செவ்வாய், 11 செப்டம்பர், 2018

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக்
கொள்வது என்னவென்றால்................
வரும் ஞாயிறு (16.09.2018) இயங்கியல் வகுப்பு-5
இயங்கியல் பாடத்தின் இறுதி வகுப்பு!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் நடத்தி வரும்
தொடர்ச்சியான மார்க்சிய வகுப்புகளில்,
5ஆம் வகுப்பு வரும் ஞாயிறு 16.09.2018 மாலை 5.30க்கு
நடைபெறும். இயங்கியல் பாடத்தைப் பொறுத்து
இது நிறைவு வகுப்பாகும். இவ்வகுப்புடன் இயங்கியல்
பாடம் நிறைவு பெறும்.

அடுத்ததாக, பின்நவீனத்துவம் பற்றியும், இந்தியாவில்
கான்டியவாதம் (Kantism) பற்றியும் தொடர் வகுப்புகள்
நடைபெறும். மார்க்சிய அறிஞர்கள் எஸ் என் நாகராஜன்,
ஞானி ஆகியோரின் கருத்துக்கள் மீதான விவாதமும்
கான்டியவாதத்தின் கீழ் வரும்.

அடுத்து என்ன பாடம் என்பது குறித்து வாசகர்கள்
தங்களின் கருத்தைக் கூறலாம்.

வகுப்பு அதே இடத்தில் நடைபெறும்;
முகவரி: OBC வங்கி ஊழியர் சங்க அலுவலகம்,
6, மேற்கு அவென்யூ, கோடம்பாக்கம், சென்னை 24.
பேருந்து நிறுத்தம்: சேகர் எம்போரியம்,
மேனகா கார்ட்ஸ், கோடம்பாக்கம் ரயில் நிலையம்.
*********************************************************
திருப்பூர் குணா மருதுபாண்டியன் செந்தழல்
சிலம்பரசன் சே   த ஜீவானந்தம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக