சனி, 4 ஆகஸ்ட், 2018

ஹோமியோபதி அறிவியல் மருத்துவம் அல்ல!
பிற்போக்கான வாதங்களுக்கு மறுப்பு!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) சர்ஜரி என்னும் அறுவை சிகிச்சை ஹோமியோபதி
மருத்துவத்தில் அறவே கிடையாது.

2) சாலை விபத்தில், ரயில் விபத்தில் காயமுற்றும்
கை கால்கள் கிழிந்து தொங்கும் நிலையிலும்
உள்ள நோயாளிகளின் உயிரை ஹோமியோபதி
காப்பாற்றாது.

3) மாடியில் இருந்து தவறி விழுந்து, ரத்தப்போக்கு
நிற்காமல் மூர்ச்சை அடையும் நோயாளிகளின் 
உயிரை ஹோமியோபதி காப்பாற்றாது. 

4) இவர்களை எல்லாம் அல்லோபதிதான் காப்பாற்றும்.
ஹோமியோபதி  உயிர்காக்கும் மருத்துவம் அல்ல.

5) இருதய மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று
(kidney transplantation) போன்ற சிகிச்சையெல்லாம்
ஹோமியோபதியில் அறவே கிடையாது. பின் எப்படி
அது அல்லோபதிக்கு மாற்றாக முடியும்?

6) விபத்தில் கண்பார்வையை இழந்தவர்களுக்கு
 இறந்து போன ஒருவரின் கண்ணை எடுத்துப்
பொருத்திப் பார்வை கொடுக்கிறது அல்லோப்பதி.
ஹோமியோபதியால் இதைச் செய்ய முடியுமா?

7) இறந்துபோன பின் தங்களது உடலை மருத்துவக்
கல்லாரிக்குத் தானமாக வழங்குகின்றனர் சிலர்.
ஹோமியோபதியால் இவ்வாறு உடல் தானம்
பெற முடியுமா?

8) உடலுறுப்பு தானம் (organ donation), கண் தானம்,
ரத்த தானம் என்று நாளும் வளர்ந்து கொண்டே
போகிற அல்லோபதியுடன் ஹோமியோபதியை
ஒப்பிட முடியுமா?

9) குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவும்
தடய அறிவியல் துறை (forensic science) என்பது   .
அல்லோபதியைச் சேர்ந்ததா? அல்லது
ஹோமியோபதியைச் சேர்ந்ததா? 

10) அறுவை சிகிச்சையின் தந்தை (Father of surgery)
என்று போற்றப்படும் சுஸ்ருதர் ஓர் இந்திய
மருத்துவர். இன்றைக்கு 2500 ஆண்டுக்கு முன்பே
இந்தியாவில் அறுவை சிகிச்சை இருந்தது.
ஆனால் சமீபத்தில் வெறும் 200 ஆண்டுக்கு முன்பு
பிறந்த ஹோமியோபதியில் அறுவை சிகிச்சையே
இல்லையே! அது எப்படி ஒரு மருத்துவ முறையாகும்?
****************************************************************** 
தடுப்பூசியின் தத்துவம்!
தடுப்பூசியை எதிர்ப்பவன் சமூக விரோதி!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
தடுப்பூசி என்பது ஒரு community cure. அதாவது மொத்த
சமூகமும் சேர்ந்தே நோயை எதிர்கொள்ள
முடியும். தனியாகச் சிலர் விலகி  நின்றால்
அது மொத்த சமூகத்தையும் பாதிக்கும்.

இது community cure என்பதால், வெற்றி சதவீதம்
(success rate) 98 சதம் என்று இருக்கும். இதன் பொருள்
2 சதம் பேரிடம் தடுப்பூசி தோல்வி .அடையலாம்.
அதாவது தடுப்பூசி போட்ட பிறகும் கூட,
100 பேரில் 2 பேருக்கு நோய் வரக்கூடும்.
இதில் தனித்தனியாக ஒவ்வொரு தனிநபருக்கு
என்று success rate பார்க்க முடியாது. 
ஆனாலும் எந்த ஒரு சமூகத்துக்கும் தடுப்பூசி
தவிர வேறு வழியில்லை.

ஒருவரைக் கூட விட்டு விடாமல் அனைவருக்கும்
100 சதம் தடுப்பூசி போடும்போதுதான்,
காலப்போக்கில் success rate 100 சதத்தை எட்டும்.
நான் தடுப்பூசி போட மாட்டேன் என்று சொல்ல
ஒரு சமூகத்தில் வாழும் எந்தத் தனிமனிதனுக்கும்
உரிமை இல்லை.

 இந்தியா போன்ற வறுமையும் மக்கள்தொகையும்
மிகுந்த நாடுகளில் உள்ளவர்களுக்கு, அப்படிச்
சொல்ல உரிமை இல்லை. அப்படிச் சொல்பவன்
கொடிய சமூக விரோதியே.

உன் குழந்தை, என் குழந்தை என்று எல்லார்
குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
நான் என்  மாட்டேன் என்று சொல்ல எவருக்கும்
உரிமை கிடையாது. ஏனெனில், தடுப்பூசி
என்பது ஒரு சமூகம் மொத்தமும் (community as a whole)
சேர்ந்து செய்யும்போதுதான் வெற்றி கிடைக்கும்.

Man is a social animal. இதன் பொருள் என்ன?
சமூகமாகச் சேர்ந்து வாழ்வதே மனித
சமூகம். இங்கு தனிமனித சுதந்திரம் என்ற
பெயரில் விலகி நிற்க அனுமதி இல்லை.
**********************************************  

அல்லோபதி என்னும் ஆங்கில ஐரோப்பிய
மருத்துவம் அதிகம் போனால் 1000 ஆண்டுப்
பழமை கொண்டது. சுசுருதர் 2500 ஆண்டுப்
பழமை கொண்டவர். வெளிநாடுகளின்
மருத்துவப் படிப்புக்கான பாடங்களில்
இந்திய சுசுருதர் பற்றிப் பாடம் உள்ளது.
இது அறிவியல் படித்த அனைவருக்கும்
தெரிந்த விஷயமே.

சுஸ்ருதர் பற்றியும் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றியும்
அகில இந்திய சென்னை வானொலியில் பேசி
இருக்கிறேன்.கட்டுரை எழுதி இருக்கிறேன்.
 பல ஆண்டுக்கு முன்பே. வீண் கற்பனையை
பிறழ் புரிதலைத் தவிர்க்க அறிவியலைப்
படிக்கவும்.    ஆங்கில மருத்துவம்


தடுப்பூசியின் பலாபலன் உடனடியாகத்
தெரிந்து விடும். நோயைத் தடுக்கத்
தவறுகிற தடுப்பூசி அம்பலப்பட்டு விடும்.
அப்போது அரசு பதில் சொல்ல வேண்டியது வரும்.
  

நீங்கள் முற்றிலும் பிறழ்புரிதலில் இருக்கிறீர்கள்.
அறுவை சிகிச்சை என்பது அல்லோபதி என்னும்
ஆங்கில மருத்துவத்தின் பிரிக்க முடியாத பகுதி.
அதுபோல இந்திய ஆயுர்வேத மருத்துவத்திலும்
அறுவை சிகிச்சை உண்டு. அறுவை சிகிச்சையை
உலகுக்கு முதலில் சொன்னது இந்தியா.

இதற்கெல்லாம் ஏற்கனவே பதிலளித்தாகி
விட்டது. தோழர் உறவுபாலா அவர்களின்
பதிவிலேயே பின்னூட்டம் இட்டு விட்டேன்.
அருள்கூர்ந்து அந்தப் பதிலை மீண்டும்
படிக்கவும்.

முதலில் நீங்கள் அல்லோபதி என்ற சொல்லுக்கு
என்ன பொருள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கில மருத்துவமும் சரி, இந்திய மருத்துவமான
சித்தா, ஆயுர்வேதம் எல்லாமும் சரி அல்லோபதி
தத்துவத்தின் அடிப்படையில் வேலை செய்பவை.
அல்லோபதி என்றால் நோய்க்கு எதிரான  குணம் உடைய மருந்தைக்
கொடுக்கும் மருத்துவம் என்று பெயர்.
ஹோமியோபதி என்றால் நோய்க்கு ஒத்த அதே
தன்மை கொண்ட மருந்தைக் கொடுப்பது என்பது
பொருள். எனவே இங்கிலீஷ் வைத்தியமும் சரி,
நமது சித்த வைத்தியமும் சரி அல்லோபதி
தத்துவமே. 


இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு ஐநா WHOவும்
அங்கீகரித்த தடுப்பூசிகளையே போட வேண்டும்
என்று இந்தியாவில் GUIDING PRINCIPLES உண்டு.
அதை அரசு மீறக்கூடாது.

அரசு தவறு செய்தால், அரசை எதிர்த்துப்
போராட வேண்டுமே ,தவிர, அறிவியலை
எதிர்த்துப் போராடக் .கூடாது. சரியான
தடுப்பூசி கோரிப்  போராட வேண்டுமே தவிர,
தடுப்பூசி போட  மாட்டேன் என்று ஒதுங்கக்
கூடாது.


மருத்துவம் என்பது உயிர் காக்கும் தன்மை
உடையது. அறுவை சிகிச்சையே இல்லாத
ஹோமியோபதியை  ஒரு மருத்துவ
முறையாகவே ஏற்க இயலாது.மருத்துவம்
என்பது உயிர் காக்கும் தன்மை உடையது.
ஆபத்து நேரத்தில், விபத்தில் அடிபட்டு
உயிருக்குப் போராடும் ஒருவனின்
உயிர் காக்க முடியாத ஹோமியோபதி
எப்படி மருத்துவம் ஆகும்?
   

இன்னும் சொல்ல வேண்டியது நிறையவே
இருக்கிறது. அடுத்தடுத்த பதிவில்
சொல்லலாம்.


உங்களின் சவாலுக்கு
இங்கு இடமளிக்க முடியாது. இதை வேறு எங்காவது
போய் நிரூபிக்கவும். உங்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை என்றால், மற்றவர்களுக்கு
குழப்பம் என்று கூறுவதா? இது சரியல்ல.
பதிவில் சொல்லப்பட்ட விஷயத்திற்கு பதில்கொடுக்கும் அக்கறையும் நேர்மையும் வேண்டும்.
இங்கு மோசடிக்கு இடம் கிடையாது.

அறுவை சிகிச்சையே இல்லாத

ஒரு சாலை விபத்தில் கை துண்டாகிப்போன
ஒருவனுக்கு மருத்துவம் செய்ய வேண்டும்.
அறுவை சிகிசசையை இந்த இடத்தில் தவிர்க்க
முடியுமா?

மருத்துவர் இல்லை என்பதல்ல. ஹோமியோபதி
மருத்துவத்திலேயே அறுவை சிகிச்சைக்கு
இடமில்லை. இதை மறைக்க முயல்வதால்
பயனில்லை.


பதில் சொல்லுங்கள் ஐயா.
ஹோமியோபதி மருத்துவத்தில்
அறுவை சிகிச்சைக்கு இடம் இல்லை.
உண்டு என்றால் உண்டு என்று சொல்லுங்கள்.
வார்த்தையை அளந்து  பேசவும்.  உங்களைப்
போன்ற ஒரு நபர் வார்த்தையை நிதானித்துப்
பேச வேண்டும்.


எந்த நாட்டில் அல்லோபதி ஆட்கள் அரசைப்
பணிய வைத்தார்கள்? இதெல்லாம்
அப்பட்டமான பொய். ஹோமியோபதி
மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்கு இடம் இல்லை.
அது முழுமையான மருத்துவம் அல்ல.
சாமுவேல்  ஹானிமன் தமது மருத்துவத்தில்
மருந்தைப் பற்றி மட்டுமே சொல்கிறார்.அவர்
எந்த இடத்திலும் அறுவை சிகிச்சை பற்றிப்
பேசவில்லை.

அவரின் நூலான Organon of medicineஐ வாசகர்கள்
படிக்கலாம். (ஆங்கிலத்தில் உள்ள நூல் அமேசானில்
கிடைக்கிறது. விலை ரூ 126 மட்டுமே). மேலும்
அவர் எழுதிய எந்த நூலிலும் அறுவை சிகிச்சையைப்
பற்றியோ, அதை ஹோமியோபதி முறையில் எப்படி
மேற்கொள்ளுவது என்பது பற்றியோ கூறவில்லை.
அவரின் வாசகம் ஹீலிங் என்பதுதான். 
  
ஹோமியோபதியில்
ஏன் அறுவை சிகிச்சை இல்லை?
--------------------------------------------------------
ஹோமியோபதியின் தத்துவம் Let likes be cured by likes
என்பது. அதாவது நோயின் தன்மை எதுவோ
அதே தன்மையைக் கொண்ட மருந்தை
அளிப்பது. இந்தக் கொள்கை அறுவை
சிகிச்சைக்குப் பொருந்தி வராது. எனவே
ஹோமியோபதியில் தத்துவத்தைக் கொண்டு
அறுவை சிகிச்சை செய்ய முடியாது.

முற்றிலும் தவறானதும் அறிவியலுக்கு
எதிரானதுமான ஆபத்தான கருத்துக்களை 
கூறுகிறீர்கள்.மனித உடல் என்பது உயிருள்ள
விஷயம். அதை உயிரற்ற ஒரு எந்திரம்
போல அணுகுவது பெரும் மடமை.

ஒரு பழுதான கடிகாரத்தைச் சரி செய்வது
போல, விபத்தில் துண்டாகிப்போன காலுடன்
வரும் ஒரு நோயாளியை குணப்படுத்த முடியாது.
அன்றாட வாழ்க்கையில் அறுவை சிகிச்சைக்குத்
தேவை இருந்து கொண்டே இருக்கிறது.
விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள்
அறுவை சிகிச்சையின் தேவையை வலியுறுத்திக்
கொண்டே இருக்கின்றன.ஆனால்
ஹோமியோபதியில் அறுவை சிகிச்சைக்கு
இடமில்லை. எனவே ஹோமியோபதி
மனிதர்களுக்குப் பயனற்றது.

மீண்டும் பொய் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்வது
உண்மை என்று வைத்துக் கொண்டாலும்,
பிற மாநிலங்களில் ஏன் ஹோமியோபதியில்
அறுவை சிகிச்சை இல்லை? வெளிநாடுகளிலும்
ஏன் இல்லை? எந்த ஓர் நாட்டிலும் ஹோமியோபதியில்
அறுவை சிகிச்சை என்பதே கிடையாது.
ஹோமியோபதியில் அறுவை சிகிச்சைக்கு
இடமில்லை. அது வெறும் மருந்து  பற்றி
மட்டுமே பேசுகிறது. மனித குல வரலாற்றில்
எந்த ஓர் ஹோமியோபதி மருத்துவரும் அறுவை
சிகிச்சை செய்தது கிடையாது. இது 200 ஆண்டு கால 
வரலாறு.

   

ஹோமியோபதிக்கு ஸ்டாலின் தடை!
------------------------------------------------------------------ 
சோவியத் ஒன்றியத்தின் மருத்துவர்கள்,
விஞ்ஞானிகள் மாநாட்டில் ஹோமியோபதி
பற்றி விவாதிக்கப்பட்டு, அது ஒரு
போலி அறிவியல் என்று முடிவு எடுக்கப்பட்டது.
விஞ்ஞானிகளின் முடிவை ஏற்ற ஸ்டாலின்
ஹோமியோபதியை தடை செய்து உத்தரவு
பிறப்பித்தார்.  அரசு உத்தரவை மீறிய
ஹோமியோபதி மோசடி வைத்தியர்கள் சிறை
செய்யப்பட்டனர். இது வரலாறு.


சாலை விபத்தில் அடிபட்டு கால் முறிந்து
கை உடைந்து, உடைந்த கையோடு
வரும் ஒருவனுக்கு அறுவை சிகிச்சையே
தீர்வு. அது ஹோமியோபதியில் இல்லை.
இதற்கு என்ன பதில்? அறுந்த கையை
அல்லோபதி ஓட்ட வைக்கிறது. ஹோமியோபதி
ஓட்ட வைக்குமா?


1) அறுந்த கையை ஓட்ட வைக்குமா
ஹோமியோபதி?
2) விபத்தில் கண்ணில் அடிபட்டு 
கண்ணை இழந்தவனுக்கு வேறு கண் பொருத்தி
பார்வை கொடுக்குமா ஹோமியோபதி?

முடியும்  அல்லது முடியாது என்று நேரடியான
பதில் தேவை.


உறவுபாலா அவர்கள் மேலான கவனத்திற்கு,

சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின்
ஹோமியோபதியை போலி அறிவியல் என்று
தடை செய்தார். தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய
நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக்கஸ்லவேகியா
உள்ளிட்ட நாடுகளிலும் ஹோமியோபதி
தடை செய்யப்பட்டது. ஹோமியோபதியை
மார்க்சியம் ஏற்கவில்லை. ஹோமியோபதி ஒரு
மோசடி என்பதே மார்க்சியத்தின் நிலைபாடு. 

அதைத்தானே இவ்வளவு நேரமும் சொல்கிறேன்.
எனவேதான் அறுவை சிகிச்சைக்கே இடமில்லாத
ஹோமியோபதி மக்களுக்குப் பயன் தராது
என்கிறோம்.
 
கல்யாண சுந்தரம் அவர்களுக்கு,
---------------------------------------------------------
தோழர் ஸ்டாலின் காலத்தில் மட்டுமல்ல,
தற்போதும் ரஷ்யாவில் ஹோமியோபதிக்கு
எதிர்ப்பே நிலவுகிறது. அண்மையில் 2016ல்
ரஷ்ய அறிவியல் அகாடமி (Russian Academy of Sciences)
என்ற விஞ்ஞானிகளின் அமைப்பு ஹோமியோபதி
உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று
வரையறுத்துள்ளது.  லிங்க் அடுத்த கமெண்டில்.


உறவு பாலா அவர்களே,
வார்த்தையை அளந்து பேசவும் என்று
மீண்டும் எச்சரிக்கிறேன். அவதூறுக்கு
இங்கு இடமில்லை. மார்க்சியம்
ஹோமியோபதியை ஏற்கவில்லை. இது உறுதி.
ஒன்று நீங்கள் ஹோமியோபதியை விட்டு விட
வேண்டும். அல்லது மார்க்சியத்தை
விட்டு விட வேண்டும். இரண்டும் பொருத்தம்
உடையதல்ல. ஸ்டாலின் கூறியது தவறு
என்று நீங்கள் சொல்கிறீர்களா?

ஜனநாயகம்= மக்களாட்சி. இது அனைவரும்
அறிந்ததே.
 

ஆதித்திரட்டல் என்னும் மூலதன சேகரம் குறித்து
இங்கிலாந்து நாட்டின் பொருளாதார நிபுணர்
ஆடம் ஸ்மித் எழுதிய "நாடுகளின் செல்வம்
பற்றிய விசாரணை"  (An inquiry into the wealth of nations)
என்ற நூலில் விரிவாக உள்ளது. காரல் மார்க்சே
மிகவும் போற்றிய நூல் அது. ஆடம் ஸ்மித்
நூலில் இருந்து மார்க்ஸ் விரிவாக மேற்கோள்
காட்டுகிறார். சுருங்கக்கூறின், நாடுகளைக்
கொள்ளை அடிப்பது மூலதன சேகரத்துக்கு
ஒரு முக்கிய வழி.

உண்மையை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.
இதை முதலிலேய ஏற்றுக் கொள்ளும்
நேர்மை பலருக்கு இல்லை. எனவே விவாதம்
அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

நீங்கள் உளறிக் கொண்டே இருக்கிறீர்கள்!
குடிப்பழக்கம் தங்களிடம் உண்டோ என்று
எண்ணுவதற்கே இந்த உளறல் இடமளிக்கும்.
காலன்துரை இங்கு எங்கே வந்தார்? நான்
இங்கு ரஷ்ய அதிபர் மார்க்சிய ஆசான்
ஸ்டாலின் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறேன்.
ஸ்டாலின் ஹோமியோபதியை ஏற்கவில்லை.
அது மோசடையானது என்கிறார். அது போலி
என்கிறார் அது அறிவியலே அல்ல என்கிறார்.
ஹோமியோபதியைத் தடை செய்தார். இது
வரலாறு.
.

அடுத்து ஹோமியோபதியில் இயங்கியல்
எதுவும் இல்லை. அதன் தத்துவம் இயங்கியலுக்கு
எதிரானது. அதை நிரூபிக்கும் கட்டுரையை
நாளை வெளியிடுகிறேன்.

2016ல் ஸ்டாலின் இல்லை. இப்போது
இருப்பவர் புதின். இவர் காலத்தில்
RAS Russian Academy of Science  என்ன முடிவு
எடுத்துள்ளது? ஹோமியோபதி ஒரு
health hazard என்று முடிவெடுத்து உள்ளது.



1 கருத்து: