புதன், 15 ஆகஸ்ட், 2018

69 சத இட ஒதுக்கீடு! ?
======================
1950ல் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு காங்கிரஸ் அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 25%
பட்டியல் இனத்தவருக்கு (SC) 16%
என #மொத்தம்_41% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இட ஒதுக்கீடு இங்கிருந்தான் ஆரம்பிக்கிறது.
1971ல் திமுக ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 31%,
பட்டியல் இனத்தவருக்கும் ஆதிகுடிகளுக்கும் (SC / ST) 18% என கூடுதலாக 8% சேர்த்து #மொத்தம்_49% மாக இடஒதுக்கீட்டின் அளவை கருணாநிதி உயர்த்துகிறார்.
1980 - 1985 அதிமுக ஆட்சிக் காலத்தில்,
பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 50%,
பட்டியல் இனத்தவருக்கும் & ஆதிகுடிகளுக்கும் (SC/ST) 18% என
#மொத்தம்_68% இட ஒதுக்கீடு எம்ஜியாரால் உயர்த்தப்பட்டது...
(MGR இடஒதுக்கீட்டில் கிரிமிலேயரில் வரும் பொருளாதார பின்புலம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன் கிடையாது என்ற சரத்தை அமுல்படுத்தினார் (அதாவது வருட வருமானம் 9000 ரூபாய்க்கு மேல் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது )
இதை கருணாநிதி அரசியலாக்கினார். அதன்பலனாக அடுத்து வந்த வந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது. அதன்பின் உடனே இட ஒதுக்கீட்டை 68%மாக அதிகப்படுத்தினார் எம்.ஜி.ஆர்)
1989ல் வனவாசம் முடிந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி ஏற்கனவே இருந்த 50% இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 30%,
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு (MBC) 20% என்று இரண்டாகப் பிரித்தார்.
ஏற்கனவே பட்டியல் இனத்தவருக்கு இருந்த 18% இடஒதுக்கீட்டை அப்படியே வைத்துக்கொண்டு,
அதனுடன்,பட்டியல் இன ஆதிகுடிகளுக்கு (ST) 1% என்று தனியாக இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார்.
வி.பி.சிங் ஆட்சி காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 27% மட்டுமே இருக்க வேண்டும். பட்டியல் இனத்தவரையும் சேர்த்த ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50% அளவை தாண்டக்கூடாது என அரசாணை (மார்ச் 13-1990) வெளியிட்டது மத்திய அரசு.
அதன்படி தமிழ்நாட்டில் BC, MBCக்கு இருக்கும் 50% இட ஒதுக்கீட்டை 27%மாக குறைத்தாக வேண்டும்.
அதாவது தமிழகத்தின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவும் 69%லிருந்து 50%மாக குறைத்தாக வேண்டிய இக்கட்டான நிலைமை.
அதை கடுமையாக எதிர்க்க வேண்டிய நிலையில் அதற்கு மாறாக அதை வரவேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி (ஆகஸ்ட் 21,1990). சட்டசபை குறிப்புகளில் 21-8-1990ம் தேதியில் தேடிப்பார்த்தால் இந்த வினோதம் புரியும்.
ஏன் கருணாநிதி 50% இட ஒதுக்கீட்டை ஆதரித்தார் என்பதற்கான பதில் அரசியல் காழ்ப்புணர்ச்சிதான்.
காங்கிரசின் 41% இட ஒதுக்கீட்டை 49% உயர்த்தியவர் கருணாநிதி. இவர் வெறும் 8% மட்டுமே உயர்த்தினார் அடுத்து வந்த MGR 19% உயர்த்தி 68%மாக்கினார்.
மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி இட ஒதுக்கீட்டை 50%மாக குறைத்தால் MGR கொடுத்திருந்த 19% நீக்கப்பட்டு அதற்கு முன்பு கருணாநிதி கொடுத்திருந்த அதே அளவிலான இட ஒதுக்கீடு மட்டுமே இருக்கும் என்ற காழ்ப்புணர்ச்சிதான்.
அடுத்து ஆட்சி மாற்றம். அதிமுக ஆட்சியை பிடிக்கிறது. தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50% நடைமுறையிலேயே இருக்கவும் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 69% இருக்கும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் (செப் 30-1991) தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.
(நவம்பர் 14- 1992) : உச்சநீதிமன்றம் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 50% இட ஒதுக்கீடு மட்டுமே கொடுக்க வேண்டும் என உத்தரவிடுகிறது.
(ஜனவரி 7 -1993) : தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என முடிவெடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
(மார்ச் 22 -1993) : உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது.
(நவம்பர் 9 -1993) : சட்டசபையை கூட்டி தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்க உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது
(நவம்பர் 16-1993) : அந்த தீர்மானத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துகிறது அதிமுக அப்போதெல்லாம் ஆளுங்கட்சி பந்த் நடத்த எந்த தடையும் கிடையாது.
மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
(நவம்பர் 26 -1993) : மேற்கொண்டு என்ன செய்வது என்பதை குறித்து விவாதிக்க ஆளுங்கட்சியானது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது. திமுக தவிர்த்த அனைத்து கட்சிகளும் இதில் கலந்துகொண்டு தங்கள் கருத்தை சொன்னது. திராவிட கழக தலைவர் கி.வீரமணி இந்த 69% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தால் எதிர்காலத்திலும் சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என ஆலோசனை கூறினார்.
அது அனைவராலும் ஏற்கப்படுகிறது.
(டிசம்பர் 30 -1993) : சட்டசபையை கூட்டி தமிழகத்தின் சமூக நீதியை காக்க 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுகிறார் முதல்வர் ஜெயலலிதா
(டிசம்பர் 31 -1993) : சட்டசபையில் சட்டமானது 69% இட ஒதுக்கீடு
(ஜூலை 19 -1994) : இந்த சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் தராததால் தன் அமைச்சரவையோடு டெல்லிக்கு போய் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து ஒப்புதல் வாங்கினார் முதல்வர் ஜெ.
அதே தேதியில் இந்த சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
(ஆகஸ்ட் 31 -1994) : தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் வரிசை எண் 257 Aவில் சேர்க்கும் சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது திமுக உறுப்பினர்கள் மூவரும் பாராளுமன்றத்தை புறக்கணித்தனர்.
69% இட ஒதுக்கீட்டை பாதுகாத்ததால் 'சமூக நீதி காத்த வீராங்கனை' என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு பட்டம் கொடுத்தார் கி.வீரமணி.
சந்தேகம் இருப்பவர்கள் வீரமணியிடம் போய் கேளுங்கள். 50%ஆக குறைக்க நினைத்தது யார்? 69%மாக காக்க நினைத்தது யார் என அவரே சொல்லுவார்.
இதுதான் 69% இட ஒதுக்கீடு உருவான வரலாறு. 1991ல் மீண்டும் திமுக ஆட்சியே தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் இட ஒதுக்கீடு 50% என குறைந்திருக்கும்.
திமுக ஆட்சிக்காலத்தில் அதிகபட்சம் 49% என்றிருந்த இடஒதுக்கீட்டை
#அதிகபட்சம்68% அளவிற்கு_உயர்த்தியவர் #எம்ஜியார் தான். 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றி கொடுத்தவர் #ஜெயலலிதா. இவர்கள் இருவரும் இடஒதுக்கீட்டின் அளவை 50%மாக குறைக்க நினைத்ததும் இல்லை 50% மட்டுமே போதும் என ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
69% இட ஒதுக்கீடுக்கு சட்ட பாதுகாப்பு இருந்த காரணத்தால்தான் அருந்ததியர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்தார் கருணாநிதி. (கிறிஸ்தவர்கள் இவர் கொடுத்த உள் இட ஒதுக்கீடு வேண்டாம் எனக்கூறி திருப்பிக்கொடுத்தது வேறுகதை)
இல்லாவிட்டால் இவர் முன்பு சட்டசபையில் தீர்மானம் போட்ட 50% இட ஒதுக்கீடு மட்டுமே மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் இருந்திருக்கும்.
இப்ப சொல்லுங்க யார் 69% இட ஒதுக்கீடு கொடுத்தது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக