திங்கள், 3 செப்டம்பர், 2018

தொடர்ந்து நடைபெறும் இயங்கியல் வகுப்புகள்!
வாசகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின்
விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
1) இதுவரை மூன்று வகுப்புகள் நடத்தி உள்ளோம்.
இனியும் வகுப்புகள் தொடரும்.

2) இந்த மூன்று வகுப்புகள் பற்றியும் வாசகர்கள்
மற்றும் பங்கேற்றவர்களின் வெளிப்படையான
விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன.

3) வகுப்புகள் பயனுள்ளவையாக இருக்க வேண்டுமெனில்
விமர்சனங்களால் அவை செழுமைப் படுத்தப்
பட வேண்டும்.

4) இந்த வகுப்புகள்  தத்துவார்த்தக் கல்வி சார்ந்தவை.
இவை அரசியல் செயல்பாட்டுக்கான ஆலோசனை
நடத்தும் வகுப்புகள் அல்ல என்பதை மிகவும்
தாழ்மையுடனும் உறுதியுடனும் தெரிவித்துக்
கொள்கிறோம்.

5) திட்டமிட்டபடி,  சொல்ல வேண்டிய விஷயங்களை
இந்த மூன்று வகுப்புகளிலும் நாங்கள் சொல்லவில்லை.
சொல்ல இயலவில்லை. அதாவது போர்ஷனை (portion)
முடிக்காத நிலை இது.  

6) சொல்ல முன்வரும் விஷயங்களுக்கான 
பீடிகையாகவே வகுப்புகளின் பெரும்பகுதி
நேரம் செலவாகி  விட்டது என்பதை நாங்கள்
உணர்ந்துள்ளோம்.

7) பேசத்தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே
பேசுபொருளுக்குள் (subject) நேரடியாக இறங்குவது
என்று தீர்மானித்துள்ளோம். இனிமேலும் பீடிகைகள்
தேவையில்லை என்று கருதுகிறோம். உரை முழுவதும்
வளமான உள்ளடக்கம் (rich content) கொண்டதாக
அமையும்.  

8) இனி அடுத்த கூட்ட நிகழ்வு பின்வருமாறு அமையும்.
இயங்கியல் பற்றிய உரை.....60 முதல் 75 நிமிடம்.
உரை குறித்த விவாதம்...........60 நிமிடம்.
பங்கேற்பாளர்களின் கேள்விகள் அனைத்தும் விளக்கம்
அளிக்கப்படும்.

9) வாசகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்புத் தருமாறு
வேண்டுகிறோம். அடுத்த வகுப்பு வரும் ஞாயிறு
09.09.2018 அன்று நடைபெறும்.

10) பங்கேற்பாளர்கள் தங்களின் விமர்சனங்களை
முன்வைக்கலாம்.
************************************************************
Dialectics என்ற சொல்லுக்குச் சரியான
மொழிபெயர்ப்பு முரண்தர்க்கவியல் என்ற சொல்லே
என்று முதல் கூட்டத்திலேயே கூறினோம்.
என்றாலும் குழப்பத்தைத் தவிர்க்க இயங்கியல்
அல்லது இயக்கவியல் என்ற சொல்லைப் பயன்படுத்த
வேண்டி உள்ளது.

படித்தல், சிந்தித்தல், விவாதித்தல் என்ற படிநிலைகள்
வாயிலாக அறிவைப் பெறுவது கலீலியோவுக்கு
முந்திய காலம் வரை நடைமுறையில் இருந்தது.
கலிலியோ முதன்  முறையாக "பரிசோதனை
அறிவியல்" (experimental science) என்பதை உருவாக்கினார்.
அதன் பின்னர் அ) படித்தல் ஆ) சிந்தித்தல்
இ) விவாதித்தல்  ஈ) செய்து பார்த்தல் என்ற
நடைமுறை வந்தது. பிரான்சிஸ் பேக்கன் மிகத்
தெளிவாக Experiment Observation Inference என்ற
படிநிலையை வலியுறுத்தினார். இன்றளவும் பள்ளி
கல்லூரிகளில் பிரான்சிஸ் பேக்கனின் நடைமுறைதான்
பயன்பட்டு வருகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக