கும்.
நமது தற்போதையக் கட்டத்தை பொருத்தவரை உலகமய தாராளமய, தனிமய எதிர்ப்பு அய்க்கிய முன்னணி கட்டப்பட வேண்டும். ஆனால், மக்கள் சனநாயகத்திற்கான இலக்குகளே இதிலும் முதன்மை முரண்பாட்டின் முதன்மைக் கூறாக உள்ளனர். எனவே, எதார்த்தத்தில் ஆளும்வர்க்கத்தின் ஒருபகுதி அய்க்கிய முன்னணிக்கு வருவதற்கு சாத்தியம் இல்லை. கோட்பாட்டு ரீதியாக போதுமானால் அவர்களுக்கு அய்க்கியமுன்னணி வாசல்கதவு திறந்து இருக்கும்.
உலகமய, தாராளமண, தனியார்மய எதிர்ப்பு அய்க்கியமுன்னணி என்பது புரட்சியின் அடிப்படை இயக்குச்சக்திகளை தொழிலாளர் தலைமையல் விவசாயிகளை அடிப்படை கூட்டாகக் கொண்டு குட்டி முதலாளிகள், தேசியமுதலாளிகள், சிறப்பு பிரிவினரான பெண்கள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், பழங்குடிகள், மீனவர்கள் ஆகியோரை அடிப்படையாகக் கொண்டே இருக்கும்.
இந்த அய்க்கிய முன்னணி குறிப்பான திட்டத்தை நிறைவேற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக