ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

கலைஞர் ஒரு இலுமினாட்டி என்னும்
மூடர்களின் விமர்சனமும்
தகுதியற்ற புகழாரங்களை கலைஞருக்குச்
சூடும் மக்கள் அதிகாரத்தின் விமர்சனமும்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
கலைஞர் மு கருணாநிதி அவர்களின் மறைவை
ஒட்டி, "மக்கள் அதிகாரம்" என்னும் அமைப்பு
வெளியிட்ட அஞ்சலிக் கட்டுரையில் உள்ள,
கலைஞரைப் பற்றிய மதிப்பீடு மார்க்சிய
லெனினியக் கண்ணோட்டத்தில் இருந்து
முற்றிலுமாக விலகி உள்ளது. துதிபாடிகளும்
ஆதாயம் கருதும் பிழைப்புவாதிகளும்
தகுதியற்ற புகழாரங்களை தங்கள்
நாயகர்களுக்குச் சூட்டுவது போல, மக்கள்
அதிகாரம் அமைப்பும் ரசிக மனநிலைக்கு
ஆட்பட்டு, பொருந்தா மகுடங்களை
கலைஞருக்குச் சூட்டி மகிழ்கிறது.

ம.அ.வின் மதிப்பீட்டுக் கட்டுரையில்,
சொல்லப்பட்ட விஷயங்களைப் போன்றே,
சொல்லாமல் விடப்பட்ட விஷயங்களும்
முக்கியத்துவம் வாய்ந்தவை.

அட்டியின்றி அனைவரும் ஒத்துக்கொள்ளும்
விஷயம் என்னவெனில், திமுக மற்றும்
கலைஞரின் இரு பெரும் எதிர்மறை அம்சங்களாக
இருப்பவை ஊழலும் வாரிசு அரசியலும் ஆகும்.
மொத்த அரசு எந்திரத்தையும்
கட்சியையும் சமூகத்தையும் உச்சந்தலையில்
இருந்து உள்ளங்கால் வரை ஊழல்மயம் ஆக்கியதில்
கலைஞருக்குப் பெரும்பங்கு உண்டு.

லல்லு பிரசாத் யாதவ் போல மிகவும் கவனக்
குறைவாகவும் எவர் நம்மை என்ன செய்து விட
முடியும் என்ற அகந்தையோடும் ஊழல்
புரியாமல், மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும்
மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கும் விதத்திலும்
ஊழல் புரிந்து, ஊழலை ஒரு கலையாக
நிகழ்த்தியவர் கலைஞர்.

வாரிசு அரசியல் என்பது எல்லா முதலாளித்துவக்
கட்சிகளிலும் இருந்த போதிலும், திமுக மட்டுமே
அதன் உச்சத்தில் நிரந்தரமாக அமர்ந்து
கொண்டுள்ளது. திமுக தலைமையின் குடும்ப
அரசியல், மொத்தக் கட்சியிலும் வாரிசு அரசியல்,
துர்கா ஸ்டாலின், சபரீசன், ராஜாத்தி அம்மாள்
ஆகியோரின் தலையீடுகள் என்று முற்றிலும்
வாரிசு அரசியலின் வார்ப்பாகவே திமுகவை
மாற்றி விட்டவர் கலைஞர்.

திமுகவின் அடையாளமாகவே ஆகிப்போன
ஊழலும் வாரிசு அரசியலும் மக்களிடம்
திமுகவின் செல்வாக்கு இழப்பு மற்றும்
தேர்தல் தோல்வியின் காரணிகள் ஆயின.
அறிஞர் அண்ணா காலத்தில் இல்லாத அல்லது
அடக்கி வைக்கப்பட்டிருந்த இவ்விரு தீமைகளையும்
உருவாக்கி வளர்த்தவர் கலைஞர். கலைஞரின்
ஆளுமை, பங்களிப்பு, அரசியல் ஆகிய
அனைத்திலும் ஊழல், வாரிசு அரசியல் என்னும்
இரண்டுக்கும் பிரதான இடம் உண்டு. இந்தப்
பிரக்ஞை இல்லாமல் கலைஞரை மதிப்பிடுவது
அறிவியலற்றது; மார்க்சியமற்றது.

இன்னொரு புறத்தில் இருந்து தீமையே உருவானவர்
கலைஞர் என்னும் குரல் எழுகிறது. ஆர் எஸ் எஸ்
ஆசாமிகள், பார்ப்பன சாதி வெறியர்கள்,
சீமானின் மூட ரசிகர்கள் மற்றும் சில மார்க்சிய
முட்டாள்களின் தொண்டையில் இருந்து கிளம்பும்
குரைப்புச் சத்தம்தான் அது. காழ்ப்புணர்வு, திரண்ட
பிற்போக்கு, சாதி ஆதிக்க மனநிலை, அறிவியல்
உளப்பாங்கின்மை ஆகியவையே கலைஞரை
நூறு சதம் தீமையே உருவானவர் என்ற எதிர்மறை
மதிப்பீட்டைப் பிறப்பிக்கின்றன.

புரூனோ பவார்

கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய விளக்கத்தில் 
ஏங்கல்ஸ் சொல்லுவார்: "தொடக்க கால 
முதலாளித்துவம் ஆற்றிய முற்போக்கான 
பாத்திரத்துக்கு கம்யூனிஸ்ட் அறிக்கையானது 
முழுமையான நியாயத்தை (full justice) வழங்கி 
விடுகிறது" என்று.

மேலும் ஆரம்பகால கிறிஸ்துவத்தின் 
முற்போக்கான பாத்திரத்தைப் பற்றியும் 
எங்கல்ஸ் கட்டுரை எழுதி உள்ளார்.

"Give the devil its due"என்று ஒரு ஆங்கிலப் பழமொழி 
உண்டு. பிசாசுக்கும் கூட அதற்கு உரிய 
பங்கைக் கொடுத்து விடு என்று இதற்குப் பொருள்.

எங்கல்சின் வழியைப் பின்பற்றி, கலைஞரின் 
தொடக்க கால அரசியலின் முற்போக்கான 
பாத்திரத்தை எமது கட்டுரை மறுக்கவில்லை.
நெருக்கடி நிலையை எதிர்த்து கலைஞர் 
உறுதியுடன் நின்றதை எமது கட்டுரை 
அங்கீகரிக்கிறது. 
நூறு சதம் தீமையே உருவான எவர் ஒருவரும்
மக்களின் தலைவராக முடியாது. மக்களின்
செயலூக்கமான பங்கும் ஆதரவும் இல்லாத எவர் ஒருவரும்
அவர் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும்
தலைவராக முடியாது. ஒரு தலைவரின் உருவாக்கத்தில்
மக்களின் பங்குக்கே பிரதானம். இதுவே மார்க்சியம்.
ஆனால் மார்க்சியம்  கலைஞரை தீயசக்தி என்னால்

கலைஞர் திராவிட இந்துத்துவம்






 

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக