புதன், 8 ஆகஸ்ட், 2018

பெரியார் அண்ணா ஆகியோரின் எழுத்துக்களைப்
படித்திருந்தால், அவை எவ்வளவு வடசொற்களைக்
கொண்டவை என்று புரிந்து கொள்ளலாம். பெரியார்
அண்ணா காலத்திய கம்யூனிச இதழ்களை
பெரியார் அண்ணா நடத்திய திராவிட
இதழ்களுடன் ஒப்பிட்டால், எவற்றில் வடமொழிப்
பயன்பாடு அதிகம் என்பதை உணரலாம்.

மார்க்சியம் வலியுறுத்தும் மொழிநடை என்பது
தொடர்புறுத்தவல்ல (communicative) நடை ஆகும்.
செயற்கையான, மக்களின் பயன்பாட்டில் இல்லாத
வலிந்து புகுத்தப்பட்ட சொற்களால் ஆன
தமிழ் நடையை மார்க்சியம் ஏற்பதில்லை.
வடமொழி மோகம் மார்க்சியத்தின் இல்லை.

மார்க்சியர்கள் தவிர பிற குட்டி முதலாளித்துவர்கள்
அனைவருக்கும் மொழி குறித்த ஒரு அறிவியல்
புரிதல் கிடையாது. எனவே மொழி குறித்த
குட்டி முதலாளித்துவக் கருத்துக்களை ஏற்க
இயலாது.

ஹீப்ரு மொழியை மீட்டுருவாக்கம் செய்ய  முடிந்தது
எதனால்? யூதர்களிடம் அறிவியல் கண்ணோட்டம்
இருந்தமையால்.  தமிழர்களிடம் அதை
எதிர்பார்க்க முடியாது. இங்கு குட்டி முதலாளித்துவம்
கோலோச்சுகிறது. அறிவியல் பார்வையற்ற
பிற்போக்கான தமிழ்ப்பற்றை வைத்துக்கொண்டு
ஒரு புதிய சொல்லைக்கூட இங்கு உருவாக்க இயலாது.


சூரியன் என்பது தமிழ்ச்சொல் என்றால், சூரிய
நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப் பெயரை
பரிதிமாற் கலைஞர் என்று  அவர் ஏன் மாற்றினார்?
ஒரு சொல் வடசொல் என்று அறியப்பட்டும்
ஏற்கப்பட்டும் இருக்கும்போது, "இல்லை, அது
வடசொல் அல்ல, தமிழ்ச்சொல்லே" என்று
ஒரு கூட்டம் கிளம்பும். இது காலங்காலமாக
நடந்து வரும் குட்டி முதலாளித்துவச்
செயல்பாடுகள். ஒரு கருத்தில் ஒன்றி நிற்க
வழியில்லாதபோது, எக்கருத்திலும் ஊன்றி
நிற்க இயலாது.
   

ஆய்வுகள் என்ற பெயரிலான குட்டி முதலாளித்துவ
அபத்தங்களை மார்க்சியம் ஏற்பதில்லை. மொழி

மொழி எவ்வாறு இயங்குகிறது என்ற புரிதலே
இல்லாமல், சொற்களைத் தரப்படுத்தி
ஏற்புடைமையை உருவாக்காமல், சொல்வங்கியை
உருவாக்காமல், சொந்த விருப்பங்கள் சார்ந்து
மேற்கொள்ளும் முடிவுகளை மார்க்சியம்
ஏற்பதில்லை. ஒவ்வொரு அடி முன்னெடுத்து
வைக்கும்போதும், தமிழின் வளர்ச்சியை
ஏதோ ஒரு விதத்தில் தடுப்பதே குட்டி
முதலாளித்துவத்தின்செயல்பாடாக  இன்றுவரை
இருந்து வருகிறது.

ஒரு சொல் தமிழ்ச்சொல் என்று சிலரும்
இல்லையில்லை அது வடசொல் என்று சிலரும்
முரண்படுகையில், இச்சிக்கலுக்குத் தீர்வு
காணும் ஓர் அமைப்பு (மெக்கானிசம்)
அனைவரும் ஏற்கும் ஓர் அமைப்பு, அனைவரையும்
கட்டுப்படுத்தும் ஓர் அமைப்பு வேண்டுமல்லவா?
அப்படி ஓர் அமைப்பு இல்லாதபோது, ஒருமித்த
கருத்து  எங்ஙனம் உருவாகும் ? நிற்க.
   
சமூகத்தின் பொருளுற்பத்தியில் தமிழ் இல்லை
என்ற உணர்வே இல்லாதபோது, தமிழை
எவ்வாறு உற்பத்தியில் இடம்பெறச் செய்ய இயலும்?

திராவிட இயக்கப் பெருந்தலைவர் 
திமுக தலைவர் மறைந்த கலைஞர் அவர்களுக்கு 
நியூட்டன் அறிவியல் மன்றம்
அஞ்சலி செலுத்துகிறது!

இதில் என்ன வர்க்கப்பார்வை பழுதுபட்டு விட்டது?
இது கலைஞரைப் பற்றிய மதிப்பீட்டை
வெளிப்படுத்தும் பதிவா?  

ஒன்றிரண்டு மேற்கோள்களைப் பாராயணம்
செய்து வைத்துக் கொண்டும்  அதுதான் இறப்பு
பற்றிய அணுகுமுறை என்று கருதும் போக்கை
நான் அறிவேன். மார்க்சியத்தை letter and spirit
புரிந்து கொள்ளாத பாராயண வாதம் இது.

ஒரு ஆளும் வர்க்கத் தலைவர், மாபெரும்
ஆளுமையாக அரசியலிலும் சமூகத்திலும்
செல்வாக்குச் செலுத்தியவரை எப்படி
மதிப்பிடுவது என்று தெளிவான அறிவியல்
விளக்கம் இருக்கிறது. மார்க்சிய
முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
அது பற்றி இப்போது எழுத இயலாது.
பின்னர் ஒரு விளக்கக் கட்டுரை எழுத
இருக்கிறேன்.

புரூனோ பவ்வர் என்று ஜெர்மானியப்
பேராசிரியர் இருந்தார். மார்க்சின் பெர்லின்
பல்கலைப் பேராசிரியர். அவரை வன்மையாகக்
கண்டித்து மார்க்ஸ் புனிதக் குடும்பம் என்ற
நூலை எழுதி உள்ளார். மார்க்ஸ் இறந்த பின்னர்
சில ஆண்டு கழித்து புரூனோ பவ்வர்
இறந்து போனார். அவருக்கான அஞ்சலி
நிகழ்ச்சியில் எங்கல்ஸ் பங்கேற்றுப்
பேசுகிறார். புரூனோ பவ்வரின் சாதனைகளைக்
குறிப்பிட்டுப் பேசி அவருக்கு புகழஞ்சலி
செலுத்துகிறார். இதைப் படிக்க வேண்டும்.

எல்லா விஷயத்தையும் தட்டையாக, ஒற்றைப்
படையாகப் பார்ப்பது மார்க்சியம் அல்ல.
அருள்கூர்ந்து என்னுடைய கட்டுரை
வெளிவந்ததும் படியுங்கள். சொற்காமுகம்,
பாராயனவாதம்,  வறட்டுப் பார்வை
ஆகிய எல்லாவற்றுக்கும் அக்கட்டுரை
தக்க பதில் அளிக்கும்.
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக