வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

நவீனப் பார்வையற்ற மார்க்சியப் பத்தாம் பசலிகள்!
----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட
தொழிற்புரட்சியைத் தொடர்ந்து மார்க்சியம்
பிறந்தது. இன்று இந்த 2018ஆம் ஆண்டில் உலக
அளவில் நான்காவது தொழிற்புரட்சியின்
சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கணினி மென்பொருளும் செயற்கை நுண்ணறிவும்
மனித குலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்துக்
கொண்டிருக்கின்றன.

ஆனால் தமிழக மார்க்சியர்கள் மட்டும் ஒரு
நூற்றாண்டுக்கும் முந்திய காலத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். சமகால உலகில் என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை அறவே
இல்லாமல் சிந்தனையால் வெகுவாகப் பின்தங்கி
இருக்கிறார்கள்.

நவீனப் பார்வை என்பது அறவே இல்லாத ஒரு
வினோத உயிரினமாக உயிர்வாழ்ந்து
கொண்டிருப்பவர்கள் தமிழக மார்க்சியர்கள்.

அசுரத் தனமாகவும் எலக்ட்ரான் வேகத்திலும்
முன்னேறிச் செல்லும் உலகில் நடந்து வரும்
மாற்றங்கள் குறித்து நியூட்டன் அறிவியல் மன்றம்
மட்டுமே அக்கறை கொள்கிறது.

எனவே தங்களின் அறிவையும் சிந்தனையும்
காலத்துக்கு ஏற்றவாறு புதுப்பித்துக் கொள்வது
மார்க்சியர்களின் கடமை என்று நாங்கள்
கூறி வருகிறோம்.

மார்க்சியக் கோட்பாடுகளும்கூட நிகழ்ந்து வரும்
மாற்றங்களுக்குத் தப்பவில்லை. இந்நிலையில்
இன்னமும் லூயி போனபார்ட்டின் பதினெட்டாம்
புருமெர் என்று பேசிக்கொண்டிருப்பதில்
அர்த்தமில்லை. இப்படிப் பேசும் பல பேருக்கு
அதாவது 99.9999 சதம் பேருக்கு புருமெர் என்றால்
என்ன அர்த்தம் என்றே தெரியாது.

இச்சூழலில் சமகால மார்க்சியத்தை வாசகர்களுக்கு
அறிமுகப் படுத்தும் நோக்கில் நியூட்டன் அறிவியல்
மன்றம் மார்க்சிய வகுப்புகளை நடத்தி வருகிறது.
எதிர்வரும் ஞாயிறன்று (02.09.2018) மூன்றாவது
வகுப்பு நடைபெற உள்ளது.

இந்த வகுப்புகள் மார்க்சியர்களுக்குப் பயன்படும்
நோக்கில் அமைந்தவை. அவற்றில் விரும்பியோர்
பங்கேற்க அழைக்கிறோம்.
********************************************

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக