ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

இந்தியை எதிர்ப்பவன் முழு முட்டாள்!
தற்குறி முண்டங்களே இந்தியை எதிர்க்கும்!!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
தலைவர் கலைஞரின்  மறைவை ஒட்டி வடஇந்தியத்
தலைவர்கள் பலரும் செயல் தலைவர் ஸ்டாலின்
அவர்களிடம் துக்கம் விசாரித்தனர். இந்தி ஆங்கிலம்
ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே
பேசக்கூடியவர்கள் அத்தலைவர்கள்.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மமதா பானர்ஜி,
சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ்
யாதவ், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா,
யெச்சூரி, தேஜஸ்வி யாதவ் போன்ற வட
இந்தியத் தலைவர்களின் பேச்சைத் தமிழில்
மொழிபெயர்த்து ஸ்டாலினுக்கு வழங்கியவர்
கனிமொழி.

ஸ்டாலினோடு நிழலாக இருந்து
மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தவர்
கனிமொழி. கனிமொழி இல்லாத நேரத்தில்
தயாநிதி மாறன் ஸ்டாலினுக்கு
மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

மு க அழகிரி மத்திய அமைச்சராக இருந்ததால்
வட இந்தியத் தலைவர்கள் மத்தியில் அவரும்
நன்கு பிரபலம் ஆனவரே.எனவே வட இந்தியத்
தலைவர்கள்  அனைவரும் அழகிரியிடமும்
துக்கம் விசாரிக்க விரும்பினர். ஆனால்
தக்க மொழிபெயர்ப்பாளர்  இல்லாததால்
அழகிரி வட இந்தியத் தலைவர்களைச்
சந்திப்பதைத் தவிர்க்க வேண்டியதாயிற்று.

குறிப்பாக, சரத் பவாரும் எச்சூரியும் அழகிரியைச்
சந்திக்க மிகவும் விரும்பினர். ஆனால் மொழி
தெரியாத காரணத்தால், அழகிரி ஒதுக்குப்
புறமாக நின்று கொண்டு பலரின் பார்வையில்
படாமல் தன்னை மறைத்துக் கொண்டார்.

கலைஞரின் குடும்பத்தில் மூன்றாம்
தலைமுறையில் இந்தக் கஷ்டமெல்லாம்
கிடையாது.குறிப்பாக ஸ்டாலினின் மகள்
செந்தாமரை, மருமகன் சபரீசன் ஆகியோர்
இந்தியில் நல்ல புலமை பெற்றவர்கள்.

ஸ்டாலின் மகள் செந்தாமரை ஸன் ஷைன்
(Sun Shine) என்ற ஆங்கிலப் பெயரில் ஒரு
மெட்ரிகுலேஷன் பள்ளியை நடத்தி
வருகிறார். அங்கு இந்தி  கட்டாயப் பாடம்.

"Anti Hindi is total non sense.Only illiterate people will
oppose Hindi" என்கிறார் செந்தாமரை. இதன்
தமிழ் மொழிபெயர்ப்பு என்ன? அதையே
இக்கட்டுரையின் தலைப்பாக வைத்திருக்கிறேன்.

ஆங்கிலமோ இந்தியோ தெரியாமல், தன்
தந்தையும் பெரியப்பாவும் படுகிற கஷ்டங்களை
இனி யாரும் படக்கூடாது என்ற உன்னத  
நோக்கில் செயல்படும் செந்தாமரை தாம்
நடத்தும் பள்ளியில் இந்தியைக் கட்டாயப்
பாடம் ஆக்கி விட்டார்.

இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட படத்தைப்
பாருங்கள். ராகுல் காந்தியுடன் இந்தியில்
பேசி விளையாடுகின்றன ஸ்டாலினின்
பேரக் குழந்தைகள். இந்தி, ஆங்கிலம், இத்தாலி
ஆகிய மூன்று மொழிகளும் நன்கறிந்த ராகுல்
காந்தியும் இந்தியில் குழந்தைகளிடம்
உரையாடி மகிழ்கிறார். பேரக் குழந்தைகளைப்
பார்த்துப் பூரிப்படைகிறார் செயல் தலைவர்.

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
இந்திச்சொல் கேளா தவர்.
----------------------------------------------------------------------------     
படிப்பு என்பது உடலையும் மனத்தையும்
வருத்தக் கூடியது.

,
இந்தி எதிர்ப்புக் கொள்கை ஏற்படுத்திய
மனத்தடை (mental block) ஒரு காரணம். சரி,
இந்தி போகட்டும். ஆங்கிலத்தை ஏன் கற்றுத்
தொலைக்கவில்லை? அழகிரி ஓடி ஒளிய
வேண்டிய அவசியம் என்ன? எல்லா நேரமும்
கனிமொழியோ தயாநிதியோ ஸ்டாலினுக்கு
மொழிபெயர்க்க முடியுமா?

நாட்டை ஆள வேண்டும் என்று ஆசை
இருக்கும்போது, ஆங்கிலத்தைக் கற்காமல்
முடியுமா? பிரதமர் பதவிக்கு கலைஞரின்
பெயர் அடிபட்டபோது,கலைஞர் என்ன
சொன்னார்? அதற்கு என்ன அர்த்தம்?
ஆங்கிலமோ இந்தியோ தெரியாத தற்குறி
நாடாள முடியாது என்பதுதானே கலைஞர்
சொன்னதன் அர்த்தம்!


ஈரேழு பதினாலு லோகம் அழிந்தாலும்
இந்தி ஆட்சி மொழியாகக் கூடாது
என்பதே சரி. இங்கு ஆட்சி மொழி பற்றிப்
பேசவில்லை. அகில இந்திய அரசியலில்
ஈடுபடுவோருக்கு ஆங்கிலம் அல்லது இந்தி
தெரிந்திருக்க வேண்டும். This is hard reality.


      
மார்க்சிஸ்டுகளின் தெளிவான
மொழிக்கொள்கை!
---------------------------------------------------
இந்தியா போன்று பல மொழிகள் பேசப்பட்ட
நாடு ரஷ்யா எனப்படும் சோவியத் ஒன்றியம்.
அங்கு லெனின் எல்லா மொழிகளுக்கும்
சமத்துவம் அளித்தார். பின்தங்கிய
மொழிகளை வளர்த்தார். எந்த ஒரு மொழி
பேசும் பிரதேசத்தினரும் பிரிந்து போக
விரும்பினால், பிரிந்து போகலாம் என்ற
உரிமையையும் அளித்தார்.

மொழி வெறுப்புக்கு மார்க்சியத்தில் இடமில்லை.
விரும்பும் எந்த மொழியையும் அரசு செலவில்
மக்கள் இலவசமாகக் கற்கலாம் என்றார்
லெனின். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.



மார்க்சிய மொழிக்கொள்கை பற்றி ஒரு வெண்பா!
லெனினே மீண்டு வா!
------------------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்ச்சென்னி 
------------------------------------------------------
எம்மொழியும் கற்கலாம் பல்கலைப் பாடத்தை
எம்மொழி மூலமும் கற்றுத் தெளியலாம்
எம்மொழியும்  ஒன்றென்ற வேந்தே உயர்லெனினே
எம்மொழி வாழமீண்டு வா.

லெனின் மீண்டும் பிறந்து வந்து
தமிழகத்தை ஆண்டால் மட்டுமே
தமிழ் மீண்டெழும் என்ற கருத்தமைந்த
வெண்பா இது.

வாசகர்களுக்கு இரு கேள்விகள்:
1) இப்பாடலில் பயிலும் அணி யாது?

2) இப்பாடலை அலகிட்டு வாய்பாடு கூறி
சீர் தளை எடுத்து எழுதுக.

வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.

உதவிக்குறிப்பு:
வெண்பாவின் முதலடியைக் கருதுக.

எம்மொழியும் கற்கலாம் பல்கலைப் பாடத்தை

எம்மொழியும்-- எம்+மொழி+யும் 
நேர் நிரை நேர் = கூவிளங்காய்.

கற்கலாம்-- கற்+கலாம் நேர் நிரை கூவிளம் 

பல்கலைப்-- பல்+கலைப்  நேர் நிரை கூவிளம் 

பாடத்தை--பா+டத்+தை நேர் நேர் நேர் தேமாங்காய்.

எம்மொழியும் கற்கலாம்... காய் முன் நேர் 
வெண்சீர் வெண்டளை.

கற்கலாம் பல்கலைப்... விளம் முன் நேர் 
இயற்சீர் வெண்டளை.

பல்கலைப் பாடத்தை... விளம் முன் நேர் 
இயற்சீர் வெண்டளை

குறிப்பு: தமிழார்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் 
தமிழ்ப் புலவர்கள் ஆகியோரிடம் இருந்து 
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
******************************************************
.           



.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக