வியாழன், 2 ஆகஸ்ட், 2018

கற்றுக் கொள்வதற்கும் அறிவைப் பெறுவதற்கும்
எந்தவொரு மனிதருக்கும் ஓர் எல்லை உண்டு.
இதனை தமிழ் இலக்கியப்பாடல் ஒன்று அழகாக
விளக்குகிறது.

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கின் பிணி பல........

மார்க்சியத்தின் எளிய அடிப்படையைக் கூடக்
கற்றுக் கொள்ளாத சிலர் தங்களின் அறியாமையைப் போக்கிக்கொள்ளும் உணர்வே இல்லாமல்,
நாம் முன்வைக்கும் உண்மையைத் திரிக்க
நினைக்கும் முயற்சிகளைக் கண்டிக்க
வேண்டிய தேவை எழுகிறது.

இது சுயவிருப்பத்துடன் கற்க விரும்புகிற பல
வாசகர்களின் ஆர்வத்தைச் சிதைக்க முயல்வதை
அனுமதிக்க இயலவில்லை. அதனால்தான்
இத்தகைய கட்டுரைகளை எழுத நேர்கிறது.

மென்ஷ்விக்குகள் பிரிவதற்கு முன்பு எல்லோரும்
ஒரே கட்சியில் இருந்தபோதும் சரி, பிரிந்த
பிறகு போல்ஷ்விக் கட்சி உருவான பிறகும் சரி,
லெனின் காலத்தில் சர்வ சுதந்திரத்துடன் கட்சி
விவாதங்கள் நடந்தன. கட்சிக்கு வெளியிலும்
லெனின் நிறையவே கருத்துப்போர் (polemics)
நடத்தினார். லெனின் மிகப்பெரிய இயற்பியல்
விஞ்ஞானி எர்னஸ்ட் மாஹ் (Ernesr Mach)
என்பவருடன் நடத்திய கருத்துப்போர்
குறிப்பிடத் தக்கது. லெனின் நிகழ்த்திய
கருத்துப்போர் முழுவதும் ஆவணப் படுத்தப்
பட்டுள்ளது. ஆயிரமாயிரம் பக்கங்கள்
ரஷ்ய, ஆங்கில மொழிகளில் உள்ளன.
படிப்பதற்கு ஆயுள் போதாது. ஆக லெனின்
ஜனநாயக மத்தியத்துவம் என்பதை
letter and spirit செயல்படுத்தினார் என்பது வரலாறு.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக