புதன், 22 ஆகஸ்ட், 2018

நான் டிராஸ்கியவாதி இல்லை என்பதை
முதலில் கூறி கொள்கிறேன். .....!
டிராஸ்க்கிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட பிறகு
அவருக்கு பொருப்புகளில் இருந்து விடுவிப்பு கொடுத்து
ஓய்வு இல்லம் செல்ல கட்சி உத்திரவு இட்டது
டிராஸ்கி அதை மறுக்கும் போது
உங்கள் உடல் நலனை பாதுகாக்கப்பட வேண்டியது
கட்சியின் கடமை எனவே நீங்கள் ஓய்வு எடுத்து
உங்கள் உடல் நலம் காக்க கட்சி கட்டளை இடுகிறது
என்று டிராஸ்கிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
அவர் உடல் நலம் தேறி தலைநகர் வந்து
கட்சி காங்ரஸிலும் கலந்து கொண்டார்
ஸ்டாலின் மீண்டும் செயலாளர் ஆவதற்கு
முழு ஆதரவு அளித்தார்
பின்பு ஏற்பட்ட தொழிலாளர் போராட்டங்களுக்கு
டிராஸ்க்கி ஆதரவளித்தார்
பாட்டாளி வர்க்க அரசு அமைந்திருக்கும் போது
அதிலும் எதிர்புரட்சியாளர்களின் எதிர்ப்பையும்
சமாளித்து அரசை நடத்தும் வேளையில்
தொழிலார் போராட்டம் என்பது
சோசலிஸத்திற்கும்
பாட்டாளி வர்க்க அரசுக்கும் எதிரானது
இது எதிரிகளின் சூழ்ச்சி என
கட்சியின் பெரும்பான்மை முடிவானது
ஆனால் டிராஸ்க்கி
வர்க்க முரண் முடிவுக்கு வரும் வரை
தொழிலாளர்கள் தங்கள் குரலை போராட்டங்கள்
வாயிலாக தான் தெரிவிப்பார்கள்
தோழமையுடன் அவர்கள் போராட்டங்களை .
அனுக வேண்டும் என்றார்
இந்த முரண் முற்றியதும்
டிராஸ்க்கி பாட்டாளி வர்க்க அரசுக்கு எதிராக
செயல்படுவதாக கூறி
அவரை நாடு கடத்தும் தண்டனை அளித்து
நாடு கடத்தப்பட்டார்
அதன் பின்னும் டிராஸ்கிக் கும்
சோவியத் கட்சிக்கும் கடித போக்குவரத்துகள்
இருக்கவே செய்தது
ஆனால் டிராஸ்க்கியின் மறைவுக்கு பின்
அவரை பின்பற்றுபவர்கள் முதலாளியத்தை எதிர் பதை விட
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை
ஸ்டாலினிஸ்ட்டுகள் என்று
எதிர்ப்பதில் தான் அதிக கவனம் செலுத்தினர்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக