புதன், 22 ஆகஸ்ட், 2018

தோழர் பொன்னையா வீரபாபு அவர்களுக்கு,
நான்  எட்டாங்கிளாஸ் பாடத்தை நடத்திக்
கொண்டிருக்கிறேன். நீங்கள் OUT OF SYLLABUS  
பாடங்களை முன்வைக்கிறீர்கள்.

எவர் ஒருவரும் தனக்குத் தெரிந்த எல்லா
விஷயங்களையும் வெளியில் சொல்லி விட
முடியாது. இடம் பொருள் ஏவல் சந்தர்ப்பம்
சூழ்நிலை என்று பல காரணிகள் உள்ளன.
இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் ஒருவர்
உண்மையையே பேசினாலும் கூட, அது
ஆரோக்கியமானதாகக் கருதப்படாது.

தமிழ் மார்க்சியச் சூழல் தத்துவக் கல்வியைப்
பொறுத்தமட்டில் மிகவும் பலவீனமாகவும்
ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டும்
இருக்கிறது. இதைக் கணக்கில் கொள்ளாமல்
எல்லா விஷயங்களைப் பற்றியும்
விவாதிக்க இயலாது. அருள்கூர்ந்து நீங்கள்
சரியாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க
வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Negation of negation பற்றிய விவாதத்தை இத்துடன்
முடிக்கிறேன்.


எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில்
விளக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவதை
மறுக்க இயலாது. அப்படியானால், ஏங்கல்ஸ்
நிறையவே அறிவியல் செய்திகளை எழுதி
இருக்கிறாரே, (அங்கக ரசாயனம் (organic chemistry)
பற்றி கால்குலஸ் கணிதம் பற்றி) அவற்றைக்
கற்பிக்காமல் விட்டு விடச் சொல்கிறீர்களா?

ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகளே என்கிறார்
அம்பேத்கார். இந்தியாவின் பூர்வ குடிகளே
ஆரியர் என்று பெயர் பெற்றனர் என்கிறார்
அம்பேத்கார்.

பார்ப்பனர்கள் மட்டுமே ஆரியர்கள் என்ற
தவறான கருத்து தமிழ்நாட்டில் மட்டுமே
உள்ளது. வட இந்தியாவில் இல்லை.

சூத்திரர்கள் பலர் அரசர்களாக இருந்து
நாட்டை (இந்தியாவை) ஆண்டனர் என்கிறார்
அம்பேத்கார். ஆதாரம் தருகிறார்.
  

ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை திராவிட சிசு
என்று அழைத்தார். தமிழ்க் குழந்தை அல்லது
தமிழ்ச் சிறுவன் என்பதை சமஸ்கிருதத்தில்
திராவிட சிசு என்றுதான் அழைப்பர்.

தமிழ்தான் மூலம். ஆதிமூலம். தமிழை
ஆங்கிலேயன் டமில் என்கிறான்.
சமஸ்கிருதத்தில் திராவிடம் என்கிறான்.
அவன் மொழியில் அவன் அழைக்கும் விதம்
என்பது நமது அடையாளம்  ஆகாது.
தமிழ் மக்கள் யாரும் தங்களை திராவிடர்கள்
என்று அழைத்துக் கொண்டதில்லை.

அதுபோல நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் என்பது
 திராவிட வேதம் எனப்படுகிறது. வட இந்தியர்கள்
நமது  தமிழ் வைணவ நூல்களை அழைத்த
பெயரே அது.
பெரியாழ்வார் முதலான பன்னிரு ஆழ்வார்களும்
தமிழர்களையோ தங்களையோ திராவிடர்கள்
என்று அழைக்கவில்லை.


   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக