பதிவில் நான் கூறி இருப்பது சான்றுகளின்
அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில்
வந்து சேர்ந்த முடிவு. தாங்கள் கூறி இருப்பது
அவதூறு; ஆதாரமற்றது. ஒரு பெரும் ஆளுமையை
காரணம் இன்றிக் கண்டனம் செய்வதன் மூலம்
ஹீலர் பாஸ்கரின் கருத்துக்கள் மார்க்சியத்துக்கு
எதிரான பிற்போக்குக் கருத்துக்கள்.அவற்றை
மார்க்சியத்தைக் கொண்டு எதிர்த்து
முறியடிக்கிறோம். அதுதான் இந்தப் பதிவு.
புரட்சிகர சக்திகள் யாரும் அவரை
எதிர்க்கவில்லை. கலைஞர் அவரை எதிர்த்தார்.
அ மார்க்ஸ் அவரை எதிர்த்தார். இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் அவரை எதிர்த்தனர்.
கூடங்குளம் என்ஜிஓ உதயகுமார் அவரை எதிர்த்தார்.
பார்ப்பன ஞானி அவரை எதிர்த்தார்.
இவர்கள் எல்லாம் புரட்சிகர சக்திகளா?
கோடிக்கணக்கான மக்களின் அன்பையும்
அபிமானத்தையும் அவர் பெற்றது எப்படி?
ஹோமியோபதி குறித்த அறிவியல் பார்வை!
----------------------------------------------------------------------------
ஹோமியோபதி இந்திய அரசினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவ முறையாக
இருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும்
ஹோமியோபதியை அங்கீகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஹோமியோபதி அறிவியல்
ரீதியாக சரியானது என்று இன்றுவரை
நிரூபிக்கப் படவில்லை. தவறானது என்றும்
திட்டவட்டமான முடிவுகள் இல்லை. இதுதான்
ஹோமியோபதி குறித்த நிலவரம்.
ஒரு மருத்துவ முறையை தர்க்கத்தைக்
கொண்டு சரியானது என்று நிரூபிக்க
முடியாது. இயங்கியலை டாக்டர் சாமுவேல்
ஹானிமன் கையாண்டு இருக்கலாம்.
ஏனெனில் ஹானிமன் ஒரு ஜெர்மானியர்.
ஜெர்மானிய இயங்கியலை உருவாக்கிய
இமானுவேல் கான்ட்டும் ஹெக்கலும்
ஜெர்மானியர்களே. எனவே தம் சொந்த
மண்ணில் பிறந்த ஜெர்மானிய இயங்கியலை
ஹானிமன் பயன்படுத்தி இருக்கக் கூடும்.
ஆனால் இயங்கியல் என்பது தத்துவம்,
கோட்பாடுகள் ஆகியவற்றின் மெய்மையைக்
கண்டறியப் பயன்பட்ட ஒரு உண்மையறியும்
முறை. அதைக் கொண்டு ஹோமியோபதி
என்னும் மருத்துவ முறை சரியானது என்று
முடிவுக்கு வர இயலாது.
Physics, Maths ஆகியவை இயற்கை விஞ்ஞானம்
(natural science) ஆகும். இவற்றின் விதிகள்
கறார்த்தன்மை உடையவை; சர்வாம்சத்
தன்மை உடையவை (universal). சமூக
விஞ்ஞானம் அப்படியல்ல. அவற்றின்
விதிகள் சதா மாறிக் கொண்டே இருப்பவை.
இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும்
ஒன்றல்ல.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
--------------------------------------------------------
ஒரு நபரையோ அல்லது ஒரு கோட்பாட்டையோ
எப்படி மதிப்பிடுவது? இதற்கு மார்க்சியம்
விடையளிக்கிறது. புறவயமான மதிப்பீடு
தேவை (objective assessment) என்கிறது மார்க்சியம்.
இதற்கு மாறாக, பின்நவீனத்துவமும் குட்டி
முதலாளித்துவமும் தங்களின் சொந்த மன
விகாரங்களில் இருந்து ஒரு விஷயத்தை
முடிவு செய்யும். இது அகநிலை விருப்பம்
சார்ந்த (subjectivity) கருத்துமுதல்வாதப் பார்வை.
அப்துல் கலாம் அவர்களை புறவயமாக
மதிப்பிடுவது எப்படி? அறிவியல் துறையில்
அவரின் பங்களிப்பு என்ன என்று முதலில்
தெரிய வேண்டும். அவரின் நீண்ட வாழ்நாளில்
பெரும்பகுதி ஏன் முழுப்பகுதியுமே அறிவியல்
சார்ந்தது. எனவே அவரின் அறிவியல்
பங்களிப்பை மதிப்பிடுவது எப்படி? அதற்கு
அறிவியல் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல்
சார்ந்த அறிவுடைமை இல்லாமல் கலாம்
அவர்களை மதிப்பிட .இயலாது.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் 5 ஆண்டுகள்
மட்டுமே. அதன் பின்னர் அவர் ஆசிரியப்
பணியை ஏற்றார். அதாவது அவர் விண்வெளி
அறிவியல் சார்ந்த ஆசிரியராக ஆலோசகராக
இருந்தார். அவரின் இந்தப் பணியை மதிப்பிட
வேண்டுமென்றாலும், அறிவியல் சார்ந்த
அறிவுடைமை தேவைப்படுகிறது.
மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு மதத் தலைவருக்கு
அவர் மரியாதை செலுத்தினார் என்பதை
வைத்துக் கொண்டு அவரை ஒட்டு மொத்தமாக
மதிப்பிடுவது பிற்போக்கானது; அறிவியலுக்கு
எதிரானது.
டாக்டர் கலாம் மீதான எதிர்மறை விமர்சங்கள்
அனைத்தும் கருத்துமுதல்வாதப் பார்வை
கொண்டவை. பிற்போக்கான ஒரு தளத்தில்
இருந்து கொண்டு அவர் மீது அவதூறு பொழிபவை.
அறிவியல் குறித்த புரிதலின்மையால்
அறியாமையால் .விளைந்தவை. எந்த ஒரு
நிரூபணமும் .இல்லாதவை. எனவே
பிற்போக்கானவை.
அடிப்படையில், தரவுகளின் அடிப்படையில்
வந்து சேர்ந்த முடிவு. தாங்கள் கூறி இருப்பது
அவதூறு; ஆதாரமற்றது. ஒரு பெரும் ஆளுமையை
காரணம் இன்றிக் கண்டனம் செய்வதன் மூலம்
ஹீலர் பாஸ்கரின் கருத்துக்கள் மார்க்சியத்துக்கு
எதிரான பிற்போக்குக் கருத்துக்கள்.அவற்றை
மார்க்சியத்தைக் கொண்டு எதிர்த்து
முறியடிக்கிறோம். அதுதான் இந்தப் பதிவு.
புரட்சிகர சக்திகள் யாரும் அவரை
எதிர்க்கவில்லை. கலைஞர் அவரை எதிர்த்தார்.
அ மார்க்ஸ் அவரை எதிர்த்தார். இஸ்லாமிய
அடிப்படைவாதிகள் அவரை எதிர்த்தனர்.
கூடங்குளம் என்ஜிஓ உதயகுமார் அவரை எதிர்த்தார்.
பார்ப்பன ஞானி அவரை எதிர்த்தார்.
இவர்கள் எல்லாம் புரட்சிகர சக்திகளா?
கோடிக்கணக்கான மக்களின் அன்பையும்
அபிமானத்தையும் அவர் பெற்றது எப்படி?
ஹோமியோபதி குறித்த அறிவியல் பார்வை!
----------------------------------------------------------------------------
ஹோமியோபதி இந்திய அரசினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவ முறையாக
இருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும்
ஹோமியோபதியை அங்கீகரித்துள்ளது.
அதே நேரத்தில் ஹோமியோபதி அறிவியல்
ரீதியாக சரியானது என்று இன்றுவரை
நிரூபிக்கப் படவில்லை. தவறானது என்றும்
திட்டவட்டமான முடிவுகள் இல்லை. இதுதான்
ஹோமியோபதி குறித்த நிலவரம்.
ஒரு மருத்துவ முறையை தர்க்கத்தைக்
கொண்டு சரியானது என்று நிரூபிக்க
முடியாது. இயங்கியலை டாக்டர் சாமுவேல்
ஹானிமன் கையாண்டு இருக்கலாம்.
ஏனெனில் ஹானிமன் ஒரு ஜெர்மானியர்.
ஜெர்மானிய இயங்கியலை உருவாக்கிய
இமானுவேல் கான்ட்டும் ஹெக்கலும்
ஜெர்மானியர்களே. எனவே தம் சொந்த
மண்ணில் பிறந்த ஜெர்மானிய இயங்கியலை
ஹானிமன் பயன்படுத்தி இருக்கக் கூடும்.
ஆனால் இயங்கியல் என்பது தத்துவம்,
கோட்பாடுகள் ஆகியவற்றின் மெய்மையைக்
கண்டறியப் பயன்பட்ட ஒரு உண்மையறியும்
முறை. அதைக் கொண்டு ஹோமியோபதி
என்னும் மருத்துவ முறை சரியானது என்று
முடிவுக்கு வர இயலாது.
Physics, Maths ஆகியவை இயற்கை விஞ்ஞானம்
(natural science) ஆகும். இவற்றின் விதிகள்
கறார்த்தன்மை உடையவை; சர்வாம்சத்
தன்மை உடையவை (universal). சமூக
விஞ்ஞானம் அப்படியல்ல. அவற்றின்
விதிகள் சதா மாறிக் கொண்டே இருப்பவை.
இயற்கை விஞ்ஞானமும் சமூக விஞ்ஞானமும்
ஒன்றல்ல.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!
--------------------------------------------------------
ஒரு நபரையோ அல்லது ஒரு கோட்பாட்டையோ
எப்படி மதிப்பிடுவது? இதற்கு மார்க்சியம்
விடையளிக்கிறது. புறவயமான மதிப்பீடு
தேவை (objective assessment) என்கிறது மார்க்சியம்.
இதற்கு மாறாக, பின்நவீனத்துவமும் குட்டி
முதலாளித்துவமும் தங்களின் சொந்த மன
விகாரங்களில் இருந்து ஒரு விஷயத்தை
முடிவு செய்யும். இது அகநிலை விருப்பம்
சார்ந்த (subjectivity) கருத்துமுதல்வாதப் பார்வை.
அப்துல் கலாம் அவர்களை புறவயமாக
மதிப்பிடுவது எப்படி? அறிவியல் துறையில்
அவரின் பங்களிப்பு என்ன என்று முதலில்
தெரிய வேண்டும். அவரின் நீண்ட வாழ்நாளில்
பெரும்பகுதி ஏன் முழுப்பகுதியுமே அறிவியல்
சார்ந்தது. எனவே அவரின் அறிவியல்
பங்களிப்பை மதிப்பிடுவது எப்படி? அதற்கு
அறிவியல் தெரிந்திருக்க வேண்டும். அறிவியல்
சார்ந்த அறிவுடைமை இல்லாமல் கலாம்
அவர்களை மதிப்பிட .இயலாது.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் 5 ஆண்டுகள்
மட்டுமே. அதன் பின்னர் அவர் ஆசிரியப்
பணியை ஏற்றார். அதாவது அவர் விண்வெளி
அறிவியல் சார்ந்த ஆசிரியராக ஆலோசகராக
இருந்தார். அவரின் இந்தப் பணியை மதிப்பிட
வேண்டுமென்றாலும், அறிவியல் சார்ந்த
அறிவுடைமை தேவைப்படுகிறது.
மாற்று மதத்தைச் சார்ந்த ஒரு மதத் தலைவருக்கு
அவர் மரியாதை செலுத்தினார் என்பதை
வைத்துக் கொண்டு அவரை ஒட்டு மொத்தமாக
மதிப்பிடுவது பிற்போக்கானது; அறிவியலுக்கு
எதிரானது.
டாக்டர் கலாம் மீதான எதிர்மறை விமர்சங்கள்
அனைத்தும் கருத்துமுதல்வாதப் பார்வை
கொண்டவை. பிற்போக்கான ஒரு தளத்தில்
இருந்து கொண்டு அவர் மீது அவதூறு பொழிபவை.
அறிவியல் குறித்த புரிதலின்மையால்
அறியாமையால் .விளைந்தவை. எந்த ஒரு
நிரூபணமும் .இல்லாதவை. எனவே
பிற்போக்கானவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக