சனி, 25 ஆகஸ்ட், 2018

வல்லினம் மிகும் இடம்
------------------------------------------
தமிழில் எழுதும்போது பல இடங்களில் வல்லினம் மிகும் இடம் எது மிகாத இடம் எது என்று பலருக்கும் சந்தேகம் வருவது இயல்புதான். இலக்கணம் என்றால் ஒன்றும் கம்பு சுத்துற வேலை இல்லீங்க!
வினையெச்சச் சொற்களின் முன் வல்லினம் மிகும் என்பது விதி.
பின்னர், முன்னர், போல, என போன்ற சொற்களை எல்லாம் வினையெச்சச் சொற்களாகவே கருதிக் கொள்ள வேண்டும்.
ஐ உருபு, கு உருபு ஆகியவற்றுக்கு முன் வலி மிகும் என்பது விதி.
இந்த இரண்டு விதிகளையும் புரிந்துகொண்டாலே போதும். பெரும்பாலான ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க முடியும்.
பெயரெச்சச் சொற்களின் முன் வலி மிகாது என்பது விதி.
வாக்கியங்களில் தொகைகளைத் தவிர்த்து விரித்து எழுதும் போதும் பெரும்பாலான ஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க முடியும். எடுத்துக்காட்டாக, ஓடாக் குதிரை என்று எழுதுவதைத் தவிர்த்து ஓடாத குதிரை என்று விரித்து எழுத வேண்டும்.
இந்த மூன்று விதிகளையும் புரிந்துகொண்டு எழுதினால் பெரும்பாலும் பிழைகளே வராது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக