சனி, 4 ஆகஸ்ட், 2018

ஹீலர் பாஸ்கரும் போலி இடதுசாரிகளும்!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
இந்தியா அறிவியல் சார்ந்து ஒரு தற்குறி தேசமாகும்
(India is a scientifically illiterate country). ஒவ்வொரு இந்தியக்
குடிமகனும் அறிவியல் உளப்பாங்கை (scientific temper)
வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் வரையறுக்கிறது (பார்க்க: ஷரத்து 51A (h).
இது இந்தியக் குடிமக்களின் அடிப்படைக்
கடமை என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

தமிழ்ச் சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை
வளர்ப்பதில் கடந்த 18 ஆண்டுகளாக நியூட்டன்
அறிவியல் மன்றம் பல்வேறு  எதிர்ப்புகளுக்கு நடுவிலும் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது.

கணிதமேதை ராமானுஜன் பெயரிலோ, நோபல்
பரிசு பெற்ற சி வி ராமன் பெயரிலோ தமிழ்நாட்டில்
ஒரு பல்கலைக் கழகமோ கல்லூரியோ கிடையாது.
படிக்காத முட்டாள்களின் பெயரிலான பல்கலைக்
கழகங்களுக்குத் தமிழ்நாட்டில் குறைவில்லை.
உதாரணம்: டாக்டர் எம்ஜியார் மருத்துவப்
பல்கலைக் கழகம். இது குறித்து தமிழ்ச் சமூகம்
நாணுவதும் இல்லை. ஏனெனில் இங்கு அறிவியல்
உளப்பாங்கு இல்லை.

எனவே தமிழர்கள் நடுவில் ஹீலர் பாஸ்கர் போன்ற
மோசடிப் பேர்வழிகள் பெரும் மருத்துவ நிபுணராக
உலா வர முடியும். மருத்துவரே அல்லாத ஹீலர்
பாஸ்கர் எப்படி மருத்துவம் பார்க்க இயலும்
என்று தமிழ்ச் சமூகம் கேள்வி எழுப்பாது. ஏனெனில்
இது அறிவியல் தற்குறி தேசம்.

மருத்துவம் படிக்கவில்லை; உயிரியல், வேதியியல்,
மருந்தியல் என்று இப்படி எதையுமே படித்திராத
ஹீலர் பாஸ்கர் இதயத்தில் உள்ள அடைப்புகளை
நீக்குகிறார் என்று நம்பும் தமிழ்ச் சமூகம்
மூடச் சமூகம் அல்லாமல் வேறென்ன?

ஹீலர் பாஸ்கருக்கான ஆதரவு எங்கிருந்து
வருகிறது என்று பார்ப்பது மிகவும் .முக்கியம்.
போலியான தமிழ் தேசிய இனஉணர்வாளர்கள்,
போலி இடதுசாரிகள்,போலி மார்க்சிஸ்டுகள், போலி மாவோயிஸ்டுகள், போலிப்
பகுத்தறிவாளர்கள், போலி முற்போக்குகள்
என்று சகல விதமான போலிகளின் நடுவில்
இருந்தே போலி டாகடர் ஹீலர் பாஸ்கருக்கான
ஆதரவுத் தளம் உருவாகி உள்ளது.

ஹீலர் பாஸ்கரை ஆதரிப்பதில் இந்தப் போலிகள்
மிகவும் பற்றுடனும் உறுதியுடனும் இருக்கின்றனர்.
Every fool is fully convinced என்ற பழமொழி இவர்களுக்கு
கச்சிதமாகப் பொருந்துகிறது. இதில் வியப்பதற்கு
ஒன்றுமில்லை. அறிவியலும் மார்க்சியமும்
செல்வாக்குப் பெறாத இடங்களில் இப்படி
நிகழுவதே இயல்பு.

அதே நேரத்தில் ஹீலர் பாஸ்கருக்கு எதிர்ப்பு
எங்கே அதிகமாக இருக்கிறது என்று பார்த்தால்,
வலதுசாரி முகாமில்தான்  இருக்கிறது. இது
மறுக்க முடியாத உண்மை. இது எதைக்
காட்டுகிறது? இந்துத்துவ, ஆர் எஸ் எஸ் மற்றும்
சங்கப் பரிவாரங்கள் கடந்த 50, 60 ஆண்டு கால
அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்திக்
கொண்டு தங்களின் பிற்போக்கு மனநிலையில்
இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்பதையே
இது காட்டுகிறது.

போலிகளை எதிர்த்த போராட்டத்திலேயே
மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகளுக்கு நாக்கு
நுரை தள்ளி விடுகிறது. பிறகு எங்கிருந்து
மார்க்சியத்தைப் பரப்புவது?

The LEFT lags behind but the RIGHT marches ahead!
This is a sordid tale! 
****************************************************
வாகனப்புகை, சாயப்பட்டறைக் கழிவுகள்,
ஆலைகள், அனல் மின்நிலையங்கள்
ஏற்படுத்தும் மாசு, ரசாயன அலைகளின் மாசு
என்று குடிக்கும் நீரும் சுவாசிக்கும் காற்றும்
மாசு பட்டுக் கிடக்கிற ஒரு காலக்கட்டத்தில்
வீட்டிலேயே பிரசவம் என்பது சரியா?
கிருமித் தொற்றில் இருந்து தாய் சேயைப்
பாதுகாக்க முடியுமா?  

ஒண்டுக் குடித்தனங்கள், 300 சதுர அடி, 400 சதுர
அடியிலான சிறிய வீடுகள்.... இங்கெல்லாம் வீட்டில்
வைத்துப் பிரசவம் பார்க்க முடியுமா? அப்படியானால்
ஹீலர் பாஸ்கர் யாரைக் குறி வைக்கிறார்?
வசதியான பெரிய வீடுகள், டபிள் பெட்ரூம் மற்றும்
3 பெட்ரூம் கொண்ட பெரிய வீடுகள் ...இப்படி
வசதி படைத்த சமூகப் பிரிவினரைக் குறிவைக்கிறார்.
அவர்கள்தானே இவர் கேட்கும் கட்டணத்தைத்
தர முடியும்! எனவே இவர் வசதி படைத்த நடுத்தர
வர்க்கத்தை, பணக்காரர்களை ஏமாற்றிக்
காசு பறிக்கும் மோசடிப் பேர்வழி!
 

ஹீலர் பாஸ்கரைப் போல்
எத்தனை பேர் இந்த நாட்டில்!
பல் தேய்க்காமல் இருப்பதுதான்
இயற்கை மருத்துவமா?

தமிழ் தேசியம் என்ற முகநூல் முகவரியில்
இருந்து எடுக்கப்பட்ட படம் இது.
இதை ஆதரித்து லைக் செய்தவர்கள்= 5.5k -5500.
இதை ஷேர் செய்தவர்கள் = 11k = 11,000.
மூட நம்பிக்கை எவ்வளவு வேர் விட்டு இருக்கிறது!
எவ்வளவு புரையோடிப்போய் இருக்கிறது!

ஹீலர் பாஸ்கரின் முதல் தகுதியாகக்
கூறப்படுவது என்ன? அவர்தான் தமிழ்நாட்டில்
முதன் முதலாக இலுமினாட்டி பற்றிப்
பேசியவராம்! இல்லாத இலுமினாட்டி பற்றிப்
பேசியது முதல் தகுதியா?


புழுவினும் இழிந்த போலி முற்போக்கு
கார்ட்டூனிஸ்ட் பாலா மோசடிப் பேர்வழி
ஹீலர் பாஸ்கரை ஆதரிக்கிறான்.




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக