கலைஞர் தேசிய முதலாளி வர்க்கத்தின்
பிரதிநிதியா?
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி ராஜாஜியுடன் கூட்டு!
கலைஞர் பற்றிய மதிப்பீடு: பகுதி-2
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
தேசிய முதலாளி வர்க்கத்துக்கு திட்டவட்டமான
பொருளாதார நலன்கள் (economic interests) உண்டு.
அந்த நலன்களைப் பேணுவதில் தேசிய முதலாளி
வர்க்கம் உறுதியுடன் இருக்கும்.
எனவே தேசிய முதலாளி வர்க்கத்துக்கு
திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகள்
(economic policies) உண்டு. அது மட்டுமல்ல, தங்களின்
வர்க்க நலன்களுக்கு எதிராக அரசின்
கொள்கையோ திட்டமோ இருக்குமானால்,
அதை எதிர்ப்பதிலும் தேசிய முதலாளித்துவம்
உறுதியுடன் இருக்கும்.
திமுக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின்
கட்சி அல்ல. கலைஞரும் தேசிய முதலாளிகளின்
பிரதிநிதியும் அல்ல.1949ல் திமுகவைத்
தொடங்கும்போது, அதன் வர்க்க அடித்தளம்
குட்டி முதலாளித்துவ வர்க்கமும் உதிரிப்
பாட்டாளி வர்க்கமும் ஆகும். இன்றைய
திமுகவின் வர்க்க அடித்தளம் பெரிதும்
மாறியிருக்கிறது.
திமுகவுக்கு திட்டவட்டமான பொருளாதாரக்
கொள்கைகள் எதுவும் இல்லை. திமுக
பண்பாட்டுத் தளத்திற்கே அழுத்தம் தந்து
செயல்படும் அரசியல் கட்சி. அது ஒரு அடையாள
அரசியல் கட்சி.
திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகள்
திமுகவுக்கு இல்லை என்பது எதை
உணர்த்துகிறது? அது தேசிய முதலாளிகளின்
கட்சி அல்ல என்பதை உணர்த்துகிறது.
திமுக தேசிய முதலாளிகளின் கட்சி
என்றால், அது பண்பாட்டுத் தளத்தை விட,
பொருளியல் தளத்தில்தான் செயல்பட்டு
இருக்க வேண்டும். ஆனால் அப்படிச்
செயல்படவில்லை.
இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக்
கொள்கை என்னவோ, அதே கொள்கையைத்
தான் திமுகவும் கடைப்பிடிக்கிறது. மத்திய
அரசில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக
இருந்தாலும் சரி, மத்திய அரசின்
பொருளாதாரக் கொள்கையை அப்படியே
ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான்
திமுகவின் வரலாறு.
இந்திய அமெரிக்க அணுசக்தி 123 ஒப்பந்தம்,
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு,
சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட
மத்திய அரசின் கொள்கைகளில் அரசுடன்
திமுக எதில் முரண்பட்டது? எதிலும் இல்லை.
90களில் நரசிம்மராவ் அரசு உலகமயத்தைக்
கொணர்ந்தது. உலகமயம் என்பது தேசிய
முதலாளிகளுக்கு முற்றிலும் எதிரானது.
உலகமயத்தையோ LPG கொள்கைகளையோ
திமுக எதிர்த்துப் போராடியதா? இல்லை.
மாறாக ஆதரித்தது. ஆக, திமுக எப்படி
தேசிய முதலாளிகளின் கட்சியாக இருக்க
முடியும்? தேசிய முதலாளிகளின் கட்சி
என்றால், உலகமயத்தை எதிர்த்துப்
போராடியிருக்க வேண்டும் அல்லவா?
மாறன் குடும்பம் என்பது ஆசிய அளவில்
மிகப்பெரிய பெருமுதலாளித்துவக் குழுமம்.
பெருமுதலாளித்துவ இந்து பத்திரிகைக்
குழுமம் கலைஞர்-மாறன் குடும்பத்துடன்
நெருங்கிய உறவு கொண்டது. ஆக, கலைஞர்
இந்தியப் பெருமுதலாளித்துவ
தொழிற்குழுமங்களுடன் உறவு கொண்டவர்.
அக்குழுமங்களின் நலன் பேணுபவர். அவர்
எப்படி தேசிய முதலாளிய வர்க்கத்தின்
பிரதிநிதியாக இருக்க முடியும்?
ஆக, தேசிய முதலாளி வர்க்கத்துக்கும்,
கலைஞர் மற்றும் திமுகவுக்கும் ஸ்நானப்
பிராப்தி இல்லை என்பதை இக்கட்டுரையில்
நிரூபித்துள்ளேன்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழரும், என்ஜிஓ
எடுபிடியும் மார்க்சியப் போலி வேடதாரியுமான
ஒருவர், கலைஞர் தேசிய முதலாளி வர்க்கத்தின்
பிரதிநிதி என்று கூறியிருப்பது சரியா என்று
சில வாசகர்கள் கேட்டனர். அதற்கு விடையாகவே
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
அப்படியானால், தேசிய முதலாளி வர்க்கத்தின்
அரசியல் கட்சி எது என்ற கேள்வி எழுகிறது.
அப்படி ஒரு கட்சி இருந்தது. 1960களில் அப்படி
ஒரு கட்சி இந்தியாவில் செல்வாக்கோடு இருந்தது.
அக்கட்சிதான் சுதந்திராக் கட்சி. அதை
நிறுவியவர் ராஜாஜி. ஸ்வராஜ்யா என்ற
ஆங்கில ஏடு அக்கட்சியின் ஏடாகும்.
ராஜாஜியின் மரணத்துடன் அக்கட்சியும்
முக்தி அடைந்தது. நிற்க. இன்று
தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ
தேசிய முதலாளிகள் இருக்கிறார்களா?
பிறிதொரு கட்டுரையில் விடை காண்போம்.
*****************************************************
இந்தியாவில் தேசிய முதலாளிகளே இல்லை.
அதாவது இப்போதும் இல்லை; இதற்கு முன்பும்
இல்லை என்று கூற வருகிறீர்களா? அருள்கூர்ந்து
விளக்கமாகக் கூறவும்.
ஆக, இந்தியாவில் தேசிய முதலாளிகளே
கிடையாது என்பதுதான் தங்களின் கருத்தாக
இருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன்.
இக்கருத்துடன் முரண்படுகிறேன் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜாஜியின் சுதந்திராக் கட்சி இருந்தது
என்று குறிப்பிட்டு இருக்கிறேனே.
ஐரோப்பாவில் இருந்தது போல ஒரு சுதந்திர
பூர்ஷ்வா வர்க்கத்தை இங்கு கற்பனை செய்ய
இயலாது. ஏகாதிபத்தியச் சார்பு காங்கிரசை
எதிர்த்து ராஜாஜி காங்கிரசை விட்டு விலகினார்.
தனிக்கட்சி கண்டார். அவரின் கட்சியில்
திரண்டவர்கள் இந்தியாவின் முதலாளிகள் அல்ல.
இதையெல்லாம் எப்படி விளக்குவீர்கள்?
பிரதிநிதியா?
மார்க்சிஸ்ட் ராமமூர்த்தி ராஜாஜியுடன் கூட்டு!
கலைஞர் பற்றிய மதிப்பீடு: பகுதி-2
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
தேசிய முதலாளி வர்க்கத்துக்கு திட்டவட்டமான
பொருளாதார நலன்கள் (economic interests) உண்டு.
அந்த நலன்களைப் பேணுவதில் தேசிய முதலாளி
வர்க்கம் உறுதியுடன் இருக்கும்.
எனவே தேசிய முதலாளி வர்க்கத்துக்கு
திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகள்
(economic policies) உண்டு. அது மட்டுமல்ல, தங்களின்
வர்க்க நலன்களுக்கு எதிராக அரசின்
கொள்கையோ திட்டமோ இருக்குமானால்,
அதை எதிர்ப்பதிலும் தேசிய முதலாளித்துவம்
உறுதியுடன் இருக்கும்.
திமுக தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின்
கட்சி அல்ல. கலைஞரும் தேசிய முதலாளிகளின்
பிரதிநிதியும் அல்ல.1949ல் திமுகவைத்
தொடங்கும்போது, அதன் வர்க்க அடித்தளம்
குட்டி முதலாளித்துவ வர்க்கமும் உதிரிப்
பாட்டாளி வர்க்கமும் ஆகும். இன்றைய
திமுகவின் வர்க்க அடித்தளம் பெரிதும்
மாறியிருக்கிறது.
திமுகவுக்கு திட்டவட்டமான பொருளாதாரக்
கொள்கைகள் எதுவும் இல்லை. திமுக
பண்பாட்டுத் தளத்திற்கே அழுத்தம் தந்து
செயல்படும் அரசியல் கட்சி. அது ஒரு அடையாள
அரசியல் கட்சி.
திட்டவட்டமான பொருளாதாரக் கொள்கைகள்
திமுகவுக்கு இல்லை என்பது எதை
உணர்த்துகிறது? அது தேசிய முதலாளிகளின்
கட்சி அல்ல என்பதை உணர்த்துகிறது.
திமுக தேசிய முதலாளிகளின் கட்சி
என்றால், அது பண்பாட்டுத் தளத்தை விட,
பொருளியல் தளத்தில்தான் செயல்பட்டு
இருக்க வேண்டும். ஆனால் அப்படிச்
செயல்படவில்லை.
இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாரக்
கொள்கை என்னவோ, அதே கொள்கையைத்
தான் திமுகவும் கடைப்பிடிக்கிறது. மத்திய
அரசில் காங்கிரஸ் இருந்தாலும் சரி, பாஜக
இருந்தாலும் சரி, மத்திய அரசின்
பொருளாதாரக் கொள்கையை அப்படியே
ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதுதான்
திமுகவின் வரலாறு.
இந்திய அமெரிக்க அணுசக்தி 123 ஒப்பந்தம்,
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு,
சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட
மத்திய அரசின் கொள்கைகளில் அரசுடன்
திமுக எதில் முரண்பட்டது? எதிலும் இல்லை.
90களில் நரசிம்மராவ் அரசு உலகமயத்தைக்
கொணர்ந்தது. உலகமயம் என்பது தேசிய
முதலாளிகளுக்கு முற்றிலும் எதிரானது.
உலகமயத்தையோ LPG கொள்கைகளையோ
திமுக எதிர்த்துப் போராடியதா? இல்லை.
மாறாக ஆதரித்தது. ஆக, திமுக எப்படி
தேசிய முதலாளிகளின் கட்சியாக இருக்க
முடியும்? தேசிய முதலாளிகளின் கட்சி
என்றால், உலகமயத்தை எதிர்த்துப்
போராடியிருக்க வேண்டும் அல்லவா?
மாறன் குடும்பம் என்பது ஆசிய அளவில்
மிகப்பெரிய பெருமுதலாளித்துவக் குழுமம்.
பெருமுதலாளித்துவ இந்து பத்திரிகைக்
குழுமம் கலைஞர்-மாறன் குடும்பத்துடன்
நெருங்கிய உறவு கொண்டது. ஆக, கலைஞர்
இந்தியப் பெருமுதலாளித்துவ
தொழிற்குழுமங்களுடன் உறவு கொண்டவர்.
அக்குழுமங்களின் நலன் பேணுபவர். அவர்
எப்படி தேசிய முதலாளிய வர்க்கத்தின்
பிரதிநிதியாக இருக்க முடியும்?
ஆக, தேசிய முதலாளி வர்க்கத்துக்கும்,
கலைஞர் மற்றும் திமுகவுக்கும் ஸ்நானப்
பிராப்தி இல்லை என்பதை இக்கட்டுரையில்
நிரூபித்துள்ளேன்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழரும், என்ஜிஓ
எடுபிடியும் மார்க்சியப் போலி வேடதாரியுமான
ஒருவர், கலைஞர் தேசிய முதலாளி வர்க்கத்தின்
பிரதிநிதி என்று கூறியிருப்பது சரியா என்று
சில வாசகர்கள் கேட்டனர். அதற்கு விடையாகவே
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
அப்படியானால், தேசிய முதலாளி வர்க்கத்தின்
அரசியல் கட்சி எது என்ற கேள்வி எழுகிறது.
அப்படி ஒரு கட்சி இருந்தது. 1960களில் அப்படி
ஒரு கட்சி இந்தியாவில் செல்வாக்கோடு இருந்தது.
அக்கட்சிதான் சுதந்திராக் கட்சி. அதை
நிறுவியவர் ராஜாஜி. ஸ்வராஜ்யா என்ற
ஆங்கில ஏடு அக்கட்சியின் ஏடாகும்.
ராஜாஜியின் மரணத்துடன் அக்கட்சியும்
முக்தி அடைந்தது. நிற்க. இன்று
தமிழ்நாட்டிலோ, பிற மாநிலங்களிலோ
தேசிய முதலாளிகள் இருக்கிறார்களா?
பிறிதொரு கட்டுரையில் விடை காண்போம்.
*****************************************************
இந்தியாவில் தேசிய முதலாளிகளே இல்லை.
அதாவது இப்போதும் இல்லை; இதற்கு முன்பும்
இல்லை என்று கூற வருகிறீர்களா? அருள்கூர்ந்து
விளக்கமாகக் கூறவும்.
ஆக, இந்தியாவில் தேசிய முதலாளிகளே
கிடையாது என்பதுதான் தங்களின் கருத்தாக
இருக்கிறது என்று புரிந்து கொள்கிறேன்.
இக்கருத்துடன் முரண்படுகிறேன் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜாஜியின் சுதந்திராக் கட்சி இருந்தது
என்று குறிப்பிட்டு இருக்கிறேனே.
ஐரோப்பாவில் இருந்தது போல ஒரு சுதந்திர
பூர்ஷ்வா வர்க்கத்தை இங்கு கற்பனை செய்ய
இயலாது. ஏகாதிபத்தியச் சார்பு காங்கிரசை
எதிர்த்து ராஜாஜி காங்கிரசை விட்டு விலகினார்.
தனிக்கட்சி கண்டார். அவரின் கட்சியில்
திரண்டவர்கள் இந்தியாவின் முதலாளிகள் அல்ல.
இதையெல்லாம் எப்படி விளக்குவீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக