சனி, 18 ஆகஸ்ட், 2018

லெனின் முகமது நபி அல்ல!
சமீர் அமின் பற்றிய 3ஆவது மற்றும்
இறுதிக் கட்டுரை! பின்னூட்டங்களுக்குப் பதில்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
1) ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் வரையறை
மார்க்சியர்களைக் கட்டுப்படுத்தக் கூடியது.
ஆனால் அது மார்க்ஸாலஜிஸ்டுகளைக் கட்டுப்
படுத்தாது.

2) எனவே மார்க்சியர்களை அளக்கும் அதே
அளவுகோலால் மார்க்ஸாலஜிஸ்டுகளை
அளப்பது பொருந்தாது.

3) ஏகாதிபத்தியம் என்ற நூலை 1916ல் லெனின்
எழுதினார். 1924ல் லெனின் மறைந்தும் விட்டார்.
லெனின் காலத்தில் உலகின் தலைமை
ஏகாதிபத்தியமாக அமெரிக்கா இல்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே
அமெரிக்கா உலகின்  தலைமைக்கு வருகிறது.

4) 1944ல் உலக வங்கி தோற்றுவிக்கப் பட்டது.
1945ல் IMF உருவானது. 1995ல் WTO உருவானது.
ஆனால் லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் என்ற
நூலில் இத்தகைய அமைப்புகள் தோன்றும் என்ற
கருத்து இல்லை. இது ஒரு குறையல்ல.எல்லா
மாற்றங்களையும் முன்னரே யூகிக்க இயலாமல்
போவது இயற்கையே.

5) லெனினுக்குப் பின்னால் வந்த பொருளியல்
மேதைகள், லெனின் காலத்தில் இல்லாத,
தங்கள் காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக்
கணக்கில் கொண்டு தங்களின் கோட்பாடுகளை
உருவாக்குகிறார்கள்.

6) ஏகாதிபத்தியத்தை வரையறுப்பதில், லெனினின்
வரையறைக்கும்  சமீரின் வரையறைக்கும்
வேறுபாடுகள் இருப்பதாலேயே, சமீர் அமின்
லெனினியத்தை நிராகரிக்கிறார் என்று
முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம் ஆகும்.
இது மார்க்சியத்தை இஸ்லாம் மதமாகவும்,
லெனினை முகம்மது நபியாகவும் பார்க்கிற
ஜெய்னுலாபிதீனியம் ஆகும்.

7) மாவோவின் மூன்று உலகக் கோட்பாடு
(Three worlds theory by Mao) என்று எங்களுக்கு
எங்கள் கட்சியால் 1970களில் கற்பிக்கப்பட்ட
அக்கொள்கை ஒரு அபத்தம் என்பதை நாங்கள்
30 ஆண்டுக்கு முன்னரே உணர்ந்து கொண்டோம்.

8) எனவேதான் குழப்பத்தைத் தவிர்க்க, மூன்றாம்
உலக நாடுகள் என்று குறிப்பிடாமல்,
Periphery என்றும் Global South என்றும் ஒடுக்கப்பட்ட
நாடுகளை சமீர் அமின் குறிப்பிடுகிறார்.

9) சமீர் அமினின் "இணைப்புத் துண்டிப்பு"
(De linking) என்னும் கோட்பாடு உலகமயத்தை
எதிர்க்கும் கோட்பாடு. ஏகாதிபத்தியத்தை
எதிர்க்கும் கோட்பாடு. IMF, உலக வங்கி, WTO
ஆகிய அமைப்புகளில் இருந்து துண்டித்துக்
கொள்ள வலியுறுத்தும் கோட்பாடு.
அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலகிற்கு
எதிரான கோட்பாடு. இதை மார்க்சியர்கள்
பரிசீலிக்கலாம். லெனின் கூறாத விஷயத்தைக்
கூறுவதாலேயே, இது லெனினியம் அல்ல என்று
கருத முடியாது.

10) சமீரின் கோட்பாடுகளைப் பரிசீலிக்கலாம்
என்ற அளவுடன் எனது கட்டுரைகள்
நிறுத்திக் கொள்கின்றன. பரிசீலிப்பதில்
என்ன தவறு?

11) சமீரின் "இணைப்புத் துண்டிப்பு"
என்பது தவறான கோட்பாடு என்று கருதுவோர்
அதை நிரூபிக்கலாம்.

12) இந்திய அரசே, IMF, உலகவங்கி, WTO ஆகிய
அமைப்புகளில் இருந்து வெளியேறு என்ற
முழக்கத்தை முன்வைத்து இந்தியாவில் உள்ள
கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களைத் திரட்டி
ஏதேனும் இயக்கங்களை நடத்தி உள்ளனவா?
இல்லையே.

13) அப்படியானால் IMF, உலக வங்கி, WTO ஆகிய
அமைப்புகளின் ஆதிக்கத்தை ஏற்றுக்
கொண்டதாகத்தானே  அர்த்தம்? இந்த
அமைப்புகளில் இருந்து விலகச் சொல்லும்
சமீரின் Delinking கோட்பாடு தவறா?

14) இது கல்விப்புலம் (academic) சார்ந்த ஒரு
கட்டுரை. திமுக-அண்ணா திமுக பாணியிலான
லாவணி இக்கட்டுரைக்கு ஏற்றதல்ல.
*************************************************
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக