ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

எந்த முரண்பாடும் இல்லை. வில்லியம் ஜோன்ஸ் மொழிக்குடும்பத்தை மரபினமாகப் பார்த்தார்.
இது அறியாமையே. வில்லியம் ஜோன்சின் காலம்
1746-1794. அவர்  கொள்கையை வெளியிட்டபோது
இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஸ்தாபிக்கப்
படவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனி நாட்டின்
சில பகுதிகளை வைத்திருந்தது. அவ்வளவே.
எனவே அவருக்கு உள்நோக்கம் இல்லை.

கால்டுவெல் பாதிரியார் காலத்தால் பிற் பட்டவர்;
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
கால்டுவெல் காலனி ஆட்சிக்கு
இசைவாக திராவிட ஒப்பிலக்கணம் வெளியிட்டார்.
கால்டுவெல்லுக்கு உள்நோக்கம் இருந்தது.

எனவே கட்டுரைகளில் எந்த முரண்பாடும் இல்லை.
எமது கட்டுரைகள்  வாசகத் தன்மையில் முதிர்ச்சி
உள்ள வாசகர்களுக்காக எழுதப் படுகின்றன.
பிறழ் புரிதலை அருள்கூர்ந்து தவிர்க்கவும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக