வியாழன், 23 ஆகஸ்ட், 2018

பெரும் நெருக்கடியில் வெனிசுலா!
இரு கப் காப்பியின் விலை ரூபாய் இரண்டாயிரம்!
இக்கட்டுரையை பூர்ஷ்வாக்கள் படிக்கக் கூடாது!
===================================================
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
1) வெனிசுலா என்ற நாடு தென் அமெரிக்காவின்
வடக்கு ஓரத்தில் உள்ள ஒரு சிறிய நாடு.
2) இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ள
படத்தைப் பாருங்கள். அதில் வெனிசுலா நாட்டை
அடையாளம் காணுங்கள்.
3) வெனிசுலா ஒரு கடற்கரையோர நாடு. எந்தக்
கடலின் கரை ஓரத்தில் இந்த நாடு உள்ளது?
வாசகர்கள் இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க
வேண்டும்.
4) வெனிசுலா ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் மக்கள்
தொகை மூன்று கோடிக்குச் சற்றே  அதிகம்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும்
குறைவு.
5) முன்பு ஸ்பெயினின் காலனியாக இருந்தது
இந்த நாடு.
6) இந்நாட்டின் தற்போதைய அதிபர் நிக்கோலஸ்
மதுரோ (Nicolas Maduro) ஆவார். இவருக்கு முன்பு
உலகப்புகழ் பெற்ற ஹியூகோ சாவேஸ் (Hugo Chavez)
இந்நாட்டின் அதிபராக இருந்தார். அவர் இறந்ததும்
மதுரா பொறுப்பேற்றார்.
7) வெனிசுலா ஒரு எண்ணெய் வள நாடு. எண்ணெய்
ஏற்றுமதியே நாட்டின் 95 சத வருவாய் ஆகும்.
8) ஸ்பானிஷ் மொழி பேசும் நாடு இது. ஸ்பானிஷ்
போக உள்ளூர் மொழிகளும் பேசப் படுகின்றன.
கிறிஸ்துவ மதமே மக்களால் பின்பற்றப் படுகிறது.
9) வெனிசுலா நாட்டின் நாணயம் (currency)
"வெனிசுலா பொலிவார்"(Venezuelean Bolivar) ஆகும்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு இதுதான்.
1000 பொலிவார் என்பது 87 பைசாவுக்குச் சமம்.
10) புரிகிறதா? 10,000 பொலிவார் என்பது நம்முடைய
ரூ 8.70க்குச் சமம்.
11) வெனிசுலாவில் 1999 முதல் இடதுசாரி ஆட்சி
நடக்கிறது. கடந்த 18 ஆண்டுகளாக ஹியூகோ
சாவேசும் மதுரோவும் நடத்திய நடத்தும் சோஷலிச
ஆட்சி நடக்கிறது.
12) தற்போது வெனிசுலா மிக மோசமான
பொருளாதார நெருக்கடியில் சிக்கித்
தவிக்கிறது. மிக மிகக் கடுமையான பணவீக்கம்
(inflation) அங்கு நிலவுகிறது.
13) பணவீக்கம் என்றால் என்ன?
"Inflation is nothing but too much of money chasing too few of goods" 
என்று 12ஆம் வகுப்பு பொருளாதாரப் பாடப்
புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கும்.
14) பணவீக்கம் என்பதன் வரையறையைப்
புரிந்து கொள்ள முடியாதவர்கள் அதீதமான
விலைவாசி உயர்வு என்று புரிந்து கொள்ளலாம்.
15) வெனிசுலாவில் உள்ள பணவீக்கம் எவ்வளவு
தெரியுமா? இந்த ஆண்டின் முடிவில், அதாவது
டிசம்பர் 2018ன் முடிவில் பணவீக்கமானது
10 லட்சம் சதவீதமாக இருக்கும் என்று அர்த்தம்.
Inflation estimate = 10,00,000 percent.

16) வெனிசுலாவில் ஒரு கப் காப்பியின் விலை
25 லட்சம் பொலிவார். அதாவது ரூ 2175.

17) எனவே இந்த நாட்டில் வாழ முடியாமல்
மக்கள் நாட்டை விட்டு வெளியேறிக்
கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்காண்டுகளில்
2014 முதல் இப்போது வரை 23 லட்சம் பேர்
நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக ஐநா
சபையின் கணக்கீடு.

18) .வற்றாத எண்ணெய் வளம் உள்ள நாடு
வெனிசுலா. இன்று ஏன் இந்த அவளை நிலை?
வாசகர்களின் காத்திரமான கருத்துக்கள்
வரவேற்கப் படுகின்றன.
-------------------------------------------------------------------------------
பின்குறிப்பு-1:
இவ்வளவு எளிமையாகவும் சகல
விவரங்களை உள்ளடக்கியதாகவும், ஒரு
கேப்ஸ்யூலை விழுங்குவது போல் சுலபமாகப்
படித்து கிரகித்துக் கொள்ளும் விதத்திலும்
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. இக்கட்டுரை
மார்க்சிய மற்றும் இடதுசாரி வாசகர்களுக்காக
எழுதப் பட்டது. எனவே பூர்ஷ்வா ஆதரவாளர்கள்
இக்கட்டுரையைப் படிக்க வேண்டாம் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பின்குறிப்பு-2:
இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட  BBC செய்திப்
பிரிவு வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரை பூர்ஷ்வா
ஆதரவாளர்களுக்கு. கல்வி அறிவுடைய ஆங்கிலம்
தெரிந்த பூர்ஷ்வா ஆதரவாளர்கள் BBC கட்டுரையைப்
படித்தால், மேலும் நிறைய விவரங்கள் கிடைக்கும்.
************************************************************
 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக