செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சரியான விடையும் விளக்கமும்
-----------------------------------------------------
சரியான விடை: 042.

1) குறிப்பு-4ன் படி, 7,3,8 ஆகியவை தவறான எண்கள்
அவற்றைக் கைவிடுவோம்.

2) குறிப்பு-5ன் படி, 0 மட்டுமே சரியான எண்.
ஆக ஒரு எண் கிடைத்து விட்டது.

3)குறிப்பு-1 மற்றும் குறிப்பு-2 ஆகிய இரண்டையும்
பார்த்தால், 6 என்பது தவறான எண் என்ற முடிவுக்கு
வரலாம்.

4) குறிப்பு-1ன் படி, 2 மட்டுமே சரியான எண்.

5) குறிப்பு-3ன் படி, 0,2 என்னும் இரு எண்களும்
சரியானவை.

6) குறிப்பு-5ன் படி, 0 என்பது 1ன்  ஸ்தானத்துக்கு
உரியதல்ல.

7) குறிப்பு-3ன் படி, 0 என்பது 10ன் ஸ்தானத்துக்கும்
உரியதல்ல. ஆக, குறிப்பு-3 மற்றும் குறிப்பு-5ன்
படி, 0 என்பது 100ன் ஸ்தானத்துக்கு உரியது.

8) குறிப்பு-1ன் படி, 2 என்பது 1ன் ஸ்தானத்துக்கு
உரியதாகிறது.

9) ஆக, தற்போது இரண்டு சரியான எண்களும்
அவற்றின் ஸ்தானமும் கிடைத்து .விட்டன.
மூன்றாவது எண்ணின் ஸ்தானம் கிடைத்து
விட்டது. அது 10ன் ஸ்தானம் ஆகும்.

10) மூன்றாவது எண் எது? குறிப்பு-2ஐப் பார்க்கவும்.
அதில் 1 என்ற எண் 10ன் ஸ்தானத்தில் உள்ளது.
ஆனால் WRONGLY PLACED என்ற செய்தியின்படி
4தான் WRONGLY PLACED. எனவே 4 என்பதே
நமக்குத் தேவையான எண்.

11) ஆக, 042 என்பதே சரியான விடை.
****************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக