திங்கள், 6 ஆகஸ்ட், 2018

பின்நவீனத்துவம் ஹோமியோபதியை ஏற்கிறது!
மாவோயிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளில்
ஹோமியோபதியின் ஆதரவாளர்கள் அதிகம்!
மாவோ ஹோமியோபதியை ஏற்கவில்லை!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
பின்நவீனத்துவம் ஹோமியோபதியை அங்கீகரித்து
ஏற்கிறது. அறிவியலுக்கு எதிரான பின்நவீனத்துவம்
அறிவியலுக்கு எதிரான ஹோமியோபதியை ஆதரிப்பது இயற்கையே.

சீனாவில் மாவோ ஹோமியோபதியை
ஆதரிக்கவில்லை. இந்தியாவில்
ஆயுர்வேதம், சித்த மருத்துவம் ஆகியவை
உள்ளன. அவை இந்தியாவின் பாரம்பரிய
மருத்துவ முறைகள் ஆகும். இதைப்போலவே
சீனாவிலும் பாரம்பரிய மருத்துவ முறை
இருந்தது.மாவோ சீனத்தின் பாரம்பரிய
மருத்துவத்தை அங்கீகரித்தார். சீனாவில்
ஹோமியோபதி நடைமுறையிலேயே இல்லை.
அன்று மட்டுமல்ல, இன்றும்கூட சீனாவில்
ஆங்கில மருத்துவமும் சீனப் பாரம்பரிய
மருத்துவமும் மட்டுமே உள்ளன. சீன
வரலாற்றில் என்றுமே ஹோமியோபதி
செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை.

1950களில் சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின்
காலத்தில் ஹோமியோபதி அறிவியலுக்கு
எதிரானது என்று தடை செய்யப்பட்டது.
இன்று ரஷ்யாவில் கம்யூனிச ஆட்சி இல்லை.
முதலாளித்துவ ஆட்சி நடக்கிறது.புதின்
என்பவர் பிரதமர். இன்றும் புதின் அரசு
ஹோமியோபதி பெரும் சேதாரத்தை
ஏற்படுத்தும் ஆபத்து என்று அறிவித்துள்ளது.

இந்தியா போலிகளின் சொர்க்கம். எனவே போலி
மருத்துவமான ஹோமியோபதிக்கு இந்தியாவில்
ஆதரவாளர்கள் உண்டு. இந்தியாவில் இடதுசாரி
முகாமில்தான் ஹோமியோபதிக்கு கண்மூடித்
தனமான ஆதரவு உள்ளது.

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி, மாவோயிஸ்ட்
கட்சி ஆகிய இரு கட்சிகளும் ஹோமியோபதியைக்
கட்டிக் கொண்டு அழுகின்றன. இவ்விரு
கட்சிகளிலும் உள்ள ஹோமியோபதி லாபி
மிகவும் சக்தி வாய்ந்தது.

நாளைக்கே மோடி அரசு இந்தியாவில்
ஹோமியோபதியைத் தடை செய்கிறது
என்று வைத்துக் கொள்வோம். அதன் பின்
என்ன ஆகும்? மார்க்சிஸ்ட் கட்சி (CPM),
மாவோயிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளையும்
கலைக்க வேண்டியது  வரும்.

ஹோமியோபதியை விரும்பும் எவரும் அதை
ஏற்கலாம். எமக்கு ஆட்சேபணை இல்லை.
ஆனால் ஹோமியோபதியை ஏற்பவர்கள்
மார்க்சியத்தை விட்டு விலகி விட வேண்டும்.
ஹோமியோபதியை ஆதரிப்பவனுக்கு
மார்க்சியத்தில் இடமில்லை.

ஹோமியோபதி மார்க்சியத்துக்கு எதிரானது.
மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலினால் தடை
செய்யப்பட்டது. மாவோவின் சீனத்தில்
ஹோமியோபதி   அறவே கிடையாது. எனவே
ஸ்டாலினும் மாவோவும் ஏற்றுக் கொள்ளாத
ஹோமியோபதியை ஆதரிப்பவனுக்கு
மார்க்சியத்தில் இடமில்லை.

சோதிடம் ஒரு அறிவியல் என்கின்றனர்
கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள்.
அதைப்போலவே ஹோமியோபதி ஒரு
அறிவியல் என்கின்றனர் இழிந்த
பிற்போக்குவாதிகள். சோதிடமும்
ஹோமியோபதியும் ஒன்றே. இரண்டும்
பிற்போக்கானதே. இரண்டும் அறிவியலுக்கு
எதிரானதே. இரண்டுக்கும் மார்க்சியத்தில்
இடமில்லை.

மாவோயிஸ்டுகளே, CPM கட்சி அன்பர்களே,
ஹோமியோபதியை ஆதரிப்பது
பின்நவீனத்துவமே. உங்களுக்கு ஏற்ற தத்துவம்
பின்நவீனத்துவமே தவிர மார்க்சியம் அல்ல. 
நீங்கள் மார்க்சிய அமைப்புகளில் இருந்து
கொண்டு ஹோமியோபதியை ஆதரிக்க
முடியாது. ஹோமியோபதியை நீங்கள்
தாராளமாக ஆதரிக்கலாம். அதற்கு முன்பு
மார்க்சியத்தை விட்டு வெளியேறிவிட
வேண்டும்.

அந்நிய வர்க்கக் கருத்துக்களை எதிர்த்து
மார்க்சிஸ்டுகள் போராட வேண்டும் என்றார்
லெனின். எனவேதான் ஹோமியோபதியை
எதிர்த்து நியூட்டன் அறிவியல் மன்றம்
போராடுகிறது.
******************************************************





 
        

   









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக