சனி, 25 ஆகஸ்ட், 2018

போலியான ஆரிய திராவிட இனக்கொள்கையை
வீழ்த்தியதில் அறிவியலின் பங்கு!
தற்குறித்தனத்தை வீழ்த்த வல்லது அறிவியலே!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
வில்லர்ட் லிபி என்பவர் யார் என்று தெரியுமா?
தெரியாது! நயன்தாராவின் தங்கச்சி பெயர்
தெரியுமா? தெரியும்!

நடிகை குஷ்புவுக்கு தீட்டு நின்று விட்டதா? இல்லை,
இன்னும் மாதவிடாய் வருகிறதா? புள்ளி
விவரங்களுடனும் அசைக்க முடியாத
ஆதாரங்களுடனும் இதற்கு விடை சொல்ல
சகல குட்டி முதலாளித்துவ அற்பப் புழுக்களும் 
தயாராக இருப்பார்கள் என்பதில் வியப்பில்லை.

நிற்க. சகோதரி குஷ்பு என்னை மன்னிப்பாராக!   
அறிவியல் கட்டுரை எழுதினால் 20  பேருக்கு மேல்
படிக்க மாட்டான். ஆனால் தூமையைப் பற்றி
எழுதினால், 10,000 பேர் படிக்கிறான் என்றால்,
குற்றம் என் மீதா?

மீண்டும் வில்லர்ட் லிபிக்கு வருவோம்.
வில்லர்ட் லிபி ( Willard Libby 1908-1980) என்பவர்
அமெரிக்க வேதியியல் விஞ்ஞானி (Chemist)
வேதியியலில் இவர் Physical Chemistry பிரிவில்
பெரும்பங்களித்தவர். 1960ல் வேதியியலில்
நோபல் பரிசு பெற்றார்.

ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating)
என்ற முறையை இவர் உருவாக்கினார்.
இதன் மூலம் தொல்லியல் துறையின் ஆய்வுகள்
துல்லியத்தை அடைந்தன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய ஒரு
மரத்தின் துண்டோ அல்லது மனித எலும்போ
கிடைத்தால் அதன் வயது என்ன என்பதைத்
துல்லியமாகக் கண்டறிய இவரின் ரேடியோ
கார்பன் டேட்டிங் முறை உதவும்.

கார்பனுக்கு நிறைய ஐசோடோப்புகள் உண்டு.
அவற்றுள் கார்பன்-14 என்பது கதிரியக்கத்
தன்மை கொண்ட (radioactive) ஒரு ஐசோடோப்.
தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என்று
எல்லா உயிரினங்களும் இறந்தவுடன், இந்த
கார்பன்-14 ஐசோடோப்பை உட்கொள்ளுவதை
நிறுத்தி விடுகின்றன. உயிர்கள் இறந்த பிறகு
கார்பன்-14ஐ உட்கிரகிப்பதில்லை என்பதால்,
ஒரு உயிர் எப்போது இறந்தது என்பதை, உடலில்
உள்ள அணுக்கடிகாரம் (nuclear clock) மூலம்
கண்டறியலாம். இதன் மூலம் ஒரு ஸ்பெசிமனின்
வயதை அறிய முடியும். இதுவே ரேடியோ கார்பன்
டேட்டிங் முறை ஆகும்.

அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்ட
பொருள்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை
என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்
என்பது உறுதியானவுடன் தொல்பொருள்
ஆராய்ச்சி முடிவுகள் உண்மைக்கு மிக
நெருக்கமாக வந்தன. இதனால் வரலாற்று 
நிகழ்வுகளின் காலப் பகுப்பை சரியாகக்
கணிக்க முடிந்தது.

இதன் மூலம் வரலாற்றை ஒரு மாயத்திரையாக
மூடியிருந்த பல பொய்மைகள் விலகின.
ஆரிய திராவிடக் கொள்கை இவ்வாறுதான்
வீழ்ச்சி அடைந்தது. அது பற்றிப் பின்னர்
விவரமாகக் காண்போம்.
    
ஆரிய திராவிடக் கொள்கையை  உருவாக்கிய
வில்லியம் ஜோன்ஸ், மாக்ஸ் முல்லர்  ஆகிய இருவரும்
மொழித்தோற்றவியல் அறிஞர்களே (Philologists).
அவர்கள் யாரும் மானுடவியல் அறிஞர்கள் அல்ல
(not anthropologists). தங்களின் அறியாமையால்
மொழிக்குடும்பத்தை மரபினமாக வரையறுத்தார்கள்.
அந்தத் தவறு இன்னமும் நீடிக்கிறது. எவ்வளவு
அறிவியல் ஆதாரங்களைக் காட்டினாலும்,
கல்வியறிவற்ற, அறிவியல் அறியாத,
சுயசிந்தனையற்ற திராவிடத் தற்குறிகள் இதை
ஏற்க முடியாமல் மூச்சுத் .திணறுகிறார்கள். 
தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அவலம்.
 

ஆரியரும் இல்லை; அவர்களுக்கென்று எந்த
தனித்துவ அடையாளமும் இல்லை. பல லட்சக்
கணக்கான இந்தியர்களின் DNA சாம்பிள்கள்,
காஷ்மீர், பஞ்சாபி, உபி, பிஹார், மகாராஸ்டிரா,
கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு என்று பல
மாநிலங்களிலும் உள்ள மக்களின்  சாம்பிள்கள்
எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
சோதனையில் எந்த வேறுபாடும்
காணப்படவில்லை.

ஆக ஆரிய திராவிடப் பொய்மை கிழித்து
எறியப்பட்டது. கரடு தட்டிப்போன, சிந்தனை
மழுங்கிப்போன அறிவியலுக்கு எதிரான
திராவிடக் கருத்தியலை முறியடிக்காமல்
தமிழ்நாட்டில் அறிவோ சிந்தனையோ
வளர முடியாது.
******************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக