திங்கள், 10 செப்டம்பர், 2018

எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காத ஒரு கிராமத்து
ரயில் நிலையத்தின் சிமெண்டு பெஞ்சு!
------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------
முத்தழகிக்கு பேதி
நிற்க மாட்டேன் என்கிறது
பீய்ச்சி அடிக்கிறது
அந்தச் சிறிய ஊரின்
ரயில் நிலைய சிமிண்டு பெஞ்சில்
37 மல்லிகைப் பூக்கள்
உதிர்ந்து கிடக்கின்றன.

யாக்ஞ வல்கியரைப் படித்தால்
பேதி நிற்கும் என்கிறார் அறிஞர்-1

பேதி என்பதே ஒரு பெருங்கதையாடல்
என்கிறார் அறிஞர்-2

அறிஞர்-1 முன்புராதனத்துவ அறிஞர்
அறிஞர்-2 பின் நவீனத்துவ அறிஞர்

மிஷேல் ஃபூக்கோ
தனக்கு வந்த எய்ட்ஸ் நோயை
மற்றவர்க்குப் பரிசளித்தது போல
முத்தழகியும்
தனக்கு வந்த பேதியை
எவருக்கும் தானம் கொடுத்து விடக்கூடும்

அபௌட் டர்ன் என்கிறார்
டிரில் மாஸ்டர்

முத்தழகி மூக்குத்தி அணிந்திருக்கிறாள்
ஒரு குறிப்பிட்ட கோணத்தில்
அவள் திரும்பும் போதெல்லாம்
டோட்டல் இன்டெர்னல் ரெஃப்லக்சன் நிகழ்ந்து
மூக்குத்தி ஜொலிக்கிறது

அந்த ரயில் நிலைய சிமிண்டு பெஞ்சில்
உதிர்ந்து கிடக்கும் மல்லிகைப் பூக்களின்
எண்ணிக்கை தற்போது 41.
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக