சனி, 1 செப்டம்பர், 2018

 நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------
தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் 
பற்றிய சிறு குறிப்பு!
-------------------------------------------------------------------------
டாக்டர் பி  மனோகர் 
-----------------------------------------------------------------------
1) தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன் அவர்கள் 
மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையிலும் 
பின்னர் BSNL நிறுவனத்திலும் பணியாற்றியவர்.

2) தொலைதொடர்புத்துறை  தொழிற்சங்கத்தில் 
(National Federation of Telecom Employees) முப்பது ஆண்டுகளுக்கும் 
மேலாக பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர்.
மாவட்டச் செயலாளர், மாநிலச் சங்க நிர்வாகி,
பேச்சு வார்த்தைக் கவுன்சில் உறுப்பினர், செயலாளர்
ஆகிய பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர்.

3) துறை சார்ந்த உள்ளக விசாரணைகளில் (Domestic inquiry) 
மத்திய அரசு மற்றும் மத்தியப் பொதுத்துறை 
ஊழியர்களின் சார்பாக கணக்கற்ற வழக்குகளில் 
வாதாடி,சஸ்பென்ஷன் வேலைநீக்கம் செய்யப்பட்ட 
தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்த்தவர் இவர். 

4) தொழில் தகராறுச் சட்டத்தில் வேலைநீக்கம் 
செய்யப்பட்ட தனியார்  நிறுவனத் தொழிலாளர்களுக்காக 
பல்வேறு தாவாக்களில் (disputes ) தொழிலாளர் நல 
ஆணையர் மற்றும் சமரச அதிகாரிகளிடம் (Labour conciliator)
வாதாடி தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் 
தந்தவர் இவர்.

5) முப்பது ஆண்டுகளுக்கும் மேலான நெடிய 
தொழிற்சங்க வாழ்க்கையில் பல்வேறு 
போராட்டங்களை, குறிப்பாக பல்வேறு அகில 
இந்திய அளவிலான வேலைநிறுத்தங்களை 
வெற்றியுடன் ஒழுங்கமைத்து நடத்தியவர் இவர்.

6) தமது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக 
இடமாற்றம், சஸ்பென்ஷன், சேவை முறிவு உள்ளிட்ட 
நிர்வாகத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகளை 
எதிர்கொண்டவர்.

7) தொழிற்சங்கப் போராட்டங்களில் பங்கேற்று 
பலமுறை கைதானவர். ஒரு முறை தேசத் துரோகக்
குற்றச்சாட்டின்கீழ் 124A சட்டப் பிரிவின் கீழ் 
கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

8) தொழிற்சங்க நடவடிக்கைகள் மட்டுமின்றி 
அறிவியல் பரப்பும் பணியிலும் ஈடுபட்டு வருபவர் 
இவர். கடந்த 20 ஆண்டுகளாக நியூட்டன் அறிவியல் 
மன்றம் என்ற அமைப்பின் வாயிலாக பரந்துபட்ட 
மக்களிடம் அறிவியலைக் கொண்டு செல்பவர் இவர்.

9) இவரின் அறிவியல் பணிகளை இனங்கண்டு 
பெரியார் திடலில் ஒரு விழா நடத்திப் பாராட்டிச்
சிறப்பித்தார் தி.க தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள்.

10) அறிவியல் ஒளி என்னும் அறிவியல் மாத இதழில்
தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர் 
இவர். இவரின் எழுத்துப் பணியைப் பாராட்டி
பிர்லா கோளரங்கத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் 
தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற விழாவில் 
நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள் கேடயம் (shield)
வழங்கிச் சிறப்பித்தார்.

11) இவர் சதுரங்க விளையாட்டு வீரரும் ஆவார்.
தொலைத்தொடர்புத்துறையின் சார்பில் மாவட்ட 
மாநில அளவில் சதுரங்கப் போட்டிகளில் 
பங்கேற்றுள்ளார். சதுரங்கப் போட்டி நடுவராகவும் 
(Arbiter) தொலைத்தொடர்பு மாவட்ட அளவில் 
இருந்துள்ளார்.

12) தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.
இலக்கியம், தத்துவம், மார்க்சியம், அறிவியல் ஆகிய 
நான்கு துறைகளில் பங்களித்து வருபவர். சிறந்த
மொழிபெயர்ப்பாளர்.
*****************************************      
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக