புதன், 15 ஆகஸ்ட், 2018

மார்க்சிய மொழிக்கொள்கை பற்றி ஒரு வெண்பா!
லெனினே மீண்டு வா!
------------------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்ச்சென்னி
------------------------------------------------------
எம்மொழியும் கற்கலாம் பல்கலைப் பாடத்தை
எம்மொழி மூலமும் கற்றுத் தெளியலாம்
எம்மொழியும்  ஒன்றென்ற வேந்தே உயர்லெனினே
எம்மொழி வாழமீண்டு வா.

லெனின் மீண்டும் பிறந்து வந்து
தமிழகத்தை ஆண்டால் மட்டுமே
தமிழ் மீண்டெழும் என்ற கருத்தமைந்த
வெண்பா இது.

வாசகர்களுக்கு இரு கேள்விகள்:
1) இப்பாடலில் பயிலும் அணி யாது?

2) இப்பாடலை அலகிட்டு வாய்பாடு கூறி
சீர் தளை எடுத்து எழுதுக.

வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.

உதவிக்குறிப்பு:
வெண்பாவின் முதலடியைக் கருதுக.

எம்மொழியும் கற்கலாம் பல்கலைப் பாடத்தை

எம்மொழியும்-- எம்+மொழி+யும் 
நேர் நிரை நேர் = கூவிளங்காய்.

கற்கலாம்-- கற்+கலாம் நேர் நிரை கூவிளம் 

பல்கலைப்-- பல்+கலைப்  நேர் நிரை கூவிளம் 

பாடத்தை--பா+டத்+தை நேர் நேர் நேர் தேமாங்காய்.

எம்மொழியும் கற்கலாம்... காய் முன் நேர் 
வெண்சீர் வெண்டளை.

கற்கலாம் பல்கலைப்... விளம் முன் நேர் 
இயற்சீர் வெண்டளை.

பல்கலைப் பாடத்தை... விளம் முன் நேர் 
இயற்சீர் வெண்டளை

குறிப்பு: தமிழார்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் 
தமிழ்ப் புலவர்கள் ஆகியோரிடம் இருந்து 
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
--------------------------------------------------------------------
இதுதான் வெண்பா!
----------------------------------
அவனியி லேஇவர் அஞ்சாநெஞ் சர்காண் 
புவன மதுரை புகழும் அரசர்
கவளம் பலருக்கும் வீசும் கருணன்
அவலமே பகைவர்க்கீ வார். 

இது தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான
ஒரு தலைவரைப் பற்றிய வெண்பா.
இந்த வெண்பா யாரைக் குறிக்கிறது?
வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக